EPFO Face Authentication: EPFO இன் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுடன் தொடர்புடைய ஊழியர்கள் இனி முக அங்கீகார தொழில்நுட்பத்தை பயன்படுத்தி UAN கணக்கை உருவாக்கி செயல்படுத்த முடியும். பணியாளர் மற்றும் அவர் பணியாற்றும் நிறுவனம் என இரு தரப்பினரும் முக அங்கீகார தொழில்நுட்பத்தை பயன்படுத்தி UAN-ஐ உருவாக்கிக் கொள்ள முடியும். டிஜி யாத்ரா செயலியில் பயன்படுத்தப்படும் அதே முறையை இதில் கையாளலாம்.
டிஜிட்டல் சேவை விநியோகத்தின் முக்கியத்துவம்
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), முக அங்கீகார தொழில்நுட்பத்தின் மூலம் வருங்கால வைப்பு நிதி UAN ஒதுக்கீடு மற்றும் செயல்படுத்தலுக்கான மேம்பட்ட டிஜிட்டல் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக மத்திய தொழிலாளர் அமைச்சர் மன்சுக் மண்டவியா தெரிவித்தார். மேலும் கோடிக்கணக்கான EPFO உறுப்பினர்களுக்கு தொடர்பு இல்லாத, பாதுகாப்பான மற்றும் முற்றிலும் டிஜிட்டல் சேவை விநியோகத்தை நோக்கிய ஒரு முக்கியமான படியாகும். இதன் மூலம் 'UMANG' மொபைல் செயலியின் உதவியுடன், ஆதார் முக அங்கீகார தொழில்நுட்பத்தை (FAT) பயன்படுத்தி, ஊழியர்கள் நேரடியாக தங்களின் UAN எண்ணை உருவாக்கிக் கொள்ள முடியும். புதிய பணியாளராக இருந்தாலும் ஆதார் FAT ஐப் பயன்படுத்தி UAN ஐ உருவாக்கிக் கொள்ளலாம்.
UMANG செயலியை பயன்படுத்தி UAN-ஐ ஆக்டிவேட் செய்யலாம்:
ஏற்கனவே UAN வைத்திருந்து இன்னும் அதை ஆக்டிவேட் செய்ய முடியாமல் இருக்கும் உறுப்பினர்கள், தற்போது UMANG செயலி மூலம் தங்கள் UAN-ஐ எளிதாக ஆக்டிவேட் செய்துக் கொள்ளலாம். OTP-அடிப்படையிலான அங்கீகாரம் போன்ற பாரம்பரிய முறைகளுடன் ஒப்பிடும்போது முக அங்கீகார தொழில்நுட்பட்பம் அதிக அளவிலான பாதுகாப்பை வழங்குகிறது. இது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் தளத்தில் நுழையும் போது துல்லியமான சரிபார்ப்பை உறுதி செய்கிறது.
இதனிடையே 2024-25 நிதியாண்டில், EPFO 1.26 கோடி UAN-களை ஒதுக்கியுள்ளது. எனினும், இவற்றில் 44 லட்சம் UAN-கள் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளன. பீகாரில் ESIC விரிவாக்கம் குறித்து மத்திய அமைச்சர் கூறுகையில், தற்போது பீகாரின் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 27 மாவட்டங்கள் முழுமையாக அறிவிக்கப்பட்டுள்ளன, மேலும் 11 மாவட்டங்கள் பகுதியளவு அறிவிக்கப்பட்டுள்ளன. ஆறு மாவட்டங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்ட பிறகு, இந்த எண்ணிக்கை 33 மாவட்டங்களாக அதிகரிக்கும்.
EPFO Interest Rate: 8.25 சதவீத வட்டி விகிதம்:
EPFO தற்போது அதன் பயனாளிகளுக்கு 8.25 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
EPFO-வில் சேர்க்கப்பட்டுள்ள புதிய வங்கிகள்:
EPFO-வில் இணைந்த புதிய வங்கிகளில் HSBC வங்கி, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கி, ஃபெடரல் வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, RBL வங்கி, சவுத் இந்தியன் வங்கி, சிட்டி யூனியன் வங்கி, IDFC ஃபர்ஸ்ட் வங்கி, UCO வங்கி, கர்நாடகா வங்கி, சிங்கப்பூர் மேம்பாட்டு வங்கி, தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி, மேம்பாட்டு கடன் வங்கி மற்றும் பந்தன் வங்கி ஆகியவை அடங்கும்.
மேலும் படிக்க | ஆயிரங்களை கோடிகளாக்குவது எளிது தான்... உங்களுக்கு கை கொடுக்கும் 7 ஃபார்முலாக்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









