EPS Pension: இபிஎஃப் உறுப்பினரா நீங்கள்? மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறீர்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். இபிஎஸ் ஓய்வூதியம் தொடர்பான சில முக்கிய தகவல்களை இந்த பதிவில் காணலாம்.
EPF Members: எந்தெந்த இபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும்?
தொடர்ந்து 10 ஆண்டுகள் EPFO-வில் பங்களிப்பு செய்யும் இபிஎஃப் உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெற தகுதியுடையவர்கள் ஆகின்றனர். அதாவது, ஓய்வு பெற்ற பிறகு, அவர்கள் EPFO-விலிருந்து ஓய்வூதியம் பெறலாம். அவர்களின் பங்களிப்பின் அடிப்படையில் ஓய்வூதியத் தொகை தீர்மானிக்கப்படும். இபிஎஃப் சந்தாதாரர்கள் 58 வயதில் EPFO-விலிருந்து ஓய்வூதியம் பெறலாம்.
இருப்பினும், ஒருவர் முன்கூட்டியே ஓய்வூதியம் பெற விரும்பினால், அவருக்கு 50 வயது முதலே இந்த வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் ஒருவர் 58 வயதுக்கு முன்னர் எவ்வளவு விரைவாக EPFO-வில் இருந்து ஓய்வூதியம் பெறுகிறாரோ, அவ்வளவு அதிகமாக இழப்பு ஏற்படும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். முன்கூட்டிய ஓய்வூதியம் தொடர்பான EPFO விதி என்ன என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
Early Pension Rules: 58 வயதுக்கு முன்னரே ஓய்வூதியம் பெறுவதற்கான ஓய்வூதிய விதிகள்
EPFO விதிகளின்படி, ஒரு ஊழியர் 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் EPFO-வில் பங்களிப்பு செய்திருந்தால், அவருக்கு ஓய்வூதியம் பெற உரிமை இருந்தால், ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியம் கோரலாம். எனினும் அவர் முன்கூட்டியே ஓய்வூதியத்தின் பலனைப் பெற விரும்பினால், 50 வயதில் எர்ளி பென்ஷனைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுவார். ஆனால் அப்படி செய்வதால் இபிஎஃப் உறுப்பினர்கள் சில இழப்புகளை சந்திக்க நேரிடும். 58 வயதுக்கு எத்தனை ஆண்டுகள் முன்னதாக இரு ஊழியர் பணம் எடுக்கிறாரோ, அத்தனை ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டிற்கும் 4% குறைவான விகிதத்தில் ஓய்வூதியம் கிடைக்கும்.
ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். ஒரு EPFO உறுப்பினர் 56 வயதில் ஓய்வூதியம் கோரினால், அவருக்கு அடிப்படை ஓய்வூதியத் தொகையில் 92% (100% – 2×4) கிடைக்கும். அதாவது, முதலீட்டாளர் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்ததால், அவரது ஓய்வூதியத் தொகையிலிருந்து 8 சதவீதம் கழிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஒரு இபிஎஃப் உறுப்பினர் 55 வயதில் ஓய்வூதியத்தை பெற கோரிக்கை வைத்தால், அடிப்படை ஓய்வூதியத்தில் 88% ஓய்வூதியமாகப் பெறுவார். 54 வயதில் ஓய்வூதியத்தை எடுக்க நினைத்தால், அடிப்படை ஓய்வூதியத்தில் 84% -ஐ ஓய்வூதியமாகப் பெறுவார். ஓய்வூதியம் ஒவ்வொரு ஆண்டுக்கும் 4% குறைக்கப்படும்.
முன்கூட்டியே ஓய்வூதியம் பெறுவதற்கு க்ளெய்ம் செய்வது எப்படி?
முன்கூட்டியே ஓய்வூதியம் பெற, உறுப்பினர்கள் கூட்டு உரிமைகோரல் படிவத்தை (Composite Claim Form) நிரப்பி 10D விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உங்கள் வயது 50 வயதுக்குக் குறைவாக இருந்து, நீங்கள் ஓய்வூதியம் பெற விரும்பினால், உங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்காது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் வேலையை விட்டு வெளியேறினால், உங்களுக்கு EPF நிதி மட்டுமே கிடைக்கும். EPFO-வின் படி, ஓய்வூதியம் பெறுவதற்கான சரியான வயது 58 ஆண்டுகள் ஆகும். முன்கூட்டியே ஓயூதியம் பெற, குறைந்தபட்ச வயது 50 ஆக இருக்க வேண்டும்.
EPS Pensioners: 10 வருடங்களுக்கும் குறைவான சேவை அனுபவம் கொண்டவர்களுக்கான விதிகள் என்ன?
பணி காலம் 10 ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால், அந்த ஊழியர்களுக்கு EPFO-விலிருந்து ஓய்வூதியம் பெற உரிமை கிடைக்காது. அத்தகைய சூழ்நிலையில் அவர்களுக்கு இரண்டு வழிகள் உள்ளன.
- முதலில், வேலை தொடர்ந்து செய்ய விரும்பாத நபர்கள், தங்கள் ஓய்வூதியத் தொகையையும் PF தொகையுடன் சேர்த்து எடுக்கலாம். அதாவது ஃபுல் அண்ட் ஃபைனல் செட்டில்மெண்ட் செய்துகொள்ளலாம்.
- இரண்டாவது விருப்பத்தில், எதிர்காலத்தில் மீண்டும் வேலையில் சேரும் எண்ணம் உள்ளவர்கள், ஓய்வூதிய திட்ட சான்றிதழைப் பெறலாம். அவர்கள் ஒரு புதிய வேலையில் சேரும் போது, இந்த சான்றிதழ் மூலம் தங்கள் முந்தைய ஓய்வூதியக் கணக்கை புதிய வேலையுடன் இணைக்கலாம். இதன் மூலம், 10 வருட பணிக் காலத்தில் என்ன பற்றாக்குறை இருந்தாலும், அதை அடுத்த பணியில் ஈடுசெய்ய முடியும், மேலும் 58 வயதில் ஓய்வூதியம் பெற தகுதி பெறலாம்.
மேலும் படிக்க | 100, 200 ரூபாய் நோட்டுகள்.. ரிசர்வ் வங்கியின் புதிய உத்தரவு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









