)
DA Hike Latest News: நாட்டின் சுமார் 1 கோடி மத்திய ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் டிஏ உயர்வு பற்றிய செய்திக்காக காத்திருக்கிறார்கள். ஜூலை 2025 -க்கான அகவிலைப்படி உயர்வு பற்றி கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது 7வது ஊதியக்குழுவின் கடைசி அகவிலைப்படி உயர்வு என்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
- ஜனவரி முதல் ஜூன் வரையிலான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் தரவுகளிலிருந்து தொழிலாளர் அமைச்சகத்தால் இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
- இதன் பலன் 50 லட்சம் ஊழியர்களுக்கும் 67 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் கிடைக்கும்.
- முன்னதாக 2025 ஜனவரியில், மோடி அரசாங்கம் அகவிலைப்படியை 2% அதிகரித்தது.
- இதன் காரணமாக அகவிலைப்படி 53% இலிருந்து 55% ஆக அதிகரித்தது.
- தற்போது ஜூலை 2025 முதல் அகவிலைப்படி 3% அதிகரித்தால் மொத்த அகவிலைப்படி 58% ஆக உயரும்.
- அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு தீபாவளியையொட்டி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அகவிலைப்படி அதிகரிப்பு, தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் உள்ள தொழிலாளர் பணியகத்தால் மாதந்தோறும் வெளியிடப்படும் தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. ஜனவரி முதல் ஜூன் வரையிலான AICPI குறியீட்டு மதிப்பெண் 145 ஆக இருந்தது, இது டிஏ மதிப்பெண்ணை சுமார் 58.18% ஆக அதிகரித்தது. இது 3% அதிகரிப்பைக் குறிக்கிறது.
தீபாவளி பண்டிகையை ஒட்டி, அதாவது அக்டோபர்-நவம்பர் மாதங்களில் அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரண உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தொழிலாளர் அமைச்சகத்தால் ஜனவரி முதல் ஜூன் வரையிலான AICPI IW குறியீடு வெளியிடப்பட்ட பிறகு, இப்போது கோப்பு நிதி அமைச்சகத்திற்கு அனுப்பப்படும். அங்கிருந்து இது அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.
இங்கிருந்து அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன், நிதி அமைச்சகத்தால் உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். அதன் பிறகு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் சலுகைகளைப் பெறத் தொடங்குவார்கள். புதிய விகிதங்கள் ஜூலை 2025 முதல் அமலுக்கு வரும்.
டிஏ உயர்வு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அறிவிப்பு எப்போது வந்தாலும், ஜூலை 2025 முதலான அதிகரிப்பு டிஏ அரியர் தொகையின் வடிவில் கிடைக்கும். அதாவது 2 முதல் 3 மாத நிலுவைத் தொகை நிச்சயமாக அளிக்கப்படும்.
ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இரண்டு முறை அதிகரிக்கப்படுகிறது
- பணவீக்கம் மற்றும் விலைவாசியை சமாளிக்க, மத்திய அரசு ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில், ஆண்டுக்கு இரண்டு முறை மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி / அகவிலைப்படி நிவாரண விகிதங்களை திருத்துகிறது.
- இந்த திருத்தம் அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் அரையாண்டுத் தரவைப் பொறுத்து செய்யப்படுகின்றது.
- ஜனவரி மாத அகவிலைப்படி திருத்தம் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலும், ஜூலை மாத அகவிலைப்படி திருத்தம் ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரையிலும் அமலில் இருக்கும்.
- மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியைக் கணக்கிட ஒரு சூத்திரம் உள்ளது. ஆகவிலைப்படி% = [{கடந்த 12 மாதங்களுக்கான AICPI-IW -இன் சராசரி (அடிப்படை ஆண்டு 2001=100) - 261.42}/261.42×100]
- இந்த சூத்திரம் 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் சம்பளம் பெறும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்குப் பொருந்தும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ