)
EPFO 3.0 ATM Withdrawal: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு முக்கிய அப்டேட் கிடைத்துள்ளது. ஜனவரி 2026 முதல், EPF சந்தாதாரர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதி சேமிப்பில் உள்ள தொகையை நேரடியாக ATM -களில் இருந்து எடுக்க முடியும். ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) புத்தாண்டு தொடக்கத்தில் இந்த வசதியை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வசதி அமலுக்கு வந்த பின்னர், உறுப்பினர்கள் தேவைப்படும்போது தங்கள் பிஎஃப் நிதியை எளிதாக கணக்கிலிருந்து எடுக்க முடியும் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அக்டோபர் இரண்டாவது வாரத்தில் EPFO -வின் மத்திய அறங்காவலர் குழுவின் (CBT) வாரியக்கூட்டம் நடக்கவுள்ளது. இதில், ATM-ல் இருந்து பணம் எடுக்கும் வசதிக்கான அங்கீகாரம் கிடைக்கும் என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது. EPFO-வின் உயர் முடிவெடுக்கும் அமைப்பாக CBT செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
CBT-யின் உறுப்பினர் ஒருவர் மணிகண்ட்ரோலிடம், "EPFO-வின் IT உள்கட்டமைப்பு அத்தகைய பரிவர்த்தனைகளை அனுமதிக்கத் தயாராக உள்ளது என்பதை நாங்கள் அறிந்தோம்" என்று கூறினார். "ATM-களில் இருந்து பணம் எடுக்க ஒரு குறிப்பிட்ட வரம்பு இருக்கும். இதை பற்றி விவாதிக்கப்பட வேண்டும்." என்று அவர் மேலும் கூறினார்.
தற்போது, PF கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்கு க்ளெய்ம்களை தாக்கல் செய்து அவை செயல்படுத்தப்படும் வரை காத்திருக்க வேண்டும். ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO சுமார் ரூ.27 லட்சம் கோடி மதிப்பிலான மிகப்பெரிய நிதியை நிர்வகிக்கிறது. இபிஎஃப் தொகைக்கு இப்போது 8.25% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. 2024-25 நிதியாண்டில், நிறுவனங்கள் மூலம் தாக்கல் செய்யப்பட்ட 1.25 கோடி மின்னணு சலான் மற்றும் வருமானம் (ECRகள்) மூலம் ரூ.3.41 லட்சம் கோடிக்கு மேல் பங்களிப்புகளை EPFO சேகரித்தது.
கடந்த வாரம், மத்திய தொழிலாளர் அமைச்சர் மன்சுக் மண்டவியா உறுப்பினர்களுக்கு அதிக திறன் படைத்த, வெளிப்படையான மற்றும் யூசர் ஃப்ரெண்ட்லி அதாவது பயனர் நட்பு சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) முக்கிய சீர்திருத்தங்களை எடுத்துரைத்தார். செப்டம்பர் 18 அன்று, EPFO அதன் உறுப்பினர் போர்ட்டலில் 'பாஸ்புக் லைட்' என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இந்தக் கருவி, முழு பாஸ்புக்கையும் தனித்தனியாக அணுக வேண்டிய அவசியமின்றி, உறுப்பினர்கள் தங்கள் பங்களிப்புகள், வித்டிராயல்கள் மற்றும் இருப்பு ஆகியவற்றின் சுருக்கத்தை விரைவாக போர்ட்டலில் நேரடியாகப் பார்க்க அனுமதிக்கிறது.
PF பரிமாற்றங்களை மிகவும் வெளிப்படையானதாக மாற்ற, அனெக்ஷர் K (பரிமாற்றச் சான்றிதழ்)க்கான ஆன்லைன் அணுகலையும் அமைச்சர் அறிமுகப்படுத்தினார். தற்போது, ஊழியர்கள் வேலைகளை மாற்றும்போது, அவர்களின் PF கணக்குகள் படிவம் 13 ஐப் பயன்படுத்தி புதிய நிறுவனத்தின் PF அலுவலகத்திற்கு மாற்றப்படுகின்றன. மாற்றத்திற்குப் பிறகு, முந்தைய PF அலுவலகம் ஒரு பரிமாற்றச் சான்றிதழை (Annexure K) உருவாக்கி புதிய PF அலுவலகத்திற்கு அனுப்புகிறது. இந்தப் புதிய வசதி உறுப்பினர்கள் அனெக்ஷர் K ஐ ஆன்லைனில் அணுக அனுமதிக்கிறது. இது மென்மையான மற்றும் வெளிப்படையான பரிமாற்றங்களை உறுதி செய்கிறது.
முன்னர், அனெக்ஷர் K PF அலுவலகங்களுக்கு இடையே மட்டுமே பகிரப்பட்டது, உறுப்பினர்களுக்கு கோரிக்கையின் பேரில் மட்டுமே கிடைத்தது. புதிய சீர்திருத்தத்தின் மூலம், உறுப்பினர்கள் அனெக்ஷர் K ஐ PDF வடிவத்தில் EPFO உறுப்பினர் போர்ட்டலில் இருந்து நேரடியாக பதிவிறக்கம் செய்யலாம். கூடுதலாக, EPFO அதன் ஒப்புதல் செயல்முறையை நெறிப்படுத்தியுள்ளது. இது முன்னர் RPFC/பொறுப்பு அதிகாரியிடம் இருந்த அதிகாரங்களை உதவி PF ஆணையர்கள் மற்றும் கீழ் மட்டங்களுக்கு கட்டமைக்கப்பட்ட, வரிசைப்படுத்தப்பட்ட முறையில் ஒப்படைத்துள்ளது. இது நடைமுறைகளை விரைவாகவும் திறமையாகவும் மேம்படுத்தும்.
தற்போது, PF பரிமாற்றங்கள், செட்டில்மெண்டுகள், முன்பணங்கள் மற்றும் ரீஃபண்டுகள் போன்ற சேவைகளுக்கு உயர் மட்ட அதிகாரிகளின் (RPFC/பொறுப்பு அதிகாரி) ஒப்புதல் தேவைப்படுகிறது. இந்த மல்டி-ஸ்டெப் ஒப்புதல் செயல்முறை பெரும்பாலும் உறுப்பினர்களின் க்ளெய்ம்களை தாமதப்படுத்தி நீண்ட செயலாக்க நேரங்களையும் ஏற்படுத்தியது குறிப்பிடத்தகது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ