EPFO Update: இபிஎஃப் உறுப்பினரா நீங்கள்? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக முக்கியமானதாக இருக்கும். வருங்கால வைப்பு நிதி அமைப்பில்(EPFO) கணக்கு வைத்திருக்கும் 7 கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு இந்த வாரம் மிகவும் முக்கியமானது. ஏனெனில், இந்த வாரம் இபிஎஃப் உறுப்பினர்களுக்கு சில முக்கிய செய்திகள் கிடைக்க வாய்ப்புள்ளது. இபிஃப் சந்தாதாரர்களுக்கு காத்திருக்கும் நல்ல செய்திகள் என்ன? இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
Central Board of Trustees: மத்திய அறங்காவலர் குழு
இந்த வாரம், பிப்ரவரி 28, 2025 அன்று மத்திய அறங்காவலர் குழு (CBT) கூட உள்ளது. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மண்டாவியா தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டம், 2024-25 நிதியாண்டிற்கான இபிஎஃப்ஓ வட்டி விகிதத்தை தீர்மானிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வட்டு விகிதம் தவிர இந்த கூட்டத்தில் இன்னும் சில முக்கிய முடிவுகளும் எடுக்கப்படும் என நம்பப்படுகின்றது.
EPFO Interest Rate: இபிஎஃப்ஓ வட்டி விதிகம்
முந்தைய நிதியாண்டில் (2023-24), EPFO 8.25% வட்டியை வழங்கியது. அதற்கு முன்னர், 2022-23 நிதியாண்டில், வட்டி விகிதம் 8.15% ஆகவும், 2021-22 நிதியாண்டில் 8.10% ஆகவும் இருந்தது. அதாவது தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டு வந்துள்ளன. இந்த ஆண்டு உள்ள வலுவான முதலீட்டு வருமானத்தைக் கருத்தில் கொண்டு, வட்டி விகிதம் மாற்றப்படாமல் 8.25% ஆகவே தொடரக்கூடும் என ஒரு சாரார் கூறுகிறார்கள். எனினும், அரசாங்கம் சமீபத்தில் வெளியிட்டுள்ள பல வித மக்கள் நல அறிவிப்புகளை தொடர்ந்து இபிஎஃப் வட்டி விகிதமும் அதிகரிக்கப்படும் என ஒரு சாரார் கருத்து தெரிவித்துள்ளனர்.
CBT வட்டி விகிதத்தை இறுதி செய்தவுடன், அது நிதி அமைச்சகத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பப்படும். இந்த முடிவு ஊழியர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் நிதி நிபுணர்களால் உன்னிப்பாகக் கவனிக்கப்படும். ஏனெனில் இபிஎஃப் வட்டி விகிதம் என்பது இந்தியாவில் உள்ள மில்லியன் கணக்கான தொழிலாளர்களை நேரடியாக பாதிக்கிறது.
EPF Fixed Interest Rates: இபிஎஃப் நிலையான வட்டி விகிதம்
CBT கூட்டத்தில், இபிஎஃப் வட்டி விகிதங்களை நிலைப்படுத்தல், அதாவது நிலையான வட்டியாக வைப்பது குறித்த முக்கியமான விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு ஒரு இருப்பு நிதியை உருவாக்குவது தொடர்பாகவும் பேசப்படலாம். ஏற்ற இறக்கமான வட்டி விகிதங்கள் அல்லது குறைந்த முதலீட்டு வருமானங்களின் போது கூட, EPFO சந்தாதாரர்களுக்கு நிலையான வருமானத்தை உறுதி செய்வதை இந்த முன்மொழிவு நோக்கமாக கொண்டிருக்கும். இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், இந்த முறை 2026-27 முதல் செயல்படுத்தப்படலாம்.
Minimum Monthly Pension for EPF Subscribers: இபிஎஃப் சந்தாதாரர்களின் குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் அதிகரிக்குமா?
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கீழ் இபிஎஃப் நிதிக்கு மாதா மாதம் பங்களிக்கும் தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் தற்போது ரூ.1,000 ஆக உள்ளது. இது 2014 ஆம் ஆண்டு திருத்தப்பட்டது. அதன் பிறகு பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவுகளில் பல வித மாற்றங்கள் வந்துவிட்டாலும், குறைந்தபட்ச ஓய்வூதியம் அதிகரிக்கப்படாமல் அப்படியே உள்ளது. இதை ரூ.7,500 உயர்த்த வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை இருந்து வருகிறது. சிபிடி சந்திபில் இது தொடர்பான அறிவிப்பும் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Wage Ceiling Hike for EPF Members: ஊதிய உச்ச வரம்பு அதிகரிக்குமா?
சிபிடி கூட்டத்தில் மற்றொரு முக்கிய செய்தியும் எதிர்பார்க்கப்படுகின்றது. இபிஎஃப் உறுப்பினர்களின் சம்பள உச்சவரம்பை ரூ.15,000 -இலிருந்து ரூ.21,000 ஆக உயர்த்துவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படக்கூடும். இந்த ஊதிய உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டால், லட்சக்கணக்கான ஊழியர்கள் மற்றும் நிறுவனங்களின் மீது இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஊதிய உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டால், ரூ.15,000 முதல் ரூ.21,000 வரை சம்பாதிக்கும் தொழிலாளர்களும் இபிஎஸ் ஓய்வூதிய பலன்களை (EPS Pension) பெற முடியும். ஆனால், நிறுவனங்களுக்கு இது நிதிச் சுமையை அதிககரிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | வங்கிகளில் நகை அடகு வைக்க புதிய கட்டுப்பாடு! விதிகள் மாற்றத்தால் மக்கள் அவதி!
மேலும் படிக்க | SEBI விதிகளுக்கு எதிராக... பங்குதாரர்களிடம் முக்கிய தகவலை மறைக்கும் ONGC
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









