)
EPFO 3.0 Latest News: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, அதன் உறுப்பினர்களுக்காக அவ்வப்போது பல மேம்படுத்தல்களை செய்து செயல்முறைகளை எளிதாக்குகிறது. அந்த வகையில் கூடிய விரைவில் பல வித புதிய அம்சங்களை உள்ளடக்கிய EPFO 3.0 இன்னும் சில வாரங்களில் அமலுக்கு வரும் என் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான அறிவிப்பு வந்தது முதலே பிஎஃப் உறுப்பினர்கள் இதற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இந்த தீபாவளி இபிஎஃப் உறுப்பினர்களுக்கு மிகச்சிறந்த தீபாவளியாக இருக்கவுள்ளது. அவர்களுக்கு இந்த முறை 2 பரிசுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
- EPS Pension: இபிஎஸ் குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தில் ஏற்றம்.
- EPFO 3.0: அமலாக்கம்
EPFO ஆல் நிர்வகிக்கப்படும் ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் இபிஎஃஒ உறுப்பினர்களுக்கு மாத ஓய்வூதிய அளிக்கப்படுகின்றது. இதன் மூலம் அளிக்கப்படும் குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் நீண்ட காலமாக அதிகரிக்கப்படாமல் ரூ.1,000 ஆகவே உள்ளது. இதை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகின்றது.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மண்டவியா தலைமையில் அக்டோபர் 10-11 தேதிகளில் EPFO மத்திய அறங்காவலர் குழுவின் ஒரு பெரிய கூட்டம் நடைபெற உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் இபிஎஸ் குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை அதிகரிப்பது குறித்த முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என நம்பப்படுகின்றது. இது நடந்தால், அது தீபாவளிக்கு முன்னதாக இபிஎஃப் உறுப்பினர்களுக்கு கிடைக்கக்கூடிய மிகப்பெரிய பரிசாக இருக்கும்.
"EPFO 3.0" என்று அழைக்கப்படும் ஒரு பெரிய அமைப்பு மறுசீரமைப்பு விரைவில் அமலுக்கு வரும். இதில் உறுப்பினர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்றாலும், UPI மற்றும் ATM கள் மூலம் பணம் எடுக்கும் வசதி இதன் மிக முக்கிய அம்சமாக பார்கப்படுகின்றது. இந்த புதிய அமைப்பு பணம் எடுக்கும் செயல்முறையை மிகவும் வெளிப்படையானதாகவும் விரைவாகவும் மாற்றும்.
ஜூன் 2025 இல் எதிர்பார்க்கப்பட்ட EPFO 3.0, தொழில்நுட்ப காரணங்கள் மற்றும் சோதனைகள் காரணமாக தாமதமானது. இருப்பினும், நிர்வாக அமைப்பான ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) விரைவில் அதன் டிஜிட்டல் தளமான EPF0 3.0 ஐ அறிமுகப்படுத்தும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மண்டவியா தலைமையிலான கூட்டம் அக்டோபர் 10-11 தேதிகளில் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இது குறித்த முக்கிய சில முடிவுகள் எடுக்கப்படும்.
இப்போதுள்ள செயல்முறை என்ன?
இதுவரை, EPFO உறுப்பினர்கள் க்ளெய்ம்கள் (படிவம்-31, 19, 10C மற்றும் 10D) மற்றும் வங்கி கணக்கு விவரங்களைச் சமர்ப்பித்து ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் பணத்தை எடுக்கலாம். வீடு அல்லது மருத்துவம் உள்ளிட்ட குறிப்பிட்ட காரணங்களுக்காக அவர்கள் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். ஆஃப்லைனில் பணம் எடுப்பதற்கு, அவர்கள் கூட்டு க்ளெய்ம் படிவத்தை நிரப்பி, தேவையான ஆவணங்களை இணைத்து, பிராந்திய EPFO அலுவலகத்தில் அல்லது முதலாளி மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
ATM மற்றும் UPI மூலம் பணம் எடுக்கும் செயல்முறை
EPFO 3.0, PF கணக்குகளை ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) மற்றும் ATM நெட்வொர்க்குகளை ஆதரிக்கும் பரந்த நிதி உள்கட்டமைப்புடன் ஒருங்கிணைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சந்தாதாரர்கள் UPI செயலிகள் அல்லது வங்கி ATMகள் வழியாக நேரடியாக தகுதியான EPF நிதியை எடுக்க அனுமதிக்கும். இதற்கு சேஃப்டி PIN அல்லது ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பு பயன்படுத்தப்படலாம். நிதி பாதுகாப்பு மற்றும் இணக்கத்தை உறுதி செய்வதற்காக பணம் எடுப்பதற்கான வரம்புகள் மற்றும் நிபந்தனைகள் செயல்படுத்தப்படும்.
டிஜிட்டல் முறையில் பணம் எடுப்பதன் நன்மைகள்
புதிய வழியில், டிஜிட்டல் முறைகளில் பணம் எடுக்கும் வசதி பல நன்மைகளை உறுதி செய்வதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். முதலாவதாக, இது காகிதப்பணி மற்றும் நீண்ட காத்திருப்பு காலங்களை நீக்கி வசதியை மேம்படுத்துகிறது. இரண்டாவதாக, இது எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் EPF தொகையை அணுக உதவுகிறது. இந்த வசதி அவசர காலங்களில் முக்கியமானது. மூன்றாவதாக, பெரும்பாலான இந்தியர்கள் பொதுவாகப் பயன்படுத்தும் டிஜிட்டல் நிதி அமைப்புகளுடன் அரசாங்க ஆதரவு சேமிப்புத் திட்டங்களை ஒருங்கிணைப்பதால், டிஜிட்டல் இந்தியா மற்றும் நிதி உள்ளடக்கத்தின் பரந்த பார்வையுடன் இது ஒத்துப்போகும்.
ஆன்லைன் க்ளெய்ம்கள் மற்றும் தடையற்ற அனுபவம்
மேலும், EPFO 3.0, ஆன்லைன் மூலம் க்ளெய்ம்களுக்கு விண்ணப்பிக்கும் செயல்முறையை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது உறுப்பினர்கள் தங்கள் PF க்ளெய்ம் மற்றும் தனிப்பட்ட விவரங்களை சரிசெய்ய EPFO அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய தேவையை நீக்குகிறது. அதனுடன், ஊழியர்கள் தங்கள் PF கணக்குகளின் நிலை, பங்களிப்புகள் மற்றும் பிற விவரங்களை எளிதாகக் கண்காணிப்பது போன்ற EPF சேவைகளைப் பயன்படுத்தும் போது சிறந்த மற்றும் பயனர் நட்பு டிஜிட்டல் இடைமுகத்தைப் பெறுவார்கள்.
இபிஎஃப் உறுப்பினர்களுக்கான அப்டேட் சுருக்கமாக....
- இந்த தீபாவளியில் இபிஎஃப் உறுப்பினர்களுக்கு 2 பெரிய பரிசுகள் காத்திருக்கின்றன.
- இபிஎஸ் ஓய்வுதியம் அக்டோபர் மாத மத்தியில் அதிகரிக்கப்படலாம்.
- EPFO 3.0 அமலாக்கமும் அடுத்த மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ