)
Aadhar Card Latest News: இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) வழங்கப்படும் 12 இலக்க தனித்துவ அடையாள எண் ஆதார். இது நாட்டின் மிக முக்கியமான ஆவணங்களின் ஒன்றாக உள்ளது. மக்களின் அடையாள அட்டையாக ஆதார் கார்டு இருந்து வருகிறது. வங்கிக் கணக்கு துவங்குவது முதல் பல்வேறு திட்டங்ளுக்கு ஆதார் கார்டு முக்கிய ஆவணமாக இருந்து வருகிறது. இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டையை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அப்டேட் செய்ய வேண்டும்.
ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை மாற்றவும், ஆதார் கார்டை அப்டேட் செய்யவும் இ சேவை மையத்திற்கு செல்ல வேண்டும். அல்லது ஆன்லைனில் பெயர், முகவரி, பாலினம் போன்ற அடிப்படை விவரங்களை இணையதளத்தில் மாற்ற வேண்டும். இப்படியான நிலையில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் புதிய செயலியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த செயலி மூலம் குடிமக்கள் தங்கள் ஆதார் தகவல்களைப் புதுப்பிக்க எளிதான, பாதுகாப்பான வழியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. முதன்மையாக, மொபைல் எண்கள் போன்ற தனிப்பட்ட விவரங்களை மக்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களிலிருந்து நேரடியாகப் புதுப்பிக்க இந்த செயலி உதவும். எந்தவொரு சிறிய மாற்றங்களுக்கு மக்கள் ஆதார் மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியத்தை இந்த செயலி நீக்குகிறது.
தற்போது பிறந்த தேதி, பெயர் அல்லது முகவரி போன்ற ஆதார் விவரங்களை மாற்றுவதற்கு இ சேவை மையத்திற்கு சென்று ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். புதிய e-ஆதார் செயலி புதுப்பிப்பு செயல்முறையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும். தங்கள் முகவரி, தொலைபேசி எண், பிறந்த தேதி மற்றும் பிற தகவல்களை வீட்டில் இருந்தே மாற்றிக் கொள்ளலாம்.
பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் பிறப்புச் சான்றிதழ்கள் போன்ற ஆவணங்களின் சரிபார்ப்பை செயல்படுத்தவும் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இந்த செயலி ஆதார் அப்டேட் செய்வதை எளிமைப்படுத்துவது மட்டுமில்லாமல், மோசடிக்கான வாய்ப்புகளையும் குறைக்கும். தற்போது ஆதார் தரவுகளை வைத்து மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. எனவே, இதைக் கருத்தில் கொண்டு, இந்த ஆதார் செயலி மூலம் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தியுள்ளது.
மோசடிகளை தடுக்கும் விதமாக, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் முக அங்கீகார தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்க UIDAI திட்டமிட்டுள்ளது. இருப்பினும், குறிப்பாக கைரேகைகள் அல்லது கருவிழி ஸ்கேன் போன்ற பயோமெட்ரிக் புதுப்பிப்புகளுக்கு, பதிவு மையத்திற்குச் செல்ல வேண்டியிருக்கும். இ-ஆதார் செயலி 2025ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஆண்ட்ராய்டு மற்றும் iOS போன்களுக்கு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆதார் செயலி அறிமுகமாகுவதற்கு முன்பு, உங்கள் மொபைல் எண் ஆதாருடன் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். முகவரி அல்லது பிறந்த தேதி மாற்றங்களுக்கு செல்லுபடியாகும் சான்றுகளைத் தயாராக வைத்திருங்கள்.
2025 நவம்பர் 1ஆம் தேதியான இன்று முதல் ஆதாரில் முகவரி, பிறந்த தேதி, பெயர் உள்ளிட்ட விவரங்களை ஆவணங்ள் இல்லாமல் ஆன்லைனில் திருத்திக் கொள்ள முடியும். அதோடு, குழந்தைகளுக்கான ஆதார் அட்டைக்கான பயோமெட்ரிக் கட்டணம் ரூ.125 ஆக இருந்தது. இந்த கட்டணம் தற்போது ஓராண்டுக்கு கிடையாது. அதே நேரத்தில், மற்றவர்களுக்கு பெயர், பிறந்த தேதி, முகவரி, செல்போன் எண் உள்ளிட்டவற்றை மாற்றுவதற்கு ரூ.75 ஆக இருக்கும். பயோமெட்ரிக் சார்ந்த அப்டேடுக்கு கட்டணமாக ரூ.125 ஆக இருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ