EPFO Withdrawal Rules: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு முக்கிய செய்தி உள்ளது. ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதன் உறுப்பினர்களுக்கான குறிப்பிடத்தக்க மாற்றத்தை அறிவித்துள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, வேலையின்மையின் போது ப்ரீமெச்யூர் ஃபைனல் செட்டில்மெண்ட் மற்றும் வழக்கமான ஃபைனல் செட்டில்மெண்ட் ஆகியவற்றை பெறுவதற்கான கால அவகாசத்தை தற்போதுள்ள இரண்டு மாதங்களிலிருந்து 12 மாதங்களாக உயர்த்தியுள்ளது. மத்திய தொழிலாளர் அமைச்சர் மன்சுக் மண்டவியா தலைமையில் நடைபெற்ற EPFO -வின் மத்திய அறங்காவலர் குழு (CBT) கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு மாற்றம்
முந்தைய இரண்டு மாதங்களுடன் ஒப்பிடும்போது, EPFO உறுப்பினர்கள் இப்போது 12 மாத வேலையின்மைக்குப் பிறகு தங்கள் முழு வருங்கால வைப்பு நிதி இருப்பையும் திரும்பப் பெற முடியும். இதேபோல், ஓய்வூதியக் கணக்குகளில் (EPS Pension) இருந்து முழுமையாக பணம் எடுக்கும் காலக்கெடு இரண்டு மாதங்களிலிருந்து 36 மாதங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை அமைப்பு சார்ந்த தனியார் துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஓய்வூதியத் தகுதி குறித்த கவலைகள்
பெரும்பாலான இளைஞர்கள் வேலையின்மையின் போது தங்கள் முழு பிஎஃப் தொகையையும் அவசரமாக திரும்பப் பெறுகிறார்கள். அவர்கள் பின்னர் மீண்டும் வேலைக்குச் சேரும்போது, ஓய்வூதியத் தகுதிக்குத் தேவையான குறைந்தபட்ச 10 ஆண்டு சேவைக் காலத்தை முடிக்கத் தவறிவிடுகிறார்கள். இபிஎஃப்ஓ -வின் இந்த சமீபத்திய மாற்றம் உறுப்பினர்கள் தங்கள் ஓய்வூதியத் தகுதி மற்றும் எதிர்கால சேமிப்புகளை இழப்பதைத் தடுக்கும் நோக்கம் கொண்டது.
பகுதியளவு பணத்தைத் திரும்பப் பெறுவதில் நிவாரணம்
முழு பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பகுதியளவு பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான விதிகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. தொழிலாளர் அமைச்சகம் இது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது. இதில், 'பகுதியளவு தொகையை திரும்பப் பெறுவதற்கான 13 கடுமையான விதிகள் நீக்கப்பட்டு, பார்ஷியல் வித்டிராயலுக்கான விதிகள் மூன்று பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளன: அத்தியாவசியத் தேவைகள் (நோய், கல்வி, திருமணம்), வீட்டுத் தேவைகள் மற்றும் சிறப்பு சூழ்நிலைகள். பணியாளர் மற்றும் முதலாளி பங்களிப்புகள் உட்பட, உறுப்பினர்கள் இப்போது தங்கள் முழு PF கணக்கு இருப்பையும் திரும்பப் பெறலாம்.' என தெரிவிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் இப்போது தங்கள் தேவைகளுக்கு ஏற்ப தங்கள் பங்களிப்பில் 100% வரை பகுதியளவு தொகையை திரும்பப் பெறலாம். இருப்பினும், உறுப்பினர்கள் தங்கள் பங்களிப்புகளில் குறைந்தபட்சம் 25% இருப்பு வைத்திருக்க வேண்டும் என்ற ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.
பணி ஓய்வுக்கான பாதுகாப்பான சேமிப்பு
இந்த நடவடிக்கை உறுப்பினர்கள் உடனடி நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதை எளிதாக்குவது மட்டுமல்லாமல், நீண்ட காலத்திற்கு அதிக வட்டி விகிதங்கள் மற்றும் கூட்டுப் பலன்களின் பலனையும் உறுதி செய்யும் என்று அமைச்சகம் கூறுகிறது. இது ஓய்வு பெறும் நேரத்தில் அவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் பெரிய சேமிப்புத் தொகை இருப்பதை உறுதி செய்யும். இந்த மாற்றம் EPFO உறுப்பினர்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட ஒரு தொலைநோக்கு முடிவாகும். இது குறுகிய காலத் தேவைகளுக்கும் நீண்ட காலப் பாதுகாப்பிற்கும் இடையில் சமநிலையைப் பராமரிக்க உதவுகிறது.
மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: மிடில் கிளாசுக்கு தீபாவளி பரிசா? வருமா 'அந்த' முக்கிய அப்டேட்
மேலும் படிக்க | தமிழ்நாட்டின் 4 மாவட்ட விவசாயிகளுக்கு குட் நியூஸ்! மத்திய அரசின் சூப்பர் திட்டம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









