)
EPFO Latest News: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) விரைவில் EPFO 3.0 ஐ அறிமுகப்படுத்த உள்ளது. இதில் பல வித மேம்படுத்தல்கள் இருக்கும். குறிப்பாக, பிஎஃப் கணக்கிலிருந்து பணம் எடுக்கும் செயல்முறை மிகவும் எளிதாகிவிடும். EPFO 3.0 மூலம் கொண்டுவரப்படவுள்ள முக்கிய மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
EPFO 3.0 அமலுக்கு வந்தவுடன் உறுப்பினர்கள் தங்கள் PF கணக்கிலிருந்து நேரடியாக ATM மற்றும் UPI மூலம் உடனடியாக பணம் எடுக்க முடியும். இது ஊழியர்களின் நேரத்தை மிச்சப்படுத்தி செயல்முறையை எளிதாக்கும்.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதன் 8 கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்காக EPFO 3.0 என்ற புதிய டிஜிட்டல் தளத்தை கொண்டு வருகிறது. இந்த புதிய அமைப்பின் மூலம், PF தொடர்பான சேவைகள் இப்போது எளிதாகவும், வேகமாகவும், வெளிப்படையாகவும் மாறும். ஆரம்பத்தில் இது ஜூன் மாதத்தில் தொடங்கப்படவிருந்தது, ஆனால் தொழில்நுட்ப பரிசோதனைகள் காரணமாக சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது.
இன்போசிஸ், விப்ரோ மற்றும் TCS போன்ற பெரிய IT நிறுவனங்கள் இந்த திட்டத்தில் பணியாற்றி வருகின்றன. இந்த புதிய தளம் விரைவில் அனைத்து உறுப்பினர்களுக்கும் கிடைக்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த நவீன அமைப்பு எதிர்காலத்தில் PF சேவைகளை இன்னும் எளிமையாகவும், வேகமாகவும், நம்பகமானதாகவும் மாற்றும்.
- EPFO 3.0 புதிய அமைப்பில், இபிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் PF பணத்தை ATM இலிருந்து நேரடியாக எடுக்க முடியும்.
- இதற்கு, உறுப்பினர்கள் தங்கள் ஆதார் அட்டையை வங்கிக் கணக்குடன் இணைத்து, யுனிவர்சல் கணக்கு எண்ணை (UAN) செயல்படுத்த வேண்டும்.
- இதன் மூலம், பிஎஃப் அலுவலகத்திற்குச் செல்லாமலேயே உறுப்பினர்கள் தங்கள் PF கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியும்.
- EPFO 3.0 UPI மூலம் பணத்தை எடுக்கும் வசதியையும் கொண்டிருக்கும்.
- அதாவது, அவசரநிலை ஏற்படும் போதெல்லாம், UPI மூலம் உறுப்பினர்கள் தங்கள் PF கணக்கிலிருந்து உடனடியாக பணத்தை எடுக்க முடியும்.
- இது விரைவான பணத் தேவைகளுக்கு உதவும்.
EPFO 3.0 இல், ஆன்லைன் க்ளெய்ம் மற்றும் தகவல்களைத் திருத்தும் செயல்முறையும் முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. இப்போது ஊழியர்கள் தங்கள் மொபைலில் OTP சரிபார்ப்பு மூலம் பெயர், பிறந்த தேதி அல்லது பிற தனிப்பட்ட விவரங்களைப் புதுப்பிக்க முடியும். இது நேரத்தை மிச்சப்படுத்துவது மட்டுமல்லாமல், ஆவணங்களை மீண்டும் மீண்டும் சரிபார்க்கும் செயல்முறையையும் அலுவலகம் சென்று அதிகாரிகளைப் பார்க்கும் தேவையையும் முடிவுக்குக் கொண்டுவரும். இதனுடன், ஒரு PF உறுப்பினர் இறந்துவிட்ட சூழலில், அவரது மைனர் குழந்தைகள் அவரது பிஎஃப் பணத்திற்கு உரிமை கோர விரும்பினால், இப்போது அவர்களுக்கு பாதுகாவலர் சான்றிதழ் தேவையில்லை. இந்த மாற்றத்தின் மூலம், குடும்பத்தினர் விரைவில் நிதி உதவியைப் பெற அனுகூலமான சூழல் ஏற்படும்.
EPFO 3.0 புதிதாக வடிவமைக்கப்பட்ட டிஜிட்டல் டேஷ்போர்டுடன் வரும். இதில் உறுப்பினர்கள் தங்கள் மாதாந்திர வைப்புத்தொகை, க்ளெய்ம் நிலை மற்றும் முழுமையான கணக்குத் தகவலை எளிதாகப் பார்க்க முடியும். இது வெளிப்படைத்தன்மை மற்றும் சுயசார்புக்கான ஒரு பெரிய நடவடிக்கையாக பார்க்கப்படுகின்றது.
இது குறித்தும் இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் வரவில்லை என்றாலும், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு அட்டையை வழங்கும் என கூறப்படுகின்றது. இது ஏடிஎம் அட்டையைப் போலவே இருக்கும். இபிஎஃப் உறுப்பினர்கள் இந்த அட்டையுடன் ஏடிஎம்-க்குச் சென்று இதன் உதவியுடன் பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுக்கலாம்.
தொடக்க நிலையில் பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட மொத்தத் தொகையில் 50 சதவீதத்தை ஏடிஎம் மூலம் எடுக்க முடியும் என்று கூறப்படுகின்றது. எனினும், இந்த வரம்பை இபிஎஃப்ஓ பின்னர் அதிகரிக்கக்கூடும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ