ATM மூலம் PF பணத்தை எடுக்கு வசதி எப்போது தொடங்கும்? வரம்பு என்ன? முக்கிய அப்டேட்

EPF ATM Withdrawal: இபிஎஃப் ஏடிஎம் வசதி எப்போது அமலுக்கு வரும்? இதன் மூலம் எப்படி பணத்தை எடுப்பது? இந்த அனைத்து தகவல்களையும் இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 6, 2025, 11:05 AM IST
  • ஏடிஎம் -இல் இபிஎஃப் பணத்தை எடுக்கும் வசதி.
  • EPFO 3.O எப்போது அறிமுகம் ஆகும்?
  • இந்த வசதி எப்போது கிடைக்கும்?
ATM மூலம் PF பணத்தை எடுக்கு வசதி எப்போது தொடங்கும்? வரம்பு என்ன? முக்கிய அப்டேட்

EPF ATM Withdrawal: தனியார் துறை ஊழியர்களின் மிக முக்கியமான மற்றும் பாத்காப்பான சேமிப்பின் வழியாக இபிஎஃப் கணக்கு உள்ளது. மாத சம்பளத்தில் அன்றாட செலவுகளை கவனிக்கும் ஊழியர்கள், பணி ஓய்வுக்கு பிறகான காலத்திற்கும், அவசர மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கும் சேர்த்து வைக்கும் அவசியத்தில் உள்ளார்கள். இதில் இபிஎஃப் கணக்கு அவர்களுக்கு பெரிய அளவில் கைகொடுக்கிறது.

Add Zee News as a Preferred Source

EPFO: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு 

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அதாவது இபிஎஃப்ஓ மூலம் பணியாளர்களின் பிஎஃப் கணக்குகள் திறக்கப்படுகின்றன. இதில், ஊழியர்கள் தங்கள் ஊதியத்தில் 12% தொகையை மாதா மாதம் டெபாசிட் செய்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் டெபாசிட் செய்கின்றது. இந்த தொகைக்கு இபிஎஃப்ஓ ஆண்டு வட்டியையும் வழங்குகிறது. 

EPF Members: இபிஎஃப் உறுப்பினர்கள்

இபிஎஃப்ஓ அவ்வப்போது இபிஎஃப் உறுப்பினர்களுக்கு புதிய வசதிகளை அறிமுகம் செய்கிறது. பல பழைய விதிகளை மாற்றுகிறது. இபிஎஃப் உறுப்பினர்களின் செயல்முறைகளை வேகமாக்கவும், மேம்படுத்தவும் இந்த மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அத்தகைய ஒரு வசதிதான் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ள ஏடிஎம் வசதி.

EPF ATM Withdrawal: ஏடிஎம் -இல் இபிஎஃப் பணத்தை எடுக்கும் வசதி

இபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த மாதமே ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் வசதியை பெறுவார்கள் என கூறப்படடுகின்றது. இபிஎஃப் ஏடிஎம் வசதி எப்போது அமலுக்கு வரும்? இதன் மூலம் எப்படி பணத்தை எடுப்பது? இந்த அனைத்து தகவல்களையும் இந்த பதிவில் காணலாம்.

EPFO 3.0: EPFO 3.O எப்போது அறிமுகம் ஆகும்?

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு விரைவில் அதன் புதிய தளமான EPFO ​​3.O ஐ அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இதன் கீழ், இப்போது PF கணக்கு வைத்திருப்பவர்கள் ATM இயந்திரத்திலிருந்து PF பணத்தை எடுக்கும் வசதி வழங்கப்படும். மேலும், PF கணக்கு வைத்திருப்பவர்கள் UPI மூலமும் பணம் எடுக்கும் வசதியைப் பெறுவார்கள். தற்போது இபிஎஃப் கணக்கிலிருந்து பணம் எடுக்கும் செயல்முறை ஒரு நீண்ட செயல்முறையாக உள்ளது. புதிய அமைப்பு வந்தவுடன் ஏடிஎம் மற்றும் யுபிஐ மூலம் பணம் எடுக்கும் செயல்முறை மிக எளிதாகிவிடும். 

EPF ATM Withdrawal: இந்த வசதி எப்போது கிடைக்கும்?

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு நீண்ட காலமாக அதன் போர்ட்டலைப் புதுப்பிப்பதில் பணியாற்றி வருகிறது. ஜூன் மாதத்திலேயே முழு அமைப்பும் புதுப்பிக்கப்படும் என்றும், அதன் பிறகு இந்த மாதமே, அதாவது ஜூன் மாதமே PF கணக்கு வைத்திருப்பவர்கள் ATM மற்றும் UPI மூலம் பணம் எடுக்கும் வசதியைப் பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

EPF Withdrawal: இதற்கான செயல்முறை என்ன? இதன் வரம்பு என்ன?

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு அட்டையை வழங்கும். இது ஏடிஎம் அட்டையைப் போலவே இருக்கும். இபிஎஃப் உறுப்பினர்கள் இந்த அட்டையுடன் ஏடிஎம்-க்குச் செல்ல வேண்டும். இந்த அட்டையின் உதவியுடன் பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுக்கலாம். ஆரம்பத்தில், கணக்கு வைத்திருப்பவர் தனது பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட மொத்தத் தொகையில் 50 சதவீதத்தை ஏடிஎம் மூலம் எடுக்க முடியும். இருப்பினும், இந்த வரம்பை இபிஎஃப்ஓ பின்னர் அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகின்றது.

EPF Subscribers: இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு இந்த வசதிகளும் கிடைக்கும்

ஏடிஎம் அட்டையைப் பெற்ற பிறகு, பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கும் வசதியை பெறுவார்கள். அதே நேரத்தில், இதன் மூலம் உறுப்பினர்கள் பிஎஃப் கணக்கின் இருப்பையும் செக் செய்ய முடியும். இது தவிர, உறுப்பினர்கள் தங்கள் விருப்பப்படி உங்கள் வங்கிக் கணக்கிற்கு உங்கள் இபிஎஃப் நிதியை மாற்றவும் முடியும்.

மேலும் படிக்க | RBI அளித்த குட் நியூஸ், ரெப்போ ரேட் குறைந்தது: கடன் EMI குறையும்

மேலும் படிக்க | கனரா வங்கி, எஸ்பிஐ, எச்டிஎப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகளின் மினிமம் பேலன்ஸ் எவ்வளவு இருக்க வேண்டும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News