EPF Withdrawal Rules: பணி ஓய்வுக்கு முன் எந்தெந்த சந்தர்ப்பங்களில் இபிஎஃப் தொகையை எடுக்க முடியும்? இதற்கான நிபந்தனைகள் என்ன? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

EPFO Withdrawal Rules: தனியார் துறை ஊழியரா நீங்கள்? மாதா மாதம் இபிஎஃப் கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்கிறீர்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். ஊழியர்கள் தங்கள் கணக்கில் டெபாசிட் செய்யும் அதே அளவு தொகையை நிறுவனமும் டெபாசிட் செய்கிறது. ஊழியர்களின் பணி ஓய்வுக்கு பிறகான காலத்திற்கான சேமிப்பாக இபிஎஃப் கணக்கு கருதப்படுகின்றது.
EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கான முக்கிய தகவல்
பெரும்பாலும் இபிஎஃப் கணக்கில் உள்ள தொகை பணி ஓய்வுக்கு பிறகு எடுக்கப்படுகின்றது. எனினும், சில சமயங்களில் பணி ஓய்வுக்கு முன்னரும், இந்த தொகையை எடுக்கலாம். இபிஎஃப் தொகையை எப்போது, எப்படி, எவ்வளவு எடுக்க முடியும் என்று உங்களுக்குத் தெரியுமா? ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) இதற்காக சில விதிகளை உருவாக்கியுள்ளது. அவற்றுக்கும் சில நிபந்தனைகள் உள்ளன. எந்தப் பிரச்சினையையும் சந்திக்காமல் இபிஎஃப் தொகையை எடுக்க இந்த விதிகளை பற்றி புரிந்துகொள்வது முக்கியம்.
பணி ஓய்வுக்கு முன் எந்தெந்த சந்தர்ப்பங்களில் இபிஎஃப் தொகையை எடுக்க முடியும்? இதற்கான நிபந்தனைகள் என்ன? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Marriage: திருமணத்திற்காக இபிஎஃப் தொகையை எடுக்கலாம்
EPFO விதிகளின்படி (பாரா 68K), திருமணத்திற்காக PF இலிருந்து பணத்தை எடுக்கலாம். இதற்கு, இபிஎஃப் உறுப்பினர்கள் குறைந்தது 7 ஆண்டுகள் EPF இல் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். மேலும் இபிஎஃப் கணக்கில் குறைந்தபட்சம் ரூ.1,000 இருக்க வேண்டும். உங்கள் பங்களிப்பில் 50% வரை (வட்டி உட்பட) நீங்கள் எடுக்கலாம். இந்தப் பணத்தை உங்கள், உடன்பிறந்தவர்களின் அல்லது குழந்தைகளின் திருமணத்திற்குப் பயன்படுத்தலாம்.
Education: குழந்தைகளின் கல்விக்கான பணம் எடுக்கலாம்
EPFO விதிகளின் கீழ், உங்கள் குழந்தைகளின் கல்விக்காக PF இலிருந்து பணத்தையும் எடுக்கலாம். இதற்கும் 7 ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டியது அவசியம். உங்கள் பங்களிப்பில் 50% வரை (வட்டி உட்பட) திரும்பப் பெறலாம், ஆனால் இந்த வசதி வாழ்நாளில் 3 முறை மட்டுமே கிடைக்கும்.
Building a House: வீடு வாங்க அல்லது கட்ட
இபிஎஃப் உறுப்பினர்கள் ஒரு வீட்டை வாங்க, கட்ட அல்லது பழுதுபார்க்க விரும்பினால், EPFO விதிகளின் கீழ் PF இலிருந்து பணத்தை எடுக்கலாம் (பாரா 68B). இதற்கு, குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் EPF -இல் உறுப்பினராக இருந்திருக்க வேண்டியது அவசியம். வீடு பழுதுபார்க்க, வீடு கட்டப்பட்ட 5 ஆண்டுகளுக்குப் பிறகு பணத்தை எடுக்கலாம். கூடுதல் பழுது தேவைப்பட்டால், முதல் முறை பணத்தை எடுத்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு பணத்தை எடுக்கலாம். இந்த நோக்கத்திற்காக ஒரு முறை மட்டுமே பணத்தை எடுக்க அனுமதிக்கப்படுகிறது.
Medical Needs: மருத்துவத் தேவைகளுக்கு
மருத்துவத் தேவைகளுக்காக PF இலிருந்து பணத்தை எடுப்பதற்கான விதிகள் மிகவும் எளிமையானவை. EPFO விதிகளின்படி (பாரா 68J), EPF இல் சேர்ந்த உடனேயே கூட, எந்த நேரத்தில் வேண்டுமானாலும், இந்த தேவைக்காக பணத்தை எடுக்கலாம். தேவைப்பட்டால், இந்தத் தேவைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் பணத்தை திரும்பப் பெறலாம்.
Before retirement: ஓய்வு பெறுவதற்கு முன்
EPFO விதிகளின்படி (பாரா 68NN), ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கு ஒரு வருடம் இருந்தால், அவர் தனது மொத்த PF நிதியில் 90% வரை திரும்பப் பெறலாம். இந்த வசதி ஒரு முறை மட்டுமே கிடைக்கும்.
Unemployment: வேலையின்மை
உங்கள் நிறுவனம் அல்லது அமைப்பு 15 நாட்களுக்கு மேல் மூடப்பட்டு, இழப்பீடு இல்லாமல் நீங்கள் வேலையில்லாமல் இருந்தால், EPFO விதிகளின் கீழ் (பாரா 68H) உங்கள் இபிஎஃப் பங்களிப்பை நீங்கள் திரும்பப் பெறலாம். நீங்கள் தொடர்ந்து 2 மாதங்களுக்கும் மேலாக சம்பளம் பெறவில்லை என்றால், உங்கள் பங்கையும் நீங்கள் திரும்பப் பெறலாம்.
Loan Repayment: கடனைத் திருப்பிச் செலுத்த
இபிஎஃப் உறுப்பினர்கள் ஒரு வீட்டை வாங்க, கட்ட அல்லது பழுதுபார்க்க கடன் வாங்கியிருந்தால், அதன் நிலுவையில் உள்ள அசல் மற்றும் வட்டியை செலுத்த PF இலிருந்து பணத்தை எடுக்கலாம். EPFO விதிகளின்படி (பாரா 68BB), இதற்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் EPF உறுப்பினராக இருந்திருக்க வேண்டியது அவசியம். நீங்கள் 36 மாத அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி அல்லது ஊழியர்-நிறுவனத்தின் மொத்த பங்களிப்பு அல்லது நிலுவையில் உள்ள கடன் தொகையை (எது குறைவாக இருந்தாலும்) திரும்பப் பெறலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ