டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் நிராகரிக்கப்படால் ஓய்வூதியதாரர்கள் என்ன செய்ய வேண்டும்? விவரம் இதோ

Life Certificate for Pensioners: ஆயுள் சான்றிதழ் நிராகரிக்கப்பட்டால் ஓய்வூதியதாரர்கள் என்ன செய்ய வேண்டும்? ஜீவன் பிரமான் போர்டலில் உள்ள தகவல்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 15, 2025, 01:08 PM IST
  • ஜீவன் பிரமான் என்றால் என்ன?
  • ஆயுள் சான்றிதழ் நிராகரிக்கப்பட்டால் ஓய்வூதியதாரர்கள் என்ன செய்ய வேண்டும்?
  • வாழ்க்கைச் சான்றிதழ் ஏன் நிராகரிக்கப்படுகிறது?
டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் நிராகரிக்கப்படால் ஓய்வூதியதாரர்கள் என்ன செய்ய வேண்டும்? விவரம் இதோ

Pensioners Latest News: இந்தியா முழுவதும் உள்ள ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.  சிலர் இந்த பணியை வெற்றிகரமாக செய்து முடித்துவிட்ட நிலையில், சிலருக்கு இன்னும் இது நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், சில ஓய்வூதியதாரர்களுக்கு மொபைலில் ஜீவன் பிரமான் அல்லது டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் நிராகரிக்கப்பட்டதாக சமீபத்தில் செய்திகள் வருகின்றன. அப்படி ஒரு செய்தி வந்தால் என்ன செய்வது? இந்த பதிவில் இதற்கான பதிலை காணலாம்.

Add Zee News as a Preferred Source

Life Certificate: வாழ்க்கைச் சான்றிதழ் ஏன் நிராகரிக்கப்படுகிறது

வாழ்க்கைச் சான்றிதழ் நிராகரிக்கப்படுவதற்கான முக்கிய காரணம், DLC உருவாக்கத்தின் போது வழங்கப்பட்ட விவரங்களுக்கும் வங்கி அல்லது தபால் அலுவலகம் போன்ற உங்கள் ஓய்வூதிய விநியோக நிறுவனம் (PDA) வைத்திருக்கும் பதிவுகளுக்கும் இடையிலான தரவு பொருந்தாததுதான் என ஜீவன் பிரமான் போர்ட்டலில் கூறப்பட்டுள்ளது.

DLC: ஆயுள் சான்றிதழ் நிராகரிக்கப்பட்டால் ஓய்வூதியதாரர்கள் என்ன செய்ய வேண்டும்?

ஜீவன் பிரமான் நிராகரிக்கப்பட்டது குறித்து ஓய்வூதியதாரர்களுக்கு மொபைலில் SMS வந்தால் என்ன செய்ய வேண்டும்? இப்படி ஒரு செய்தி வந்தால், ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதிய விநியோக நிறுவனத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும் என ஜீவன் பிரமான் போர்ட்டலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரியான அனைத்து தகவல்களையும், பயோமெட்ரிக்ஸ் தகவல்களையும் வழங்கி ஒரு புதிய ஜீவன் பிரமான் அதாவது பிரமான்-ஐடியை உருவாக்க பரிந்துரைக்கப்படுகிறது.

Jeevan Pramaan: ஜீவன் பிரமான் என்றால் என்ன?

ஜீவன் பிரமான் என்பது ஓய்வூதியதாரர்களுக்கான பயோமெட்ரிக்-இயக்கப்பட்ட டிஜிட்டல் சேவையாகும். மத்திய அரசு, மாநில அரசு அல்லது தனியார் துறை ஓய்வூதியதாரர்களும் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Digital Life Certificate: டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்

ஓய்வூதியதாரர்களுக்கான டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் திட்டம் இந்த சான்றிதழைப் பெறுவதற்கான செயல்முறையை நெறிப்படுத்துவதையும், ஓய்வூதியதாரர்களுக்கு இதை தொந்தரவில்லாத, மிகவும் எளிதான செயல்முறையாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முயற்சியின் மூலம், ஓய்வூதியதாரர் இப்போது ஆயுள் சான்றிதழை நேரடியாகச் சமர்ப்பிக்க விநியோக நிறுவனத்தின் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியதில்லை. மேலும் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை உருவாக்க ஆதார்-இயக்கப்பட்ட பயோமெட்ரிக் அங்கீகார பொறிமுறையைப் பயன்படுத்தலாம்.

டிஜிட்டல் ஆயுள் சான்றிதழின் (DLCs) நன்மைகள்

- விண்டோஸ்/ஆண்ட்ராய்டு அடிப்படையிலான சாதனத்தில் இணையம் மற்றும் STQC சான்றளிக்கப்பட்ட பயோமெட்ரிக் சாதனம் இணைக்கப்பட்டிருந்தால், வீடு உட்பட எங்கிருந்து வேண்டுமானாலும் இதை உருவாக்கலாம்.

- DLC தொடர்பாக ஓய்வூதியதாரர்களுக்கு தானியங்கி SMS அனுப்பப்படும்.

- ஓய்வூதியம் வழங்கும் நிறுவனத்திற்கு DLC தானாக மாற்றப்படும்.

- செயலாக்கத்திற்குப் பிறகு ஓய்வூதியம் வழங்கும் நிறுவனம் SMS அனுப்பும்.

Life certificate submission deadline: ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு என்ன?

ஓய்வூதியதாரர்களுக்கு வருடாந்திர ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நவம்பர் 30 ஆகும். ஓய்வூதியதாரர் உயிருடன் இருப்பதையும், தொடர்ந்து ஓய்வூதியம் பெற தகுதியுடையவர் என்பதையும் உறுதி செய்வதற்கு ஒவ்வொரு ஆண்டும் இதை சமர்ப்பிப்பது அவசியமாகும்.

மேலும் படிக்க | ஆயுள் சான்றிதழ்: ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தே சமர்ப்பிக்கலாம்.... எளிய வழிகள் இதோ

மேலும் படிக்க | Life Certificate: வெளிநாடு வாழ் இந்திய ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்றிதழை எப்படி சமர்ப்பிப்பது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News