)
Pensioners Latest News: மாத ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரரா நீங்கள்? உங்கள் வீட்டில் ஓய்வூதியதாரர்கள் எவரேனும் உள்ளார்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக முக்கியமானதாக இருக்கும். இந்த மாத, அதாவது நவம்பர் மாத இறுதிக்குள் அனைத்து ஓய்வூதியதாரர்களும், தங்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
60 முதல் 80 வயதுடைய ஓய்வூதியதாரர்கள் அனைவரும் நவம்பர் 30, 2025 க்குள் தங்கள் ஜீவன் பிரமான் சான்றிதழை (டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்) சமர்ப்பிக்க வெண்டும். இது ஓய்வூதியம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதோடு, ஓய்வூதியதாரர்கள் உயிருடன் இருப்பதற்கான சான்றையும் அளிக்கின்றது.
டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பிக்க இனி ஓய்வூதியதாரர்கள் வங்கிகளுக்கோ அல்லது ஓய்வூதியம் வினியோகிக்கும் அலுவலகங்களுக்கோ சென்று நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த முழு செயல்முறையும் எளிதாகிவிட்டது. முக அங்கீகாரத்தின் மூலம், ஓய்வூதியதாரர்கள் தங்கள் வீட்டிலிருந்தே சில நிமிடங்களில் ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம்.
ஜீவன் பிரமான் சான்றிதழ் என்பது ஆதார் அடிப்படையிலான டிஜிட்டல் ஆயுள் சான்றிதழாகும். இது ஓய்வூதியதாரர்கள் தாங்கள் உயிருடன் இருப்பதை நிரூபிக்க உதவும். மேலும் தடையின்று ஓய்வூதியதாரர்கள் தொடர்ந்து ஓய்வூதியம் பெறுவதையும் இது உறுதி செய்யவும். இதை ஒவ்வொரு ஆண்டும் சமர்ப்பிக்க வேண்டும். இந்த சான்றிதழ் பயோமெட்ரிக் முறையை அடிப்படையாகக் கொண்டது. இது உங்கள் ஆதார் எண் மற்றும் உங்கள் கைரேகை அல்லது முக அங்கீகாரத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது.
ஓய்வூதியதாரர்கள் இப்போது முக அங்கீகாரம் மூலம் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்களை எளிதாக உருவாக்க முடியும் என்று EPFO சமீபத்தில் அறிவித்தது. "ஓய்வூதியதாரர்கள் இப்போது தங்கள் ஸ்மார்ட்போன்களிலிருந்து முக அங்கீகாரம் மூலம் தங்கள் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்களை சமர்ப்பிக்கலாம். அவர்கள் வங்கி அல்லது அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை." என EPFO கூறியது.
முக அங்கீகாரத்தைப் பயன்படுத்தி ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிப்பது எப்படி? முக அங்கீகாரத்தைப் பயன்படுத்தி DLC ஐச் சமர்ப்பிப்பதற்கான எளிய வழிமுறைகளை இங்கே காணலாம்.
ஸ்டெப் 1: குறைந்தபட்சம் 5MP முன்பக்க கேமரா மற்றும் இணைய இணைப்புடன் உள்ள Android ஸ்மார்ட்போனை பயன்படுத்தவும்.
ஸ்டெப் 2: உங்கள் ஆதார் எண்ணைத் தயாராக வைத்திருங்கள். இது ஓய்வூதிய விநியோக ஆணையத்தில் (PDA) (அதாவது உங்கள் வங்கி அல்லது தபால் அலுவலகம்) பதிவுசெய்யப்பட்ட அதே எண்ணாக இருக்க வேண்டும்.
ஸ்டெப் 3: Google Play Store இலிருந்து இரண்டு செயலிகளைப் பதிவிறக்கம் செய்யவும்: Aadhaar Face RD செயலி மற்றும் Jeevan Pramaan Face செயலி.
ஸ்டெப் 4: முதலில், ஆபரேட்டர் அங்கீகாரத்தை முடித்து, செயலியை இயக்கும் நபரின் முகத்தை ஸ்கேன் செய்யவும். ஓய்வூதியதாரர்கள் ஆபரேட்டர்களாகவும் செயல்படலாம். அல்லது அவர்களுக்காக பிறரும் ஆபரேடராக செயல்படலாம்.
ஸ்டெப் 5: இப்போது, செயலியில் ஓய்வூதியதாரரின் முழுமையான தகவலை உள்ளிடவும். எடுத்துக்காட்டாக, பெயர், ஆதார், PPO எண் போன்றவை.
ஸ்டெப் 6: உங்கள் ஸ்மார்ட்போனின் முன் கேமராவைப் பயன்படுத்தி உங்கள் தெளிவான புகைப்படத்தை எடுத்து சமர்ப்பிக்கவும். பின்னர் ஜீவன் பிரமானைப் பதிவிறக்குவதற்கான இணைப்புடன் ஒரு SMS உங்களுக்கு வரும்.
டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை உருவாக்க தேவையான தகவல்கள்
டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை (DLC) உருவாக்க, ஓய்வூதியதாரர் பின்வரும் தகவல்களை செயலியில் உள்ளிட வேண்டும்:
ஆதார் எண்
பெயர்
மொபைல் எண்
PPO எண்
ஓய்வூதியக் கணக்கு எண்
வங்கி விவரங்கள்
ஓய்வூதிய ஒப்புதல் ஆணையத்தின் பெயர்
ஓய்வூதிய விநியோக ஆணையத் தகவல்
பயோமெட்ரிக் (கைரேகை/கருவிழி) அல்லது முகத் தரவு
ஏதேனும் தகவல் தவறாக உள்ளிடப்பட்டால், DLC நிராகரிக்கப்படலாம்.
ஆயுள் சான்றிதழின் செல்லுபடியாகும் தன்மை ஓய்வூதியம் வழங்கும் அதிகாரத்தின் விதிகளைப் பொறுத்தது. ஆயுள் சான்றிதழ் காலாவதியானதும், ஒரு புதிய டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை மீண்டும் உருவாக்க வேண்டும்.
உங்கள் ஆதார் எண் இன்னும் உருவாக்கப்படவில்லை என்றால், உங்கள் நகரத்தில் உள்ள அருகிலுள்ள ஆதார் பதிவு மையத்திற்கு சென்று அதைப் பதிவு செய்யலாம். நிரந்தர ஆதார் மையங்களின் முழுமையான பட்டியல் UIDAI இணையதளத்தில் உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ