)
EPFO Latest News: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மண்டவியா, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) பற்றிய சில புதிய தகவல்களை வழங்கியுள்ளார். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களின் காத்திருப்பு முடிந்தது
புதிய புதுப்பிப்பின்படி, EPFO பயனர்களின் காத்திருப்பு விரைவில் முடிவுக்கு வரப்போகிறது. ஏனெனில் EPFO பதிப்பு 3.0 மே அல்லது ஜூன் மாதத்திற்குள் தொடங்கப்பட உள்ளது. 9 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு சேவைகளை மேம்படுத்துவதற்காக இந்த மாற்றம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக PF -இல் இருந்து பணம் எடுக்க ஆகும் நேரம் மேலும் குறையும். இதுபற்றி அமைச்சர் கூறிய பிற விவரங்கள் பற்றி இங்கே காணலாம்.
EPFO 3.0: EPFO -வின் புதிய பதிப்பு
புதிய பதிப்பு சிக்கலான மற்றும் நீண்ட படிவங்களை நிரப்புவதற்கான செயல்முறையை அல்லது க்ளெய்ம்களை செட்டில் செய்வது மற்றும் திருத்தங்களைச் செய்வதற்கு ஆகும் நேரத்தை கணிசமாகக் குறைக்கும் என்று அமைச்சர் மன்சுக் மண்டவியா கூறினார். பயனாளிகள் OTP -யை வெரிஃபை செய்து, தங்கள் EPFO கணக்குகள் மற்றும் ஆணைகளை புதுப்பிப்பது, ஓய்வூதியத் தகுதியைக் கண்காணிப்பது போன்றவற்றை செய்யலாம். 'வலுவான ஐடி தளத்தின் உதவியுடன் EPFO விரைவில் பதிப்பு 3.0 ஐ செயல்படுத்தும்.' என்று அவர் கூறினார்.
EPFO ATM Withdrawal: ஏடிஎம் -இல் இருந்து பணம் எடுக்கலாம்
இதனுடன், ஆட்டோ-கிளைம் செட்டில்மென்ட், டிஜிட்டல் திருத்தம் மற்றும் ஏடிஎம் மூலம் பணத்தை எடுக்கும் வசதி ஆகியவையும் கிடைக்கும். இதை மே அல்லது ஜூன் மாதத்திற்குள் தொடங்க அரசாங்கம் திட்டம் தீட்டியுள்ளது. இந்த செயல்முறை சேவைகளை எளிதாக்கும். மேலும் EPFO அணுகக்கூடிய வகையில் மேம்பட்டு அதன் திறன் மேலும் அதிகரிக்கும். இதன் மூலம் க்ளெய்ம்கள் விரைவில் செட்டில் செய்யப்படும். இதன் காரணமாக வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் பணம் விரைவாக வரவு வைக்கப்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Pension System: ஓய்வூதிய முறை
இது தவிர, EPFO -வின் கீழ், ஓய்வூதிய காப்பீட்டை நெறிப்படுத்தி வலுப்படுத்தும் நோக்கத்துடன் பல திட்டங்களை ஒருங்கிணைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, அடல் ஓய்வூதிய திட்டம், பிரதம மந்திரி ஜீவன் பீமா யோஜனா மற்றும் ஷ்ராமிக் ஜன் தன் யோஜனா உள்ளிட்ட பல சமூக பாதுகாப்பு திட்டங்களை ஒருங்கிணைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அரசாங்கத்தின் உத்தரவாதத்துடன், EPFO தற்போது சுமார் ரூ.27 லட்சம் கோடி நிதியைக் கொண்டுள்ளது. இபிஎஃப் தொகைக்கு 8.25 சதவீதம் வரை வட்டி கிடைக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ