)
EPFO 3.0 Latest News: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO அதன் உறுப்பினர்களின் வாழ்க்கையை எளிதாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அவ்வப்போது EPFO, இபிஎஃப் உறுப்பினர்களின் வசதியை அதிகரிக்கவும், செயல்முறைகளை எளிதாக்கவும், சில புதிய விதிகளை அறிமுகம் செய்கிறது, பழைய விதிகளில் மாற்றங்களை செய்கிறது. அந்த வகையில் கூடிய விரைவில் EPFO 3.0 என்ற மிகப்பெரிய புதுப்பிப்பை EPFO அறிமுகம் செய்யவுள்ளது.
EPFO மூலம் இபிஎஃப் உறுப்பினர்களுக்கு பல வித நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக, இபிஎஃப் தொகையை எடுக்கும் முறையிலும், க்ளெய்ம் செயல்மிறையிலும், கணக்குகளில் செய்யப்படும் திருத்தங்களில் பல மேம்படுத்தல்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னர், EPFO உறுப்பினர்கள் தங்கள் பணத்தை எடுக்க சிறிது சிரமப்பட வேண்டியிருந்தது. இப்போது, பணம் எடுக்கும் செயல்முறையை எளிதாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
EPFO வின் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் குழுவின் (CBT), அடுத்த வாரியக் கூட்டம் அக்டோபர் இரண்டாவது வாரத்தில் நடைபெறும் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டத்தில் ATM மூலம் பிஎஃப் பணம் எடுப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட வாய்ப்புள்ளது.
ATM மூலம் இபிஎஃப் பணத்தை எடுக்கும் வசதி
CBDT உறுப்பினர் ஒருவர், "EPFO வின் IT உள்கட்டமைப்பு அத்தகைய பரிவர்த்தனைகளுக்கு தயாராக உள்ளது என்பதை நாங்கள் அறிவோம்." என்று ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார். "ATM -இல் பணம் எடுப்பதற்கு வரம்பு இருக்கும், ஆனால் இது இன்னும் விவாதிக்கப்படவில்லை." என்று அவர் மேலும் தெரிவித்தார். இன்றைய நிலவரப்படி, EPFO -வின் மொத்த நிதி ₹28 லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளது. அதன் மொத்த உறுப்பினர் அளவு சுமார் 7.8 கோடியாகும்.
உறுப்பினர்கள் தாங்கள் சேர்த்து வைக்கும் இபிஎஃப் தொகையை எளிதாக அணுக வேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறது. இதற்காக, அமைச்சகம் வங்கிகள் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியுடனும் (RBI) ஈடுபட்டு இதற்கான செயல்முறையை எளிதாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. EPFO அதன் உறுப்பினர்கள் ஏடிஎம் மூலம் பணம் எடுப்பதை போல பிஎஃப் பணத்தையும் எடுக்க, சிறப்பு அட்டைகளை வழங்கும் என்று தெரிகிறது.
- இந்த ஆண்டு, EPFO ஏற்கனவே ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையை எடுத்துள்ளது.
- இந்த ஆண்டின் தொடக்கத்தில், EPFO தானியங்கி க்ளெய்ம் தீர்வு வரம்பை ₹1 லட்சத்திலிருந்து ₹5 லட்சமாக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
- இந்த செயல்முறை டிஜிட்டல் காசோலைகள் மற்றும் வழிமுறைகள் மூலம் க்ளெய்ம் தகுதியை தீர்மானிக்கிறது.
- இது கைமுறை சரிபார்ப்புக்கான தேவையை நீக்குகிறது.
EPFO 3.0: புதிய வசதிகள் கிடைக்கும்
- அவசர காலங்களில் EPFO உறுப்பினர்களுக்கு நிதியை விரைவாக அணுக ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் வசதி அளிக்கப்படும்.
- UPI உடன் பிஎஃப் கணக்கு இணைக்கப்பட்டு கட்டணங்கள் எளிதாக்கப்படும். பிஎஃப் கணக்கை PhonePe, Google Pay மற்றும் Paytm போன்ற UPI செயலிகளுடன் இணைக்கலாம்.
- க்ளெய்ம் செய்வதற்கான செயல்முறை எளிதாகும்.
- கணக்கு புதுப்பிப்புகள் இனி வேகமாக இருக்கும். சிறிய தவறுகளை ஆன்லைனில் எளிதாக சரிசெய்யலாம்.
EPFO 3.0 சுருக்கமாக...
- இன்னும் சில நாட்களில் EPFO 3.0 அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுக்கின்றது.
- அக்டோபர் இரண்டாவது வாரத்தில் நடைபெறவுள்ள CBT கூட்டத்தில் இது குறித்த முக்கிய செய்தி கிடைக்கக்கூடும்.
- EPFO 3.0 அமலுக்கு வந்தவுடன் பிஎஃப் உறுப்பினர்களுக்கான வசதிகள் அதிகரிக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ