PF பணத்தை ATM மூலம் எடுக்கும் வசதி எப்போது தொடங்கும்? வரம்பு, செயல்முறை என்ன? முக்கிய அப்டேட்

EPFO Update: கோடிக்கணக்கான EPFO ​​உறுப்பினர்கள் விரைவில் ஒரு பெரிய நிவாரணத்தைப் பெற உள்ளனர். EPFO ​​தனது அனைத்து உறுப்பினர்களின் வசதிக்காக இந்த மாதம் EPFO ​​3.0 தளத்தை தொடங்க உள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 14, 2025, 10:28 AM IST
  • தனியார் துறை ஊழியர்களுக்கான நிதி பாதுகாப்பு.
  • EPFO 3.0 -க்கான செயல்முறை என்ன?
  • இதற்கான வரம்பு என்ன?
PF பணத்தை ATM மூலம் எடுக்கும் வசதி எப்போது தொடங்கும்? வரம்பு, செயல்முறை என்ன? முக்கிய அப்டேட்

EPF ATM Withdrawal: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய அப்டேட். நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு வசதி இந்த மாதம் அவர்களுக்கு கிடைக்கவுள்ளது. EPFO 3.0 இந்த மாதம் முதல் தொடங்கப்படும் என கூறப்படுகிறது. இதில் ஒரு முக்கியான மேம்பாடாக கருதப்படும் ATM மூலம் பணம் எடுக்கும் வசதி பற்றி இந்த பதிவில் காணலாம்.

Private Sector Employees: தனியார் துறை ஊழியர்களுக்கான நிதி பாதுகாப்பு

அலுவலக பணிகளில் பணிபுரியும் ஏராளமான மக்கள் மாத சம்பளத்தை நம்பி இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் செலவுகளை இதிலிருந்துதான் செய்கிறார்கள். இதனுடன், எதிர்காலத்திற்காகவும் சேமிக்கிறார்கள். தனியார் துறையில் பணியாற்றுபவர்களது எதிர்கால பாதுகாப்பிற்காக அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, பணி ஓய்வுக்கு பிறகான நிதி பாதுகாப்பிற்கு உதவுகிறது. இதன் கீழ் பணியாளர்களின் PF கணக்குகள் திறக்கப்படுகின்றன. 

EPF Members: எபிஎஃப் உறுப்பினர்கள்

இதற்கிடையில், கோடிக்கணக்கான EPFO ​​உறுப்பினர்கள் விரைவில் ஒரு பெரிய நிவாரணத்தைப் பெற உள்ளனர். EPFO ​​தனது அனைத்து உறுப்பினர்களின் வசதிக்காக இந்த மாதம் EPFO ​​3.0 தளத்தை தொடங்க உள்ளது. இது இந்த மாதமே தொடங்கப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

EPFO 3.0 

EPFO 3.0 இன் கீழ், பல மேம்படுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றில் அதிகம் எதிர்பார்க்கப்படும் செயல்முறை ஏடிஎம் -இலிருந்து இபிஎஃப் பணத்தை எடுக்கும் செயல்முறை. EPFO 3.0 -இல் இபிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் PF கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை நேரடியாக ATM மூலம் எடுப்பது உட்பட பல புதிய வசதிகளைப் பெறத் தொடங்குவார்கள்.  EPFO ​​3.0 மேம்பட்ட ஒரு புதிய டிஜிட்டல் தளமாக செயல்படும். PF பணத்தை எடுப்பதில் உள்ள ஆவண ரீதியான பணிகளை நீக்கி டிஜிட்டல் செயல்முறையை ஏற்றுக்கொள்வதே புதிய அமைப்பின் நோக்கமாகும். இந்த மாதம் அதாவது ஜூன் மாதம் முதல் புதிய தளம் தொடங்கப்படலாம் என கூறப்படுகின்றது.

EPFO ATM Withdrawal: இதற்கான செயல்முறை என்ன?

ATM மூலம் பணம் எடுக்க ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு அட்டையை வழங்கும். இது ஒரு ATM அட்டையைப் போலவே இருக்கும். இந்த அட்டையுடன் ATM -க்கு சென்று பணத்தை எடுக்கலாம். வங்கிக்கணக்கை ATM அட்டை கொண்டு எடுப்பது போல EPF கணக்கில் உள்ள பணத்தையும் ATM மூலம் எடுக்கலாம். 

EPFO ATM Withdrawal: இதற்கான வரம்பு என்ன?

ஆரம்பத்தில், இபிஎஃப் சந்தாதாரர்கள் தங்கள் PF கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட மொத்தத் தொகையில் 50 சதவீதத்தை ATM மூலம் எடுக்க முடியும். இருப்பினும், இந்த வரம்பை EPFO மேலும் அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது. ATM அட்டையைப் பெற்ற பிறகு, PF கணக்கு வைத்திருப்பவர்கள் ATM-ல் இருந்து பணம் எடுக்கும் வசதியைப் பெறுவார்கள். இதனுடன், இபிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் PF கணக்கின் இருப்பையும் இதன் மூலம் செக் செய்ய முடியும். மேலும் இபிஎஃப் இருப்பை உறுப்பினர்கள் அவர்கள் விரும்பும் வங்கிக் கணக்கிற்கும் மாற்றலாம்.

EPF Auto Claim Settlement: தானியங்கி க்ளெய்ம் தீர்வு

EPFO 3.0 -இல் தானியங்கி க்ளெய்ம் தீர்வு வசதியும் இருக்கும். இது எந்தவொரு கைமுறை தலையீடும் இல்லாமல் பணத்தை நேரடியாக உங்கள் கணக்கிற்கு மாற்ற அனுமதிக்கும். அதாவது க்ளெய்ம் செய்த பிறகு பணத்தைப் பெற நீங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. இதனுடன், இதன் செயல்முறையும் எளிதாக இருக்கும். புதிய அமைப்பில், இபிஎஃப் உறுப்பினர்கள் ஒரு ஆன்லைன் க்ளெய்மைச் சமர்ப்பித்தவுடன், அமைப்பு அதை தானாகவே செயல்படுத்தும். மேலும் பணம் குறிப்பிட்ட நேரத்திற்குள் உங்கள் வங்கிக் கணக்கை அடைந்துவிடும்.

மேலும் படிக்க | RBI வாய்ஸ் கால் மற்றும் SBI ரிவார்ட்ஸ் மோசடிகள்: மத்திய அரசின் எச்சரிக்கை

மேலும் படிக்க | EPF-ல் பணியில் சேர்ந்த மற்றும் வெளியேறிய தேதிகளைப் புதுப்பிக்க ஆவணங்களை அப்லோட் செய்ய வேண்டுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News