EPF Withdrawal Rules: PF கணக்கிலிருந்து எப்போது, எவ்வளவு பணம் எடுக்க முடியும்? இதற்கான விதிகள் என்ன?

EPF Withdrawal Rules: PF தொடர்பான விதிகளை EPFO உருவாக்கியுள்ளது. அதில் ஒரு ஊழியர் தனது PF தொகையில் எவ்வளவு சதவீதத்தை, எப்போது எடுக்கலாம், இதற்கான காரணிகள் என்ன என அனைத்து தகவல்களும் அளிக்கப்பட்டுள்ளன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 18, 2025, 09:24 PM IST
  • தனியார் துறை ஊழியரா நீங்கள்?
  • உங்கள் சம்பளத்திலிருந்து இபிஎஃப் கணக்கில் ஒரு தொகையை டெபாசிட் செய்கிறீர்களா?
  • அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
EPF Withdrawal Rules: PF கணக்கிலிருந்து எப்போது, எவ்வளவு பணம் எடுக்க முடியும்? இதற்கான விதிகள் என்ன?

EPF Withdrawal Rules: தனியார் துறை நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியரா நீங்கள்? மாதா மாதம் உங்கள் சம்பளத்திலிருந்து இபிஎஃப் கணக்கில் ஒரு தொகையை டெபாசிட் செய்கிறீர்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் தொகை பெரும்பாலும் பணி ஓய்வுக்கு பிறகு எடுக்கப்படுகின்றது. எனினும், வேறு சில சந்தர்ப்பங்களிலும் இந்த தொகையை எடுக்கலாம்.

Add Zee News as a Preferred Source

EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு முக்கிய தகவல்

இபிஎஃப் உறுப்பினர்கள் எந்தெந்த சந்தர்ப்பங்களில் இபிஎஃப் தொகையை எடுக்க முடியும்? இதற்கான விதிகள் என்ன? இதை பற்றி இந்த பதிவில் முழுமையாக காணலாம். 

பொதுவாக இபிஎஃப் கணக்கில் சேர்க்கப்படும் தொகை பணி ஓய்வுக்கு பிறகான காலத்திற்கு சிறந்த நிதி ஆதாரமாக பார்க்கப்படுகின்றது. எனினும், பணி ஓய்வுக்கு முன்னரும், சில அவசர தேவைகள் ஏற்பட்டால், இந்த தொகையை எடுத்து பயன்படுத்தலாம். உங்கள் PF கணக்கிலிருந்து எப்போது, ​​எவ்வளவு பணம் எடுக்கலாம் என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

EPFO: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு

PF தொடர்பான விதிகளை EPFO உருவாக்கியுள்ளது. அதில் ஒரு ஊழியர் தனது PF தொகையில் எவ்வளவு சதவீதத்தை, எப்போது எடுக்கலாம், இதற்கான காரணிகள் என்ன என அனைத்து தகவல்களும் அளிக்கப்பட்டுள்ளன. 

வேலையின்மை ஏற்பட்டால்

ஏதாவது காரணத்தால் இபிஎஃப் சந்தாதாரர் (EPF Subscriber) ஒரு மாதத்திற்கும் மேலாக வேலை இல்லாமல் இருந்தால், அவர் தனது PF கணக்கிலிருந்து 75 சதவீதத் தொகையை எடுக்கலாம்.

நிறுவனம் 6 மாதங்களுக்கு மூடப்பட்டிருந்தால்

ஊழியர் பணிபுரியும் நிறுவனம் 6 மாதங்களுக்கு மூடப்பட்டால், PF கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட முழுத் தொகையையும் திரும்பப் பெற ஊழியருக்கு உரிமை உள்ளது. ஆனால் நிறுவனம் அல்லது தொழிற்சாலை மீண்டும் தொடங்கும்போது, ​​ஊழியர் தனது சம்பளத்துடன் PF-ல் இருந்து எடுக்கப்பட்ட தொகையை 36 தவணைகளில் டெபாசிட் செய்ய வேண்டும்.

பணிநீக்கம் செய்யப்பட்டால்

ஒருவர் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து திடீரென வேலையிலிருந்து நீக்கப்பட்டால், PF-ல் இருந்து பணத்தை எடுக்க அவருக்கு அனுமதி உள்ளது. இந்த சூழ்நிலையில், ஊழியர் PF கணக்கிலிருந்து 50 சதவீதம் வரை பணத்தை எடுக்கலாம்.

15 நாட்களுக்கு மேல் வேலை  இல்லாமல் இருந்தால்

நிறுவனம் 15 நாட்களுக்கு மூடப்பட வேண்டிய அவசர சூழ்நிலை ஏற்பட்டால், அத்தகைய சூழ்நிலையில் ஊழியர் தனது PF கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் 100 சதவீதம் வரை எடுக்கலாம்.

திருமணம், கவ்வி, வீடு வாங்க, கட்ட

இவற்றை தவிர, இபிஎஃப் உறுப்பினர்கள் திருமண செலவிற்கு, கல்விச் செலவிற்கு, வீடு கட்ட, வாங்க ஏற்படும் செலவிற்கும் பகுதியளவு இபிஎஃப் தொகையை எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஓய்வூதிய திட்டம்

EPFO ஊழியர்களுக்கு ஓய்வு பெற்ற பிறகு இரண்டு வழிகளில் PF-ல் இருந்து பணத்தை எடுக்கும் விருப்பத்தை வழங்குகிறது. முதல் விருப்பம் என்னவென்றால், ஊழியர் ஓய்வு பெற்ற பிறகு முழு PF தொகையையும் ஒரே நேரத்தில் எடுக்கலாம். இது தவிர, இபிஎஸ் ஓய்வூதியம் (EPS Pension) மூலம் ஊழியர் ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை ஓய்வூதியமாகப் பெறுகிறார்.

மேலும் படிக்க | UPS vs NPS: உங்களுக்கு ஏற்ற ஓய்வூதிய திட்டம் எது? முழுமையான ஒப்பீடு இதோ

மேலும் படிக்க | தனியார் துறை ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஓய்வூதிய உயர்வு: அதிகரிக்கிறது மாத ஓய்வூதியம்... புதிய அப்டேட் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News