)
E Shram Card: மத்திய அரசு பலதரப்பட்ட மக்களுக்காக பல விதமான நலத்திட்டங்களை நடத்தி வருகிறது. குறிப்பாக, நிதி ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ள மக்களுக்காக அரசு ப்ரத்யேகமான பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அவற்றில் முக்கியமான ஒரு திட்டமாக உள்ளது இ-ஷ்ரம் கார்டு திட்டம்.
இ-ஷ்ரம் கார்டு திட்டம்
- அமைப்புசாரா துறையில் உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்குவதற்காக மத்திய அரசு இ-ஷ்ரம் கார்டு திட்டத்தைத் தொடங்கியது.
- இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள தொழிலாளர்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.5000 வரை நிதி உதவி கிடைக்கும்.
- நிரந்தர வேலை அல்லது ஓய்வூதிய வசதி இல்லாதவர்களுக்கு அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை ஒரு பெரிய உதவியாக இருக்கும்.
E Shram Yojana: இ-ஷ்ரம் திட்டம் யாருக்கெல்லாம் முக்கியமானது?
அமைப்புசாரா தொழிலாளர்கள்: அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்காக இ-ஷ்ரம் கார்டு திட்டம் உருவாக்கப்பட்டது. கட்டுமானத் தொழிலாளர்கள், ரிக்ஷாக்காரர்கள், வீட்டு உதவியாளர்கள், தினசரி கூலி வேலை செய்பவர்கள், சிறு கடைக்காரர்கள், தெருவோர வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் போன்றவர்களுக்கு இந்த திட்டம் மிக உதவியாக இருக்கின்றது. இந்தத் தொழிலாளர்களுக்கு பொதுவாக ஓய்வூதியம் அல்லது காப்பீட்டு சலுகைகள் எதுவும் கிடைப்பதில்லை. ஆகையால், இவர்களுக்கு இந்த திட்டம் மிக பயனுள்ளதாக கருதப்படுகின்றது.
இந்தத் திட்டத்தின் கீழ் முக்கியமான இந்த 3 நன்மைகள் பயனாளிகளுக்கு கிடைக்கின்றன:
- ஓய்வூதியம்,
- விபத்து காப்பீடு மற்றும்
- மாதாந்திர நிதி உதவி
இ-ஷ்ரம் திட்டத்தில் தொழிலாளர்களின் பெயர், வேலை வகை மற்றும் வருமான விவரங்களை ஒரு மைய தரவுத்தளத்தில் வைக்கப்படுகின்றன. இது எதிர்கால திட்டங்களில் நேரடியாக நன்மைகளை வழங்க அரசாங்கத்திற்கு உதவுகிறது.
இ ஷ்ரம் திட்டம் மூலம் மாதம் ரூ.5,000 பெறுவது எப்படி?
சில தொழிலாளர்களின் வயது, வருமானம் மற்றும் வேலை வகையைப் பொறுத்து இந்த திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.5000 வரை பெறலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இந்தப் பணம் அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகச் செல்லும். இது அவர்களும் அவர்களது குடும்பங்களும் நிதி ரீதியாகப் பாதுகாப்பாக இருக்க உதவும்.
Monthly Pension: ரூ.3,000 மாத ஓய்வூதியம்
இ ஷ்ரம் திட்டத்தின் கீழ், பயனாளிகள் 60 வயதிற்குப் பிறகு மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம் பெறலாம். இது தவிர இந்த திட்டத்தின் பயனாளிகளுக்கு ரூ.2 லட்சம் வரை இலவச விபத்து காப்பீடு கிடைக்கிறது.
E-Shram Card: இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க, பயனாளி கண்டிப்பாக:
- 18 முதல் 40 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
- அமைப்புசாரா துறையில் பணிபுரிய வேண்டும்.
- ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
E-Shram Yojana: விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் என்ன?
- ஆதார் அட்டை
- வங்கி பாஸ்புக்
- மொபைல் எண்
- பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
அனைத்து தகவல்களும் சரியாக இருந்தால் மட்டுமே E-Shram அட்டை வழங்கப்படும்.
இ ஷ்ரம் அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி?
- முதலில் இதன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான eshram.gov.in க்குச் செல்லவும்
- “Register on E-Shram” என்பதைக் கிளிக் செய்து, உங்கள் பெயர், பிறந்த தேதி, ஆதார் எண், முகவரி மற்றும் பிற விவரங்களை நிரப்பவும்.
- தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும்.
- அனைத்து விவரங்களையும் சரிபார்த்த பிறகு, உங்களுக்கு E-Shram தனித்துவமான எண் (UAN) கிடைக்கும்.
- இந்த எண் திட்டத்தின் நன்மைகளை பெற உதவியாக இருக்கும்.
E-Shram அட்டை நிதி உதவிக்கு மட்டுமல்ல, எதிர்கால ஓய்வூதியம், காப்பீடு மற்றும் நலத்திட்டங்களுக்கும் பொருந்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆகையால், தகுதியுள்ள அனைத்து தொழிலாளர்களும் இதில் விண்ணப்பித்து பயன்பெறலாம். அரசாங்க திட்டங்களுக்கு எப்போதும் அதிகாரப்பூர்வ அரசாங்க இணையதளத்தில் பதிவு செய்வது நல்லது. இவற்றில் சேர இடைத்தரகர்கள் அல்லது முகவர்களுக்கு பணம் செலுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ