)
EPF Withdrawal Rules: இபிஎஃப் உறுப்பினரா நீங்கள்? மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறோர்களா? அப்பயென்றால் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மத்திய அரசு PF ஊழியர்களுக்காக ஒரு புதிய திட்டத்தை உருவாக்கி வருகிறது. இது ஊழியரளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த புதிய வுதிகளை பற்றி இங்கே காணலாம்.
இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் தொகை பெரும்பாலும் பணி ஓய்வுக்கு பிறகு எடுக்கப்படுகின்றது. எனினும், வேறு சில சந்தர்ப்பங்களிலும் இந்த தொகையை எடுக்கலாம்.
EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு முக்கிய தகவல்
இப்போது, இபிஎஃப் கணக்கிலிருந்து (EPF Account) பணத்தை எடுப்பதை எளிதாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இனி, EPF கணக்கு UPI உடன் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊழியர்களுக்கு இந்த செயல்முறை இன்னும் எளிதாகிவிடும். புதிய விதி அமலுக்கு வந்தவுடன் இபிஎஃப் சந்தாதாரர்கள் தங்கள் PF கணக்கிலிருந்து டிஜிட்டல் வாலட் மூலம் பணம் எடுக்கலாம்.
EPF Subscribers: இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு புதிய விதிகள்
இந்தத் திட்டத்திற்கான வரைபடத்தையும் EPFO தயாரித்துள்ளது. இது விரைவில் செயல்படுத்தப்படலாம். ஜூன் 2025 க்குள் EPFO புதிய விதிகளை செயல்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. UPI தவிர, ATM மூலமாகவும் பணத்தை எடுக்க வழிவகை செய்யப்படும். தற்போது, இபிஎஃப் உறுப்பினர்கள் EPF-ல் இருந்து பணம் எடுக்க முதலில் விண்ணப்பிக்க வேண்டும். பணம் கணக்கில் மாற்றப்பட ஒரு வாரத்திற்கும் மேலாகும்.
திட்டம் தீட்டும் EPFO
EPF உடன் UPI -ஐ ஒருங்கிணைந்த பிறகு, ஊழியர்கள் தங்கள் டிஜிட்டல் பணப்பையிலிருந்து நேரடியாக பணத்தை எடுக்கலாம் என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இது பணம் எடுக்கும் செயல்முறையை விரைவாகவும் எளிதாகவும் மாற்றும். அரசு புதிய திட்டத்தை ஜூன் 2025 க்குள் செயல்படுத்தக்கூடும். ஊழியரின் சம்பளம்தான் முதலாளியின் பங்களிப்பை தீர்மானிக்கும் என்பதால், இந்த விதி மாற்றத்தால், முதலாளியின் மீது கூடுதல் நிதிச் சுமை எதுவும் ஏற்படாது.
EPF Claim Settlement: இபிஎஃப் க்ளெய்ம்
இந்த புதிய வசதி தொடங்கிய பிறகு, பதிவுசெய்யப்பட்ட பயனர்களுக்கு டிஜிட்டல் வாலட் மூலம் க்ளெய்ம்கள் விரைவாக செட்டில் செய்யப்படும்.
EPF ATM Withdrawal: இபிஎஃப் தொகையை இனி ஏடிஎம் -இலும் எடுக்கலாம்
இபிஎஃப் உறுப்பினர்கள் இனி இபிஎஃப் தொகையை (EPF Amount) ATM -இலிருந்தும் எடுக்க முடியும். தற்போது இபிஎஃப் கணக்கிலிருந்து பணம் எடுக்க குறைந்தபட்சம் 7 நாட்கள் ஆகின்றன. ஆனால், இபிஎஃப் யுபிஎஃஒ இணைப்பிற்கு பிறகும், ஏடிஎம் வசதி வந்த பின்னரும், சில மணி நேரங்களிலேயே பணத்தை எடுக்கலாம். இதில் க்ளெய்ம் நிராகரிக்கப்படும் பிரச்சனை இருக்காது. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த பரிவர்த்தனைகள் அதிக வெளிப்படைத்தன்மையைக் கொண்டிருக்கும். EPFO 3.0 திட்டம் ATM களின் மூலம் ஊழியர்களுக்கு எளிய மற்றும் மேம்பட்ட வழிகளில் பணம் எடுக்கும் வசதியையும் வழங்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ