EPF Withdrawal Rules: இந்தியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட துறைகளில் பணிபுரியும் நபர்கள் மாதா மாதம் தங்கள் ஊதியத்தில் 12% -ஐ இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் டெபாசிட் செய்கிறது. மாத ஊதியம் பெறும் தனிநபர்களுக்கு நீண்டகால நிதி பாதுகாப்பை வழங்கும் ஒரு முக்கியமான சேமிப்புத் திட்டமாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) உள்ளது.
EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கான சேமிப்பு நிதி
பொதுவாக பணி ஓய்வுக்கு பின்னரே இபிஎஃப் தொகையை (EPF Amount) பலர் எடுக்கிறார்கள். இது பணி ஓய்வு காலத்திற்கான கார்பஸாக பார்க்கப்படுகின்றது. எனினும், குறிப்பிட்ட சூழ்நிலைகளில் உறுப்பினர்கள் தங்கள் நிதியில் ஒரு பகுதியை எடுக்க ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அனுமதிக்கிறது. பணி ஓய்வுக்கு முன்னர் எந்தெந்த சந்தர்ப்பங்களில் இபிஎஃப் தொகையை எடுக்கலாம்? இதற்கான வரம்புகள் மற்றும் நிபந்தனைகள் என்ன? இந்த வரங்களை இங்கே காணலாம்.
1. Medical Emergencies: மருத்துவ அவசரநிலைகள்
- இதற்கு குறைந்தபட்ச உறுப்பினர் சேவை காலம் தேவை இல்லை
- இபிஎஃப் உறுப்பினர், அவரது வாழ்க்கைத் துணை, குழந்தைகள் அல்லது பெற்றோரின் சிகிச்சைக்காக இந்த தொகையை எடுக்கலாம்.
இவை இரண்டில் எது குறைவோ அந்த தொகை கிடைக்கும்:
- 6 மாத அடிப்படை சம்பளம் + அகவிலைப்படி (DA), அல்லது
- பணியாளரின் மொத்த பிஎஃப் பங்களிப்பு (முதலாளியின் பங்கைத் தவிர்த்து)
தேவைக்கேற்ப இந்த பணத்தை திரும்பப் பெறலாம். மேலும் EPF நிதியை அணுகுவதற்கான எளிதான மற்றும் வேகமான வழியாக இது கருதப்படுகிறது.
2. Higher Education of Children: குழந்தைகளின் உயர்கல்வி
- குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் EPF உறுப்பினராக இருந்திருக்க வேண்டும்.
- 10 ஆம் வகுப்புக்குப் பிறகு மெட்ரிக் கல்விக்கு பிந்தைய கல்விக்கு மட்டுமே இதை எடுக்க முடியும்.
- ஊழியரின் பங்கில் 50% வரையிலான (வட்டி உட்பட) தொகையை எடுக்கலாம்.
- அதிகபட்சம் 3 முறை (திருமணத்திற்காக எடுக்கப்படும் தொகையையும் சேர்த்து) பயன்படுத்தலாம்.
இந்த வசதி குழந்தைகளின் உயர்கல்வியின் போது எதிர்கொள்ளப்படும் நிதிச் சுமையைக் குறைக்க உதவும்.
3. Marriage Expenses: திருமணச் செலவுகள்
- இபிஎஃப் உறுப்பினரின், குழந்தைகள் அல்லது உடன்பிறந்தவர்களின் திருமணங்களுக்காக பணத்தை எடுக்கலாம்.
- இதற்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் EPF உறுப்பினராக இருந்திருக்க வேண்டும்.
- ஊழியரின் பங்கில் 50% வரை (வட்டியுடன்) கிடைக்கும்.
- மொத்தத்தில் இந்த வகையின் கீழ் அதிகபட்சம் 3 முறை பணம் எடுக்க அனுமதிக்கப்படுகிறது.
நீண்ட கால சேமிப்பை முற்றிலுமாக சீர்குலைக்காமல் பெரிய சமூகச் செலவுகளைச் சமாளிக்க இந்த விதி உதவுகிறது.
4. Purchase or Construction of House or Loan Repayment: வீடு வாங்க / கட்ட / வீட்டு கடனை அடைக்க
வீடு/பிளாட் வாங்க / கட்ட
- இதற்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இபிஎஃப் கணக்கில் (EPF Account) பங்களித்திருக்க வெண்டும்.
அதிகபட்சமாக வித்ட்ராயல் பின்வருவனவற்றை அடிப்படையாகக் கொண்டது:
- 24 முதல் 36 மாத அடிப்படை சம்பளம் + அகவிலைப்படி, அல்லது
- மொத்த EPF கார்பஸ் (பணியாளர் + முதலாளி + வட்டி), அல்லது
- வீட்டின் மொத்த விலை
இவற்றில் எது குறைவோ அதை பெற முடியும்
வீட்டுக் கடனை அடைக்க:
- இதற்கு 10 வருட சேவை தேவை.
- 36 மாதங்களுக்கான அடிப்படை ஊதியம் அல்லது நிலுவையில் உள்ள கடன் தொகை. இரண்டில் எது குறைவோ அது கிடைக்கும்.
இந்த விருப்பம் சொத்து உரிமைக்கான நிதி இடைவெளியைக் குறைக்க உதவுகிறது.
5. Home Renovation or Repair: வீடு புதுப்பித்தல் அல்லது பழுதுபார்ப்பு
- வீடு கட்டிய 5+ ஆண்டுகளுக்குப் பிறகு இதை பெறலாம்.
- இதை 10 வருடங்களுக்கும் ஒரு முறை பெறலாம்
12 மாத அடிப்படை சம்பளம் + அகவிலைப்படி அல்லது EPF இருப்பு. இரண்டில் எது குறைவோ அது கிடைக்கும்.
வீட்டிலதேவைப்படும் பெரிய அளவிலான மேம்பாடுகள் அல்லது பழுதுபார்ப்புகளுக்கு இது ஏற்றது.
6. Retirement Nearing: பணி ஓய்வை நெருங்கும் காலம் (வயது 54+)
ஓய்வு பெறுவதற்கு ஒரு வருடம் முன்பு இதை எடுக்கலாம்
- மொத்த EPF நிதியில் 90% வரை பெறலாம்.
- இந்த வகையில் ருமுறாய்தான் பணம் பெற முடியும்.
ஓய்வு பெறுவதற்கு சற்று முன்பு ஏற்படும் பணப்புழக்கத்தைப் பாதுகாக்க உதவுகிறது.
7. Loss of Job: வேலை இழப்பு, ஊதியம் வழங்கப்படாத நிலை அல்லது சட்டப்பூர்வ சிக்கல்கள்
- ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டாலோ அல்லது நீதிமன்றத்தில் பணிநீக்கத்தை எதிர்த்தாலோ, அந்த சந்தர்ப்பங்களில் இதன் கீழ் இபிஎஃப் தொகையை எடுக்கலாம்.
- முதலாளி / நிறுவனம் 2+ மாதங்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை என்றால் (வேலைநிறுத்தத்தின் போது தவிர) இதை கோரலாம்.
- பங்களிப்பில் 50% வரை நீங்கள் திரும்பப் பெறலாம்
- நிறுவனம் 15 நாட்கள் அல்லது அதற்கு மேல் மூடப்பட்டிருந்தாலும் இது அனுமதிக்கப்படும்
இந்த விதி வேலை இழப்பு அல்லது நிதி நெருக்கடியின் போது நிவாரணம் அளிக்கிறது.
EPF என்பது ஓய்வூதிய நிதியாக இருப்பதோடு ஒரு நம்பகமான அவசர நிதியாகவும் உள்ளது. இருப்பினும், இபிஎஃப் கணக்கிலிருந்து அவ்வப்போது பகுதியளவு தொகையை எடுப்பது நீண்டகால சேமிப்பு மற்றும் வட்டி கூட்டுத்தொகையைப் பாதிக்கும் என்பதால், இவற்றை கவனமாகத் திட்டமிட்டு செய்ய வேண்டு. பல்வேறு வகைகளின் கீழ், பணத்தை எடுக்கும் முன், எப்போதும் அதற்கான தகுதியைச் சரிபார்ப்பது நல்லது. தேவைப்பட்டால், அலுவலகத்தில் உள்ள மனிதவளத் துறை அல்லது அதிகாரப்பூர்வ EPFO போர்ட்டலில் உதவி கோரலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









