PF உறுப்பினர்களுக்கு 3 குட் நியூஸ்: வட்டி விகிதம், ஓய்வூதிய உயர்வு... 6 நாட்களில் முக்கிய அறிவிப்பு

EPFO Minimum Monthly Pension: இன்னும் சில நாட்களில் இபிஎஃப்ஓ -வின் முக்கிய சந்திப்பு ஒன்று நடக்கவுள்ளது. 2024-25 நிதியாண்டுக்கான வருங்கால வைப்பு நிதி வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை தீர்மானிக்க ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) மத்திய அறங்காவலர் குழு (CBT) பிப்ரவரி 28, 2025 அன்று கூடவுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 22, 2025, 10:43 AM IST
  • இபிஎஃப் உறுப்பினர்களின் கோரிக்கை என்ன?
  • ஊதிய உச்ச வரம்பு அதிகரிக்குமா?
  • முக்கிய அப்டேட் இதோ.
PF உறுப்பினர்களுக்கு 3 குட் நியூஸ்: வட்டி விகிதம், ஓய்வூதிய உயர்வு... 6 நாட்களில் முக்கிய அறிவிப்பு

EPFO Update: தனியார் துறையில் பணிபுரியும் ஊழியரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. வரும் நாட்களில் பல பெரிய அறிவிப்புகளை நீங்கள் பெறக்கூடும். இவை முக்கியமாக இபிஎஃப்ஓ தொடர்பானவையாக இருக்கும். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Add Zee News as a Preferred Source

Central Board of Trustees: மத்திய அறங்காவலர் குழு

இன்னும் சில நாட்களில் இபிஎஃப்ஓ -வின் முக்கிய சந்திப்பு ஒன்று நடக்கவுள்ளது. 2024-25 நிதியாண்டுக்கான வருங்கால வைப்பு நிதி வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை தீர்மானிக்க ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) மத்திய அறங்காவலர் குழு (CBT) பிப்ரவரி 28, 2025 அன்று கூடவுள்ளது. இந்த கூட்டத்தில் இன்னும் சில முக்கியமான முடிவுகளும் எடுக்கப்படும் என நம்பப்படுகின்றது. எனினும், இதில் வட்டி விகிதங்கள் குறித்த விவாதங்கள் முதன்மையானதாக இருக்கும். இதனுடன் மாத ஓய்வூதியத்தை அதிகரிப்பது பற்றியும் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Minimum Monthly Pension: குறைந்தபட்ச மாத ஓய்வூதியம்

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கீழ் உள்ள தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் இதற்கு முன்னர் 2014 ஆம் ஆண்டு திருத்தப்பட்டது. அப்போது ஓய்வூதியத் தொகை ரூ.1,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. இந்த காலத்தில் பணவீக்கம், வாழ்க்கை செலவுகள் என அனைத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் இபிஎஃப்ஓ ஓய்வூதியத்தில் மட்டும் எந்த மாற்றமும் செய்யப்படாமல் அப்படியே உள்ளது. 

EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களின் கோரிக்கை

மாதம் ரூ.1,000 ஆக உள்ள குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.7,500 ஆக அதிகரிக்க வேண்டும் என நீண்ட காலமாக இபிஎஃப் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துவருகிறார்கள். இந்த மாத தொடக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டிலேயே இதற்கான அறிவிப்பு வரும் என வெகுவாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி நடக்கவில்லை. இப்போது, பிப்ரவரி 28 அன்று நடக்கவுள்ள CBT கூட்டத்தில் இந்த பிரச்சனை குறித்து கண்டிப்பாக பேசப்பட்டு ஒரு முடிவு எடுக்கப்படும் என ஊழியர்கள் நம்புகிறார்கள். 

Wage Ceiling Hike: ஊதிய உச்ச வரம்பு

இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு மற்றொரு நல்ல செய்தியாக, இந்திய அரசாங்கம் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் சம்பள உச்சவரம்பை ரூ.15,000 -இலிருந்து ரூ.21,000 ஆக உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருகிறது. இது உயர்த்தப்பட்டால், இதனால் லட்சக்கணக்கான ஊழியர்கள் மற்றும் நிறுவனங்களின் மீது இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் ஊழியர்களின் சமூக பாதுகாப்பு மேம்படுவதோடு ஓய்வூதிய உயர்வும் கிடைக்கும். மற்றும் மேம்பட்ட ஓய்வூதிய சலுகைகளை இது வழங்கும். எனினும் இது முதலாளிகளுக்கு / நிறுவனங்களுக்கு சில கூடுதல் நிதிப் பொறுப்புகளையும் ஏற்படுத்தும்.

EPS Pension: இபிஎஸ் ஓய்வூதியம்

ஊதிய உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டால், ரூ.15,000 முதல் ரூ.21,000 வரை சம்பாதிக்கும் தொழிலாளர்களும் EPS சலுகைகளைப் பெற முடியும். ஊழியர்களின் ஓய்வூதிய நிதி இதன் மூலம் ஏற்றம் காணும். இதனால் பணி ஓய்வு காலத்திற்கான நிதி பதுகாப்பு மேம்படும். எனினும், நிறுவனங்களுக்கு இது நிதிச் சுமையை அதிககரிக்கலாம். ரூ.21,000 க்கும் குறைவான வருமானம் ஈட்டும் ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் தங்கள் பங்களிப்புகளை அதிகரிக்க வேண்டியிருக்கும். இதனால் செயல்பாட்டு செலவுகள் அதிகமாகும்.

EPFO Interest Rate: இபிஎஃப்ஓ வட்டி விகிதம்

இந்த மாதம் 28 ஆம் தேதி நடக்கவுள்ள CBT கூட்டத்தில் வட்டி விகிதம் 0.10% அதிகரிக்கப்பட்டு 8.35 ஆக அதிகரிக்கப்படலாம் என ஒரு சாரார் கூறுகின்றனர். அரசு தொடர்ந்து ஊழியர்களுக்கு அனுகூலமான பல முடிவுகளை எடுத்து வருவதால், இந்த அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், சில குறிப்பிட்ட காரணங்களால் இபிஎஃப் வட்டி விகிதம் இப்போது இருக்கும் 8.25% -இலேயே தொடரலாம் என்றும் ஒரு சாரார் கூறி வருகின்றனர். தெளிவான விவரம் CBT கூட்டத்திற்கு பிறகு தெரியவரும். இதற்கிடையில், EPFO ​​உறுப்பினர்களுக்கு நிலையான வட்டி விகிதங்களை அறிமுகப்படுத்துவது குறித்தும் அரசாங்கம் பரிசீலித்து வருவதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு முக்கிய கோரிக்கைகள்: கூடுதல் ஓய்வூதியம் முதல் பதவி உயர்வு வரை..... காத்திருக்கும் ஜாக்பாட் அறிவிப்புகள்

மேலும் படிக்க | தனியார் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும்... வெளியான முக்கிய தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News