Major Changes In Rules From May 1 2025: பொதுவாகவே புதிய மாதம் தொடங்கும் போது புதிய விதிகள் அமலுக்கு வரும். மாதத்திலும் பல புதிய விதிகள் அமலுக்கு வரவுள்ளன. இவற்றின் தாக்கம் கண்டிப்பாக அன்றாட வாழ்வில் இருக்கும். எல்பிஜி சிலிண்டர் விலை, ஏடிஎம் பரிவர்த்தனைகள், ரயில் டிக்கெட் முன்பதிவு விதிகள் ஆகியவை இதில் அடங்கும்.

Major Changes In Rules From May 1 2025: பொதுவாகவே புதிய மாதம் தொடங்கும் போது புதிய விதிகள் அமலுக்கு வரும். மாதத்திலும் பல புதிய விதிகள் அமலுக்கு வரவுள்ளன. இவற்றின் தாக்கம் கண்டிப்பாக அன்றாட வாழ்வில் இருக்கும். எல்பிஜி சிலிண்டர் விலை, ஏடிஎம் பரிவர்த்தனைகள், ரயில் டிக்கெட் முன்பதிவு விதிகள் ஆகியவை இதில் அடங்கும்.
மே 1 முதல் புதிய விதிகள்
மே 1, 2025 முதல் சில புதிய மாற்றங்கள் நடக்கவுள்ளன, இந்த மாற்றங்கள் சாமானியர்களின் செலவுகளை நேரடியாகப் பாதிக்கும். எல்பிஜி சிலிண்டர் விலை, ஏடிஎம் பரிவர்த்தனைகள் போன்ற பல விதிகளில் மாற்றங்கள் இருக்கலாம் இந்த மாற்றங்கள் சாமானிய மக்களின் வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றன. எனவே மே 1 அன்று முக்கிய விதிகளில் என்னென்ன மாற்றங்கள் நிகழக்கூடும் என்பதை இந்த பதிவில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
ஏடிஎம் பணம்
ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் மே 1, 2025 முதல் அமலுக்கு வர உள்ளன. ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுத்தல், டெபாசிட் செய்தல் அல்லது இருப்பைச் சரிபார்த்தல் போன்றவற்றுக்கு விதிக்கப்பட உள்ள கட்டணங்களை அனைவரும் அறிந்திருக்க வேண்டும். மே 1 முதல், இலவச வரம்பை மீறினால், ஒவ்வொரு ஏடிஎம் பரிவர்த்தனைக்கும் நீங்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஒரு பரிவர்த்தனைக்கு ரொக்கம் எடுப்பதற்கான கட்டணம் ₹17 லிருந்து ₹19 ஆக அதிகரிக்கும். இருப்பு சரிபார்ப்பு கட்டணம் இப்போது ஒரு பரிவர்த்தனைக்கு ₹ 6 லிருந்து ₹ 7 ஆக அதிகரிக்கும்.
ரயில் டிக்கெட் முன்பதிவு
மே 1, 2025 முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு செயல்பாட்டில் பெரிய மாற்றம் ஏற்பட உள்ளது. ரயில்வேயின் புதிய விதி டிக்கெட் முன்பதிவு, கட்டணம், பணத்தைத் திரும்பப் பெறும் செயல்முறை போன்றவற்றைப் பாதிக்கும். மே 1 முதல், ஸ்லீப்பர் அல்லது ஏசி பெட்டிகளில் காத்திருப்பு டிக்கெட்டுகள் செல்லுபடியாகாது. பொதுப் பெட்டிகளில் மட்டுமே காத்திருப்பு டிக்கெட்டில் பயணம் செய்ய முடியும். முன்பதிவு காலம் 120 நாட்களில் இருந்து 60 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. மே மாதத்திலிருந்து ரயில்வே மூன்று முக்கிய கட்டணங்களையும் அதிகரிக்கக்கூடும்.
எரிவாயு சிலிண்டர் விலை
சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல்- டீசல் விலை, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஆகியவற்றை எண்ணெய் நிறுவனங்கள் மாதம்தோறும் நிர்ணயம் செய்கின்றன. அத்தகைய சூழ்நிலையில், இந்த முறையும் மே 1, 2025 அன்று, எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ படலாம். சிலிண்டர் விலையில் ஏற்படும் மாற்றம் சாமானிய மக்களின் பையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். முன்னதாக, கடந்த 2024 மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.100 என்ற அளவில் குறைக்கப்பட்டது. ஆணால், ஏப்ரல் முதல் வாரத்தில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
FD வட்டி விகிதம்
மே 1, 2025 முதல் FD மற்றும் சேமிப்புக் கணக்கின் விதிகளில் சில முக்கியமான மாற்றங்கள் இருக்கலாம். இந்த மாற்றங்களில் வட்டி விகிதங்களும் அடங்கும். ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்களின்படி, ஏடிஎம் பணம் எடுக்கும் கட்டணங்கள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது, இருப்பினும், எஃப்.டி மற்றும் சேமிப்புக் கணக்கிற்கான வட்டி விகித மாற்றங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
11 மாநிலங்களில் RRBs லாப வரம்பு அமல்
இப்போது மே 1, 2025 முதல், பிராந்திய கிராமப்புற வங்கிகள் (RRBs) இணைப்புத் திட்டம் நாட்டின் 11 மாநிலங்களில் "ஒரு மாநிலம், ஒரு RRB" விதியின் கீழ் செயல்படுத்தப்படலாம். இது செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதையும் செலவுகளைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆந்திரப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், பீகார், குஜராத், ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான் ஆகிய 11 மாநிலங்கள் இதில் அடங்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ