இந்திய ரயில்வேயில் அதிக கோடிகளை குவிக்கும் ரயில் எது தெரியுமா? வந்தே பாரத் கிடையாது!

Indian Railways: கடந்த நவம்பர் மாதம் இந்திய ரயில்வேயில் அதிக வருமானத்தை குவித்த ரயில் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Dec 11, 2024, 11:55 AM IST
  • வந்தே பாரத் ரயிலுக்கு முதலிடம் இல்லை.
  • ராஜ்தானி, சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலும் முதலிடம் இல்லை.
  • புதுடெல்லிக்கு செல்லும் ரயில் முதலிடம் பிடித்திருக்கிறது.
இந்திய ரயில்வேயில் அதிக கோடிகளை குவிக்கும் ரயில் எது தெரியுமா? வந்தே பாரத் கிடையாது! title=

Top Earning Train in Indian Railways: இந்திய ரயில்வே என்பது லட்சக்கணக்கான மக்களுக்கு தினமும் சிறப்பான ரயில் சேவையை வழங்கி வருகிறது. நாடு முழுவதும் வெவ்வேறு வகையான ரயில்கள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், சதாப்தி எக்ஸ்பிரஸ், தேஜாஸ் எக்ஸ்பிரஸ், ராஜ்தானி எக்ஸ்பிரஸ் உள்ளிட்டவை நாடு முழுவதும் பல்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டை பொறுத்தவரை கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ், வைகை எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ் என பல முக்கிய ரயில்களும் தினந்தினம் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்திய பொருளாதாரத்தில் இந்திய ரயில்வே (Indian Railways) பெரும் பங்கை வகிக்கிறது எனலாம். மேலும், ரயில்வே துறைக்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு வருடாவருடம் அதன் பட்ஜெட்டிலேயே அறிவிக்கிறது. முன்பு, ரயில்வே பட்ஜெட் தனியாகவும் தாக்கல் செய்யப்பட்டதையும் கவனிக்க வேண்டும்.

அதிக வருமானத்தை குவித்த ரயில் எது தெரியுமா?

இது ஒருபுறம் இருக்க, இந்திய ரயில்வே துறைக்கு எந்த ரயில் அதிக வருமானத்தை தருகிறது என நீங்கள் என்றாவது யோசித்திருக்கிறீர்களா...? இல்லையென்றாலும், ஆம் என்றாலும் அதற்கான விடையை இங்கு விரிவாக நீங்கள் தெரிந்துகொள்ளலாம். பலரும் நினைப்பது போல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், தேஜாஸ் எக்ஸ்பிரஸ், ராஜ்தானி எக்ஸ்பிரஸ் அதிக வருமானத்தை பெறவில்லை. நவம்பர் மாதம் அதிக வருமானத்தை குவித்த ரயில் (Top Earning Train in November 2024) எது என்பது இங்கு காணலாம்.

மேலும் படிக்க | தட்கல் டிக்கெட் புக்கிங் தொடர்பான நேரத்தில் மாற்றம்? இந்திய ரயில்வே அறிவிப்பு!

உத்தர பிரதேசத்தின் பிரக்யராஜ் நகரில் இருந்து புது டெல்லி வரை இயக்கப்படும் பிரக்யராஜ் எக்ஸ்பிரஸ் (ரயில் எண் - 12417/12418) இந்த பண்டிகை காலத்தில் அதன் வருமானத்தில் பெரிய சாதனையை படைத்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் பிரக்யராஜ் எக்ஸ்பிரஸ் சுமார் ரூ.6.6 கோடி வருமானம் ஈட்டி சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மற்ற சில ரயில்களின் வருமானம்

பிரக்யராஜ் - புதுடெல்லிக்கு சுமார் 43 ஆயிரத்து 388 பயணிகளும், புதுடெல்லி - பிரக்யராஜ் நகரத்திற்கு சுமார் 47 ஆயிரத்து 40 பயணிகளும் பயணித்துள்ளனர். இதில் வழக்கமான பயணிகள் மற்றும் விஐபி பயணிகள் இரண்டு தரப்பையும் இந்த ரயில் கவர்ந்துள்ளது என கூறப்படுகிறது. புதுடெல்லியில் இருந்து தினமும் காலை 10 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 7 மணிக்கு சென்றடையும்.

கடந்த நவம்பர் மாத்தில் பிரக்யராஜ் எக்ஸ்பிரஸ் மட்டுமின்றி இந்த வேறு சில எக்ஸ்பிரஸ் ரயில்களும் வருமானத்தை குவித்துள்ளன. பிரக்யராஜ் ஹம்ஸாஃபர் எக்ஸ்பிரஸ் (ரயில் எண் - 12275/12276) சுமார் ரூ.5.2 கோடி வருமானம் ஈட்டி உள்ளது, இதில் நவம்பரில் மட்டும் 55 ஆயிரத்து 481 பேர் பயணித்துள்ளனர். அதேநேரத்தில், ஆனந்த் விஹார் டெர்மினல் ஹம்ஸாஃபர் எக்ஸ்பிரஸ் (ரயில் எண் - 22437/22438) ரூ.3.7 கோடி வருமானத்தை ஈட்டியுள்ளது, அதில் 41 ஆயிரத்து 797 பயணிகள் பயணித்துள்ளனர்.

அதேபோல், புதுடெல்லி - வாரணாசி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (ரயில் எண் - 22435/22436) ரூ.2.2 கோடி வருமானத்தை ஈட்டியிருக்கிறது. அதில் 16 ஆயிரத்து 899 பயணிகள் பயணித்துள்ளனர். அதே ரயில் வாரணாசியில் இருந்து புது டெல்லிக்கு வரும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரூ.2.4 கோடியை ஈட்டியுள்ளது. 16 ஆயிரத்து 823 பயணிகள் பயணித்துள்ளனர். அக். 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை இருந்ததையொட்டி பலரும் நவம்பரின் தொடக்கத்தில் பல நகரங்களுக்கு பயணித்திருப்பார்கள். இதன் காரணமாக பல ரயில்கள் வருமானத்தை அதிகமாக்கி உள்ளன.

மேலும் படிக்க | ரயில் டிக்கெட்டை வேறொருவருக்கு மாற்றலாம்... தேதியையும் மாற்றலாம்... இதோ வழிமுறை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News