)
Diwali Bonus for Railway Employees: தீபாவளி பண்டிகைக்கு முன்பே, இந்திய ரயில்வே ஊழியர்களுக்கு மத்திய அரசு ஒரு சூப்பரான செய்தியை அறிவித்திருக்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை, சுமார் 10.9 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு உற்பத்தித்திறன் சார்ந்த போனஸ் (Productivity-Linked Bonus) வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அறிவிப்பு, ஊழியர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் தீபாவளிக்கு முன்னரே வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதுதான் ரயில்வே ஊழியர்கள் சந்தோஷப்பட வேண்டிய மிகப்பெரிய குட் நியூஸ்.
ரயில்வே சங்கங்கள் சொல்வது என்ன?
போனஸ் அறிவிப்பு ரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தந்தாலும், இதில் ஒரு சின்ன சிக்கல் உள்ளது. ரயில்வே ஊழியர் சங்கங்கள் போனஸ் கணக்கீட்டில் மாற்றம் வேண்டும் என குரல் கொடுத்துள்ளன. இந்திய ரயில்வே ஊழியர் சங்கம் (IREF) மற்றும் அகில இந்திய ரயில்வே ஊழியர் சம்மேளனம் (AIRF) போன்றவை, போனஸ் கணக்கீடு இன்னும் ஆறாவது ஊதியக் குழுவின் (6th Pay Commission) அடிப்படை ஊதியமான ரூ. 7,000-ஐ வைத்து தான் கணக்கிடப்படுகிறது என சுட்டிக்காட்டியுள்ளன.
2016-ல் ஏழாவது ஊதியக் குழு (7th Pay Commission) குறைந்தபட்ச ஊதியத்தை ரூ. 18,000 ஆக உயர்த்திய பிறகு, போனஸ் கணக்கீட்டையும் அதற்கேற்ப மாற்றியமைக்க வேண்டும் என்பது இவர்களின் நீண்ட நாள் கோரிக்கை. பழைய முறையின்படி போனஸ் கணக்கிடுவது, ஊழியர்களுக்கு 'அநியாயம்' என அவர்கள் வாதிடுகிறார்கள். இந்த கோரிக்கைகளை ரயில்வே இந்த ஆண்டே பரிசீலிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த போனஸ் ஏன் இவ்வளவு ஸ்பெஷல்?
இது ஒருபுறம் இருக்க இந்த போனஸ் ஏன் ஸ்பெஷல் என்பதை இங்கே பார்க்கலாம். இந்த போனஸ், வெறும் பணம் மட்டுமல்ல. இது நாட்டின் பொருளாதாரத்திற்கு ஒரு பெரிய பூஸ்ட். அதாவது, ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் கைகளில் திடீரெனப் பணம் சேரும்போது, அதன் தாக்கம் செலவழிக்கும் திறனில் பல மடங்கு எதிரொலிக்கும். இதைத்தான் பொருளாதார நிபுணர்கள் "மல்டிப்ளையர் எஃபெக்ட்" (Multiplier Effect) என்று சொல்கிறார்கள்.
ரயில்வே ஊழியர்கள் இந்தியா முழுவதும் கிராமம் முதல் நகரம் வரை பரவி இருப்பதால், இந்த போனஸ் தொகை நேரடியாக மக்களிடம் செலவழிக்கப்படும். தீபாவளி சமயத்தில், புதிய எலெக்ட்ரானிக்ஸ், ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் எனப் பல பொருட்களை மக்கள் வாங்குவார்கள். இது, வியாபாரிகளுக்கு மிகப்பெரிய லாபத்தையும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு சூப்பர்சார்ஜ்ஜையும் கொடுக்கும். இது சமீபத்தில் அறிவிக்கப்பட்ட GST வரிக்குறைப்புகளுடன் இணைந்து, சந்தையில் பெரும் எழுச்சியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ