EPF Interest Rate: அதிகரிக்கும் வட்டி விகிதம்? விரைவில் PF உறுப்பினர்களுக்கு முக்கிய அறிவிப்பு

EPF Interest Rate: அரசு ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள் என அனைவருக்கும் அரசு பல நல்ல செய்திகளை அளித்துள்ளது. 2024-25 நிதியாண்டிற்கு இபிஎஃப் தொகைக்கான (EPF Amount) வட்டி விகிதம் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கருதுகிறார்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 7, 2025, 12:07 PM IST
  • இபிஎஃப் உறுப்பினர்களுக்கு குட் நியூஸ்.
  • இபிஎஃப் சந்தாதாரர்களின் எதிர்பார்ப்பு என்ன?
  • பிப்ரவரி 28 மத்திய அறங்காவலர் குழுவின் முக்கிய கூட்டம்.
EPF Interest Rate: அதிகரிக்கும் வட்டி விகிதம்? விரைவில் PF உறுப்பினர்களுக்கு முக்கிய அறிவிப்பு

EPFO Update: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய அப்டேட் வந்துள்ளது. இதற்கான எதிர்பர்ப்பு நீண்ட நாட்களாக இருந்து வந்த நிலையில், தற்போது இது குறித்த தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன. இபிஎஃப் வட்டி விகிதம் குறித்து சில தகவல்கல் கிடைத்துள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Add Zee News as a Preferred Source

மந்தமாக இருக்கும் இந்தியப் பொருளாதாரத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கவும், பொதுமக்களின் நிதிச் சுமையை சற்று குறைக்கவும், பட்ஜெட் அறிவிப்பின் போதும் அதற்குப் பின்னரும், நடுத்தர வர்க்கத்தினருக்கு பல்வேறு சலுகைகளை இந்திய அரசு தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. இன்று ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தையும் 25 புள்ளிகள் குறைத்துள்ளது. இதனால் கார் கடன், வீட்டு கடன் போன்றவற்றுக்கான வட்டி குறையும் வாய்ப்புள்ளது.

அரசு ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள் என அனைவருக்கும் அரசு பல நல்ல செய்திகளை அளித்துள்ளது. தொடர்ச்சியான அறிவிப்புகளும் உறுதிமொழிகளும் விரைவாக அடுத்தடுத்து அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த முயற்சிகளின் முக்கிய நோக்கம், மக்களிடையே பணப்புழக்கத்தை அதிகரித்து அதன் மூலம், நுகர்வை ஊக்குவித்து, சந்தை தேவையை உருவாக்குவதும், அதன் மூலம் சந்தையை ஊக்குவிப்பதும் ஆகும்.

EPF Interest Rate: இபிஎஃப் வட்டி விகிதம்

சாதகமான முடிவுகளின் ஒரு அங்கமாக. 2024-25 நிதியாண்டிற்கு இபிஎஃப் தொகைக்கான (EPF Amount) வட்டி விகிதம் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கருதுகிறார்கள். இந்திய அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் இதேபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. PF வட்டி விகிதம் 2022-23 இல் 8.15 சதவீதமாகவும், 2023-24 இல் 8.25 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டது.

தற்போது அரசாங்கம் சார்பாக எடுக்கப்பட்டு வரும் ஆக்கப்பூர்வமான முடிவுகளை கருத்தில்கொண்டு பார்த்தால், PF மீதான வட்டி விகிதங்களை அரசு கண்டிப்பாக உயர்த்து என்றே தோன்றுகிறது. எனினும், இது குறித்த எந்த வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் வரவில்லை. 

Central Board of Trustees: பிப்ரவரி 28 மத்திய அறங்காவலர் குழுவின் முக்கிய கூட்டம்

பட்ஜெட்டில் ரூ. 12.75 லட்சம் வரை வரி இல்லாத வருமானம் என்ற அறிவிப்பு வந்ததை அடுத்து சம்பள வர்க்கத்தினர், குறிப்பாக நடுத்தர வர்க்க மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இதன் தொடர்ச்சியாக வருங்கால வைப்பு நிதி (PF) வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவது குறித்தும் இந்திய அரசு பரிசீலிக்கலாம் என்ற கருத்து பரவலாக உள்ளது. இந்த முடிவு மத்திய தொழிலாளர் அமைச்சர் தலைமையில் நடைபெறும், முதலாளிகள் சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) மத்திய அறங்காவலர் குழுவின் கூட்டத்தில் எடுக்கப்படலாம். 

EPF Subscribers: இபிஎஃப் சந்தாதாரர்களின் எதிர்பார்ப்பு

இந்த முக்கிய சந்திப்பு பிப்ரவரி 28 ஆம் தேதி நடக்கவுள்ளது. இதில் தங்களுக்கு சாதகமான முடிவுகள் எடுக்கப்படும் என இபிஎஃப் சந்தாதாரர்கள் நம்புகிறார்கள். இபிஎஃப் வட்டி விகிதம் மட்டுமல்லாமல் இன்னும் பல முக்கிய முடிவுகளுக்கான எதிர்பார்ப்பும் உள்ளது.

EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு குட் நியூஸ்

சமீப காலமாக இபிஎஃப் உறுப்பினர்களுக்கு தொடர்ந்து பல நல்ல செய்திகள் கிடைத்து வருகின்றன. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, தொடர்ந்து இபிஎஃப் அமைப்பில் பல மாற்றங்களை செய்து வருகின்றது. பல புதிய விதிகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இபிஎஃப் சந்ததாதாரர்களின் செயல்முறைகளை எளிதாக்கி அவர்களது வசதியை அதிகரிப்பதே இந்த மாற்றங்களின் நொக்கமாகும்.

மேலும் படிக்க | RBI Monetary Policy: ஆர்பிஐ அளித்த குட்நியூஸ், ரெப்போ ரேட் குறைந்தது, கடன் EMI குறையும்

மேலும் படிக்க | PM Kisan முக்கிய அப்டேட்: இந்த நாளில் வருகிறது 19வது தவணை, விவசாயிகள் செய்யவேண்டியது இதுதான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News