)
EPF Withdrawal Rules: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு முக்கிய செய்தி. சமீபத்தில் இபிஎஃப் செயல்முறைகளில் பல வித மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இபிஎஃப் உறுப்பினர்களுக்கு இவற்றின் புரிதல் இருக்க வேண்டியது மிக அவசியமாகும். குறிப்பாக இபிஎஃப் கணக்கிலிருந்து பணம் எடுக்கும் விதிகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இபிஎஃப் பணத்தை எடுக்க எந்த அவணமும் தேவையில்லை
- ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஊழியர்களின் வசதியை அதிகரிக்க முக்கிய சில முடிவுகளை எடுத்துள்ளது.
- இப்போது EPFO -வில் இருந்து பணத்தை எடுக்க எந்த ஆவணமும் தேவையில்லை.
- மத்திய அரசு இது குறித்து நாடாளுமன்றத்தில் தெளிவான தகவலை வழங்கியுள்ளது.
- மேலும் இந்த விதி ஏற்கனவே அமலில் உள்ளது.
EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களின் செல்ஃப் டிக்லரேஷன் போதுமானது
- நாடாளுமன்றத்தில் இது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் பதிலளித்தது.
- EPFO உறுப்பினர்கள் கல்வி, திருமணம், வீடு வாங்குதல், நோய் சிகிச்சை அல்லது அவசரநிலை போன்ற தேவைகளுக்கு பணம் எடுக்க விரும்பினால், அவர்கள் இப்போது எந்த ஆவணத்தையும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை என்று கூறப்பட்டுள்ளது.
- செல்ஃப் டிக்லரேஷன் மூலமாகவெ பணத்தை எடுக்க முடியும்.
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொடுத்த விளக்கம்
- மக்களவை எம்.பி.க்கள் விஜய்குமார் விஜய் வசந்த், மாணிக்கம் தாகூர் பி மற்றும் சுரேஷ் குமார் ஷெட்கர் ஆகியோர் ஊழியர்களின் பகுதியளவு பணத்தை எடுக்க EPFO சுய அறிவிப்புகளை மட்டுமே நம்பியிருப்பது ஏன் என்ற கேள்வியை எழுப்பினர்.
- இதற்கு, செயல்முறையை எளிதாகவும், வெளிப்படையாகவும், நம்பகமானதாகவும் மாற்ற இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் பதிலளித்தது.
இந்த செயல்முறை 2017 இல் தொடங்கப்பட்டது
- இந்த மாற்றம் 2017 இல் அறிமுகப்படுத்தப்பட்ட காம்போசிட் க்ளெய்ம் படிவம் மூலம் செயல்படுத்தப்பட்டதாக அரசாங்கம் கூறியது.
- இதன் கீழ், EPFO பகுதியளவு மற்றும் பணி ஓஉவுக்கு பிறகு பணம் எடுக்கும் செயல்முறையை எளிதாக்கியது.
- ஆவணங்களின் தேவை நீக்கப்பட்டு உறுப்பினர்களின் சுய அறிவிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
வங்கிகள் தொடர்பான சிக்கல்களும் தீர்க்கப்படும்
- வங்கி பாஸ்புக் அல்லது காசோலையின் புகைப்படங்கள் மோசமான தரத்தில் இருந்தால், உறுப்பினர்களின் பல கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன.
- இப்போது இந்த சிக்கலும் தீர்க்கப்பட்டுள்ளது.
- காசோலை அல்லது பாஸ்புக்கின் படத்தை பதிவேற்ற வேண்டிய அவசியம் ஏப்ரல் 3, 2025 முதல் நீக்கப்பட்டது.
- இது KYC அல்லது வங்கிக் கணக்கு சரிபார்ப்பில் உள்ள சிக்கல்களை பெருமளவில் குறைத்துள்ளது.
1.9 கோடிக்கும் அதிகமான மக்கள் பயனடைந்துள்ளனர்
- ஜூலை 22, 2025 முதல் இதுவரை 1.9 கோடிக்கும் அதிகமான EPF உறுப்பினர்கள் இந்த புதிய செயல்முறையால் பயனடைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
- EPFO க்ளெய்ம் செயல்முறையை எளிமையாகவும் நம்பகமானதாகவும் மாற்றுவதற்கான அரசின் நடவடிக்கைகளில் இந்த மாற்றம் ஒரு முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகின்றது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ