UPI தெரியும்! அதென்ன UPI லைட்? இரண்டுக்குமான வேறுபாடுகள்!
இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் யூபிஐ லைட்டை அறிமுகப்படுத்தினார், இதன் மூலம் குறைந்த அளவு பண பரிவர்த்தனையை வேகமாகவும் எளிமையாகவும் செய்துகொள்ள முடியும்.
நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவால் உருவாக்கப்பட்ட யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ்(யூபிஐ) வங்கிக் கணக்குகளுக்கு இடையே பணத்தை மாற்ற உதவுகிறது. ரிசர்வ் வங்கியானது இந்தியாவில் பண அடிப்படையிலான பரிவர்த்தனைகளைக் குறைக்க யூபிஐ-யை அறிமுகப்படுத்தியது, ஆனால் இது ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு மட்டுமே கிடைத்ததால், சாதாரண மொபைல் வைத்திருப்பவர்களுக்கும் கிடைக்கும் வகையில் ரிசர்வ் வங்கி யூபிஐ123-யை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் ஸ்கேன் செய்து பணம் செலுத்த முடியாதே தவிர மற்றபடி அனைத்து விதமான பரிவர்த்தனைகளையும் செய்துகொள்ள முடியும். கடந்த செப்டம்பர் 20, 2022 அன்று இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் யூபிஐ லைட்டை அறிமுகப்படுத்தினார், இதன் மூலம் குறைந்த அளவு பண பரிவர்த்தனையை வேகமாகவும் எளிமையாகவும் செய்துகொள்ள முடியும்.
மேலும் படிக்க | புதிய கணக்கீட்டின் மூலம் இபிஎஸ் ஓய்வூதியம் பன்மடங்கு உயரும்
யூபிஐ லைட்டில் வாடிக்கையாளர்கள் பின் எதையும் உள்ளிட்ட தேவையில்லை, குறைந்த அளவு தொகையான ரூ.200 வரை இதில் விரைவாக பரிவர்த்தனை செய்துகொள்ளலாம். யூபிஐ லைட் என்பது "ஆன்-டிவைஸ் வாலெட்" ஆகும், இதனை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் முதலில் தங்கள் வங்கிக் கணக்குகளிலிருந்து ஆப்ஸின் வாலெட்டில் பணத்தை செலுத்த வேண்டும். இணைய வசதி இல்லாமல் கூட உங்களால் இதில் பணத்தை பரிமாறிக்கொள்ள முடியும். இனிவரும் காலங்களில் யூபிஐ லைட்டில் டெபிட் மற்றும் கிரெடிட் இரண்டையும் ஆஃப்லைனிலேயே செய்துகொள்ள வசதி வழங்கப்படா இருப்பதாக கூறப்படுகிறது.
உங்கள் யூபிஐ லைட் மூலம் அதிகபட்சமாக ரூ.200 வரை டிரான்ஸாக்ஷன் செய்துகொள்ளலாம் மற்றும் அதிகபட்சமாக உங்கள் யூபிஐ லைட் கணக்கில் அதிகபட்சமாக ரூ.2000 வரை இருப்பு வைத்துகொள்ளலாம். யூபிஐ லைட்டை உங்கள் மொபைலில் டவுன்லோடு செய்த பிறகு அதில் லாக் இன் செய்து, உங்கள் டிவைஸின் பயோமெட்ரிக் அல்லது பேட்டர்ன் சரிபார்ப்புக்குத் தேவையான தகவலை வழங்குவதன் மூலம் நீங்கள் யூபிஐ லைட்டை பயன்படுத்தி கொள்ள முடியும்.
மேலும் படிக்க | சுங்கச்சாவடிகளை நீக்க அரசு முடிவு! ஃபாஸ்டேக் முறையும் ரத்து!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ