சில ஸ்பெஷல் FD திட்டங்கள்... மார்ச் 31 வரை தான் சான்ஸ்... இன்றே முதலீடு செய்யுங்க

பங்குச் சந்தையில் ஏற்பட்ட பெரும் சரிவு முதலீட்டாளர்களுக்கு எஃப்டி, பிபிஎஃப் போன்ற நிலையான வருமானத்தைத் தரும் திட்டங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 8, 2025, 05:25 PM IST
  • அதிக வட்டி விகிதம் கொண்ட சில சிறப்பு FD திட்டங்கள்
  • எஃப்டியில் முதலீடு செய்வதற்கான கடைசி தேதி மார்ச் 31, 2025 ஆகும்.
  • அமிர்த கலசம் சிறப்பு FD திட்டத்தின் முதலீட்டு காலம் “400 நாட்கள்”
சில ஸ்பெஷல் FD திட்டங்கள்... மார்ச் 31 வரை தான் சான்ஸ்... இன்றே முதலீடு செய்யுங்க

பங்குச் சந்தையில் ஏற்பட்ட பெரும் சரிவு முதலீட்டாளர்களுக்கு எஃப்டி, பிபிஎஃப் போன்ற நிலையான வருமானத்தைத் தரும் திட்டங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளது. ரிஸ்க் இல்லாமல் நிலையான வருமானத்தை பெற உதவும் திட்டங்களில் வங்கியின் நிலையான வைப்புத் திட்டங்கள் என்னும் FD மிகவும் பிரபலமானவை. அந்த வகையில், இன்று 5 சிறப்பு FD திட்டங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். இந்தத் திட்டங்களில் முதலீடு செய்வதற்கான கடைசி வாய்ப்பு 31 மார்ச் 2025 வரை தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Add Zee News as a Preferred Source

அதிக வட்டி விகிதம் கொண்ட சில சிறப்பு FD திட்டங்கள்

ஏப்ரலில் நடைபெறவிருக்கும் ரிசர்வ் வங்கி கொள்கையில் ரெப்போ விகிதத்தை மீண்டும் குறைக்கும் வாய்ப்பு உள்ளதால், இதற்குப் பிறகு வங்கிகள் இந்த சிறப்புத் திட்டங்களை நிறுத்துவதற்கான பெரும் வாய்ப்பு உள்ளது. அதன்பிறகு, இந்த எஃப்டிகளுக்கு அதிக வட்டி கிடைக்காது. இந்நிலையில், அதிக வட்டி விகிதம் கொண்ட சில சிறப்பு FD திட்டங்களில் இன்றே முதலீடு செய்து விடுவது நல்லது. அதில் கிடைக்கும் வட்டி விகிதங்கள் மற்றும் பிற விபரங்களைப் அறிந்து கொள்வோம்.

எஸ்பிஐ அம்ரித் விருஷ்டி (SBI Amrit Vrishti)

SBI அம்ரித் விருஷ்டி திட்டம் "444 நாட்கள்" முதலீட்டு காலம் கொண்ட சிறப்பு FD திட்டமாகும். தற்போது பொது வாடிக்கையாளர்களுக்கு 7.25% வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு இந்த FD திட்டத்தில் 7.75% வட்டி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டதித்தில் 2025 மார்ச் 31ம் தேதி வரை முதலீடு செய்யலாம்.

எஸ்பிஐ அம்ரித் கலாஷ் (SBI Amrit Kalas)

SBI அம்ரித் கலாஷ் அதாவது அமிர்த கலசம் சிறப்பு FD திட்டத்தின் முதலீட்டு காலம் “400 நாட்கள்”. இந்த சிறப்பு FD திட்டத்தில், பொது வாடிக்கையாளர்களுக்கு 7.10% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு 7.60% வட்டி கிடைக்கும். இந்தத் திட்டதித்தில் 2025 மார்ச் 31ம் தேதி வரை முதலீடு செய்யலாம்.

இந்தியன் வங்கி சிறப்பு FD (Indian Bank Special FD)

இந்தியன் வங்கி IND சுப்ரீம் 300 நாட்கள் மற்றும் IND சூப்பர் 400 நாட்கள் என்ற சிறப்பு நிலையான வைப்புத் திட்டத்தை (FD) செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் சூப்பர் மூத்த குடிமக்களுக்கு 8.05% வரை வட்டி விகிதங்கள் வழங்கப்படுகின்றன. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான கடைசி தேதி மார்ச் 31, 2025 ஆகும்.

மேலும் படிக்க | CGHS முக்கிய செய்தி: புதிய வழிகாட்டுதல்கள்.... இந்த ஓய்வூதியதாரர்களுக்கு இனி இந்த வசதி கிடைக்காது

ஐடிபிஐ வங்கி- உத்சவ் காலபிள் FD (IDBI Bank- Utsav Callable FD)

IDBI வங்கியின் Utsav Callable FD என்பது ஒரு சிறப்பு FD திட்டமாகும். இதன் வட்டி விகிதங்கள் முதிர்வு காலத்தைப் பொறுத்து மாறுபடும். இந்த சிறப்பு எஃப்டியில், 300 நாட்கள் கொண்ட உத்சவ் காலபிள் நிலையான வைப்புத்தொகையின் வட்டி விகிதம், பொது வாடிக்கையாளர்களுக்கு 7.05%, மூத்த குடிமக்களுக்கு 7.55% மற்றும் மிகவும் மூத்த குடிமக்களுக்கு 7.55% என்ற அளவில் உள்ளது. IDBI வங்கியின் Utsav Callable Fixed Deposit திட்டங்களில் 700 நாட்கள் கால அவகாசம் கொண்ட திட்டத்திற்கு, பொது வாடிக்கையாளர்களுக்கு 7.20%, மூத்த குடிமக்களுக்கு 7.70% மற்றும் சூப்பர் மூத்த குடிமக்களுக்கு 7.85% என்ற அளவில் வட்டி விகிதங்கள் வழங்கப்படுகிறது, உத்சவ் எஃப்டியில் முதலீடு செய்வதற்கான கடைசி தேதி மார்ச் 31, 2025 ஆகும். 

மேலும் படிக்க | குஷியில் மத்திய அரசு ஊழியர்கள்: ஹோலிக்கு முன் 3 குட் நியூஸ் காத்திருக்கு.. வரும் வாரம் அட்டகாசம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News