)
DA Hike Latest News: லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் அகவிலைப்படி அதிகரிப்பு குறித்த அறிவிப்புக்காக காத்திருக்கிறார்கள். இந்த நல்ல செய்தி தீபாவளிக்கு முன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தீபாவளியில் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு ஒரு மிகப்பெரிய பரிசாக கிடைக்கக்கூடும்.
மத்திய அரசு செப்டம்பர் மாத இறுதியில் அல்லது அக்டோபர் தொடக்கத்தில் அகவிலைப்படி அதிகரிப்பை (DA) அறிவிக்கலாம் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வரவில்லை.
ஜூலை 2025 -க்கான அகவிலைப்படி உயர்வு 7வது ஊதியக்குழுவின் கீழ் கடைசி அகவிலைப்படி திருத்தமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 8வது ஊதியக்குழு எப்போது அமலுக்கு வந்தாலும், அதன் பரிந்துரைகள் ஜனவரி 2026 முதல் பொருந்தும். ஆகையால் 7வது ஊதியக்குழுபின் கடைசி டிஏ உயர்வின் மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன.
காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள்
- தற்போது, மத்திய அரசு ஊழியர்கள் 55 சதவீத அகவிலைப்படியையும் ஓய்வூதியதாரர்கள் 55 சதவிகித அகவிலை நிவாரணத்தையும் பெற்று வருகிறார்கள்.
- ஜூலை முதல் அகவிலைப்படி 3 முதல் 4 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று உறுதியாக கருதப்படுகிறது.
- அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரித்தால், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 59 சதவீதத்தை எட்டும்.
- அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரித்தால், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 59 சதவீதத்தை எட்டும்.
- இந்த அதிகரிப்புக்காக மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஊதிய உயர்வும், சம்பள உயர்வும் எவ்வளவு இருக்கும்?
- அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரித்தால், ரூ.18,000 அடிப்படை சம்பளம் பெறும் ஊழியரின் மாத சம்பளம் ரூ.540 அதிகரிக்கும்.
- ரூ.9,000 ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.270 கூடுதல் பலன் கிடைக்கும்.
- டிஏ மற்றும் டிஆர் 4 சதவீதம் அதிரித்தால் சம்பள உயர்வும் ஓய்வூதிய உயர்வும் இன்னும் அதிகமாக இருக்கும்.
புதிய அகவிலைப்படி விகிதங்கள் ஜூலை 1 முதல் பொருந்தும். ஆகையால் டிஏ உயர்வு எப்போது அறிவிக்கப்பட்டாலும், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஜூலை முதலான டிஏ அரியர் தொகையை பெறுவார்கள். உதாரணமாக, டிஏ உயர்வு செப்டம்பரில் அறிவிக்கப்பட்டால், ஊழியர்களுக்கு ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாத நிலுவைத் தொகை ஒன்றாகக் கிடைக்கும்.
மத்திய அரசு ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படியை மதிப்பாய்வு செய்கிறது. இது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் திருத்தப்படுகின்றது. எனினும், இதன் அறிவிப்பு வழக்கமாக சில மாதங்களுக்குப் பிறகு வெளியிடப்படுகிறது. தொழிலாளர் பணியகத்தால் வெளியிடப்பட்ட தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) தரவின் அடிப்படையில் அரசாங்கம் அகவிலைப்படியில் திருத்தங்களை செய்கிறது. கடந்த 12 மாதங்களின் சராசரி CPI-IW அடிப்படையில் அகவிலைப்படி தீர்மானிக்கப்படுகிறது. மேலும் அகவிலைப்படி திருத்தம் முழுதும் 7வது ஊதியக் குழுவின் விதிகளின்படி செய்யப்படுகின்றது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ