EPFO Claim Settlement: இபிஎஃப் கணக்கில் மாதா மாதம் ஒரு குறிப்பிட தொகையை டெபாசிட் செய்யும் ஊழியரா நீங்கள்? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), அவ்வப்போது பல புதிய விதிகளை அறிமுகம் செய்கிறது. பழைய விதிகளில் பல மாற்றங்கலையும் செய்கிறது. இபிஎஃப் உறுப்பினர்களின் செயல்முறைகளை எளிதாக்கவும், மேம்படுத்தவும் இந்த மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு அதிகரிக்கும் வசதிகள்
இபிஎஃப்ஓ, அதன் க்ளெய்ம் தீர்வு செயல்பாட்டை இரண்டு முக்கிய வழிகளின் மூலம் எளிமைப்படுத்தியுள்ளது. இது க்ளெய்ம் தீர்வு செயல்முறையை கணிசமாக நெறிப்படுத்தும். மேலும் க்ளெய்ம் நிராகரிப்புகள் தொடர்பான குறைகளையும் குறைக்கும் என நம்பப்படுகின்றது.
EPFO Claim Settlement Process: இபிஎஃப்ஓ க்ளெய்ம் செட்டில்மெண்ட் செயல்முறை
இபிஎஃப் உறுப்பினர்களின் செயல்முறைகளை மேம்படுத்துவதற்கும், எளிமையாக்குவதற்கும், நிறுவனங்களுக்கான செயல்முறைகளை எளிதாக்கவும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக EPFO தெரிவித்துள்ளது.
1. செக் லீஃப் / சான்றளிக்கப்பட்ட வங்கி பாஸ்புக்கின் புகைப்படத்தை பதிவேற்றுவதற்கான தேவையை நீக்கம்
ஆன்லைன் க்ளெய்ம்களை தாக்கல் செய்யும் போது காசோலை பக்கம் அல்லது சான்றளிக்கப்பட்ட வங்கி பாஸ்புக்கின் புகைப்படத்தை பதிவேற்றுவதற்கான தேவையை EPFO முற்றிலுமாக நீக்கியுள்ளது.
காசோலை பக்கத்தின் படத்தை பதிவேற்றுவதற்கான தேவையை நீக்குவதற்கான முன்னோடி திட்டம்
இந்தத் தேவை ஆரம்பத்தில் சில KYC- புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு ஒரு முன்னோடி அடிப்படையில் தளர்த்தப்பட்டது. மே 28, 2024 அன்று தொடங்கப்பட்டதிலிருந்து, இந்த நடவடிக்கை ஏற்கனவே 1.7 கோடி EPF உறுப்பினர்களுக்கு பயனளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
EPFO செக் லீஃபின் புகைப்படத்தை பதிவேற்றுவதற்கான தேவையை நீக்க முடிவு செய்தது ஏன்?
வங்கிக் கணக்கை யுனிவர்சல் கணக்கு எண்ணுடன் (UAN) இணைக்கும் போது, வங்கிக் கணக்கு வைத்திருப்பவரின் பெயர் ஏற்கனவே EPF உறுப்பினரின் விவரங்களுடன் சரிபார்க்கப்பட்டிருப்பதால், இந்த கூடுதல் ஆவணங்கள் இனி தேவையில்லை என இபிஎஃப்ஓ முடிவு செய்தது.
2. வங்கிக் கணக்கு விவரங்களை UAN உடன் இணைப்பதற்கான நிறுவனத்தின் ஒப்புதலின் தேவையை நீக்க முடிவு
வங்கி கணக்குகளை யுனிவர்சல் கணக்கு எண்ணுடன் (UAN) இணைக்கும் செயல்முறையை நெறிப்படுத்த, வங்கிச் சரிபார்ப்புக்குப் பிறகு முதலாளியின் / நிறுவனத்தின் ஒப்புதலின் தேவையை EPFO இப்போது நீக்கியுள்ளது. தற்போது, கணக்கில் உள்ள இபிஎஃப் தொகையை (EPF Amount) எடுக்க, இபிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் வங்கிக் கணக்கை UAN உடன் இணைக்க வேண்டும்.
Seeding Bank Account: 2024-25 நிதியாண்டில் 1.3 கோடி உறுப்பினர்கள் வங்கிக் கணக்கை இணைப்பதற்கான கோரிக்கைகளைச் சமர்ப்பித்தனர்
2024-25 நிதியாண்டில், 1.3 கோடி உறுப்பினர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளை இணைப்பதற்கான கோரிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளனர். மேலும் அந்தந்த வங்கி/NPCI உடன் உரிய பொருத்தத்திற்குப் பிறகு கோரிக்கைகளை முதலாளி / நிறுவனம் DSC/E-Sign மூலம் அங்கீகரிக்க வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









