)
Employement Linked Incentive Scheme: நாட்டில் உள்ள பலதரப்பட்ட மக்களுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. குறிப்பாக, இளைஞர்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அதில் ஒன்று இளைஞர்கள் பெரிதும் எதிர்பார்த்த ELI திட்டம். வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டம் என்று அழைக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த திட்டத்தில் முறையாக ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்தத் திட்டம் முதல் முறையாக பணியிடத்தில் சேரும் இளைஞர்களுக்கு நிதி உதவி வழங்கும் வகையில், இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், புதிய பணியாளர்களை நிதி ரீதியாக மேம்படுத்தவும் கடந்த மத்திய பட்ஜெட்டில் அரசாங்கம் இந்தத் திட்டத்தை அறிவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ், சுமார் 19.2 மில்லியன் புதிய இளைஞர்களுக்கு ஒரு மாத சம்பளத்திற்குச் சமமான தொகையை அரசு வழங்கும். ELI திட்டம் இளைஞர்களை வேலைவாய்ப்பை மேற்கொள்ள ஊக்குவிக்கும் மற்றும் இந்தியாவின் எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ற திறமையான பணியாளர்களை வழங்கும். இந்த திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.99,446 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் முதல் முறையாக வேலைக்கு சேரும் இளைஞர்களுக்கு மத்திய அரசு ரூ.15,000 வழங்குகிறது. இந்தத் தொகை இரண்டு தவணைகளாக டெபாசிட் செய்யப்படும். ஆறு மாத வேலைவாய்ப்புக்குப் பிறகு முதல் தவணையும், ஒரு வருடத்திற்கு பிறகு, பிறகு இரண்டாவது தவணையும் வழங்கப்படும். ஒவ்வொரு ஊழியருக்கும் நிறுவனத்திற்கு அரசாங்கத்திடமிருந்து பணம் கிடைக்கும். இந்த உதவித் தொகையின் ஒருபகுதி, பணியாளர்களின் பிஎப் கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.
இந்தத் திட்டம் இளைஞர்களுக்கு மட்டுமல்ல, நிறுவனங்களுக்கும் பயனளிக்கும். தகுதியுள்ள ஒரு ஊழியருக்கு அதிகபட்சமாக ரூ.3000 ஊக்கத் தொகையை அரசு நிறுவனங்களுக்கு வழங்கும். இந்தத் தொகை EPFO-வில் பதிவுசெய்யப்பட்டு புதிய இளைஞர்களைப் பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும். இந்த நடவடிக்கை நிறுவனங்கள் புதிய பணியமர்த்தலை அதிகரிக்க ஊக்குவிக்கும்.
50க்கும் குறைவான ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் குறைந்தது 2 புதிய ஊழியர்களை நியமிக்க வேண்டும், அதே நேரத்தில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் குறைந்தது 5 புதிய ஊழியர்களை நியமிக்க வேண்டும். இந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 6 மாத பணியாற்றுவது முக்கியம்
முதன்முறையாக ஒரு வேலையில் சேருபவர்கள் மற்றும் EPFO-வில் சேர்ந்தவர்கள் மட்டுமே இந்தத் திட்டத்தின் மூலம் பயனடையத் தகுதியுடையவர்கள். இந்த திட்டத்தில் பயனடைய விரும்புபவர்களின் சம்பளம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். அவர்கள் EPFO-வில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும்.
EPF கணக்கு செயல்படுத்தப்பட்டவுடன், இந்த திட்டத்தில் தகுதி பெறுவீர்கள்.இந்தத் திட்டத்தின் கீழ் தனியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. பின்னர் பணம் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் DBT வழியாக அவர்களின் ஆதார்-இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும். இளைஞர்களின் EPF கணக்கு, ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு மற்றும் நிறுவனத்தில் சேருவதற்கான கடிதம், PFO UAN எண்ணும் தேவை, EPFO UAN எண்ணும் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: இனி எல்லாமே ஈஸி.. ஆதார் விவரங்களை மொபைலில் மாற்றலாம்.. வருகிறது புதிய செயலி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ