)
EPS Pension Certificate: இபிஎஃப் உறுப்பினரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு முக்கியமான ஒரு தகவலை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். சிறந்த ஊதியம் மற்றும் வாய்ப்புகளுக்காக பல ஊழியர்கள் அடிக்கடி தங்கள் வேலைகளை மாற்றுகிறார்கள். வேலைகளை மாற்றும்போது, ஊழியர்கள் தங்கள் EPF (ஊழியர் வருங்கால வைப்பு நிதி) கணக்கை பழைய நிறுவனத்திடமிருந்து புதிய நிறுவனத்திற்கு மாற்ற வேண்டும். இது பல ஊழியர்களுக்கு தெரிந்த தகவல்தான். ஆனால், பெரும்பாலானோருக்கு, வேலையை மாற்றும்போது, EPFO -இலிருந்து EPS சான்றிதழையும் பெற வேண்டும் என்பது தெரிவதில்லை.
ஊழியர் ஓய்வூதியத் திட்டம் (EPS) EPFO ஆல் நிர்வகிக்கப்படுகிறது. இந்தத் திட்டம் தனியார் துறை ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிந்தைய ஓய்வூதியத்தை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. EPS திட்டச் சான்றிதழ், 1995 ஆம் ஆண்டு ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. EPS ஓய்வூதியச் சான்றிதழ் ஓய்வூதியத்திற்கான சான்றாகச் செயல்படுகிறது. ஊழியர்கள் தங்கள் வேலைகளை மாற்றும்போது தங்களது ஓய்வூதியத்தையும் மாற்ற இது அனுமதிக்கிறது.
ஒரு இபிஎஃப் உறுப்பினர் 58 வயதிற்குப் பிறகு, அதாவது ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியத்தைப் பெறுகிறார். வேலை மாறிய பிறகு தங்கள் ஓய்வூதிய சேவை மற்றும் ஓய்வூதியத் தொகையை புதிய கணக்கிற்கு மாற்ற விரும்பும் ஊழியர்களுக்கு EPS சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஒரு ஊழியரின் மொத்த சேவை காலம் 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் இருந்தால், EPS சான்றிதழ் மூலம் மட்டுமே ஓய்வூதிய பரிமாற்றம் சாத்தியமாகும். உங்கள் சேவை காலம் 180 நாட்களுக்கு மேல் ஆனால் 10 ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால், EPS நிதி பரிமாற்றம் ஆப்ஷனலாக இருக்கும். அதாவது, ஊழியர் தேவை என கருதினால் இதை செய்யலாம்.
- தங்கள் வேலையை மாற்றும் ஊழியர்கள் படிவம் 10C ஐ நிரப்பி, இபிஎஸ் சான்றிதழைப் பெற வேண்டும். அதை அவர்களின் புதிய நிறுவனத்தின் EPFO க்கு சமர்ப்பிக்க வேண்டும். இது ஓய்வூதியத் தொகையை புதிய கணக்கிற்கு மாற்றும்.
- ஊழியரின் மொத்த சேவை காலம் 9.5 ஆண்டுகளைத் தாண்டி, அவர் 50 வயதுக்குக் குறைவாக இருக்கும்போது, ஓய்வூதிய பரிமாற்றத்திற்கு EPS சான்றிதழ் தேவைப்படுகிறது.
- ஊழியர்கள் வேலையை மாற்றும் ஒவ்வொரு முறையும் படிவம் 10C ஐ நிரப்புவது கட்டாயமாகும். ஊழியர்கள் இபிஎஸ் நிதியை மாற்றினாலும் அல்லது எடுத்தாலும், இந்தப் படிவம் கட்டாயமாகும்.
- EPS சான்றிதழ் ஊழியரின் முந்தைய வேலையிலிருந்து அவரது புதிய வேலைக்கு ஓய்வூதிய சேவையைச் சேர்க்கிறது. ஊழியர் திடீரென இறந்தால், குடும்பத்தினர் ஓய்வூதிய சலுகைகளைப் பெறுவார்கள்.
இபிஎஸ் ஓய்வூதிய சான்றிதழை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யும் வழிமுறையை இங்கே காணலாம்:
- இதற்கு முதலில் EPFO-வின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான http://www.epfindia.gov.in -க்கு செல்ல வேண்டும்.
- முகப்புப் பக்கத்தின் வலது பக்கத்தில் "ஆன்லைன் க்ளெய்ம் மெம்பர் அகவுண்ட் டிரான்ஸ்ஃபர்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் திரையில் UAN போர்டல் திறக்கும். உங்கள் பயனர்பெயர் (UAN எண்) மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு லாக் இன் செய்யவும்.
- புதிய பக்கம் திறக்கும்போது, "ஆன்லைன் சர்வீசஸ்" விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- சேவைகளின் பட்டியல் தோன்றும். "CLAIM" (படிவம் 31, 19, 10C & 10D) க்கான இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- அடுத்த பக்கத்தில், பெயர், பிறந்த தேதி மற்றும் ஆதார் எண் போன்ற உங்கள் தனிப்பட்ட அடையாள விவரங்களை உள்ளிட வேண்டும்.
- வங்கிக் கணக்கு எண்ணுக்கு அடுத்து ஒரு வெற்றுப் பெட்டி இருக்கும். உங்கள் வங்கிக் கணக்கு எண்ணை உள்ளிடவும்.
- பின்னர், "Proceed for Online Claim" என்ற விருப்பம் கீழே தோன்றும். அதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் ஓய்வூதியக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட நிதியை உங்கள் அடுத்த வேலையுடன் இணைக்க விரும்பினால், திட்டச் சான்றிதழ் (FORM-10 C) விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
- இதன் பின்னர், பெட்டியில் உங்கள் முழு முகவரியை உள்ளிடவும்.
- உங்கள் பிஎஃப் கணக்குடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கின் பாஸ்புக்கின் முதல் பக்கம் அல்லது காசோலை புத்தகம் போன்ற வங்கி தொடர்பான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- பக்கத்தின் கீழே உள்ள "Get Aadhaar OTP" விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
- அதன் பிறகு, உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP ஐ உள்ளிட்டு சரிபார்ப்பை முடிக்கவும்.
- இதன் மூலம் விண்ணப்ப செயல்முறையை நிறைவடையும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ