)
EPFO 3.0 Latest News: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ -வின் புதிய பதிப்பான EPFO 3.0, ஜூன் 2025 இல், அதாவது இந்த மாதம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. EPFO பதிப்பு 3.0, தானியங்கி க்ளெய்ம் தீர்வுகள், டிஜிட்டல் முறையில் திருத்தங்கள் மற்றும் ATM மூலம் பணம் எடுக்கும் வசதி போன்ற பல வித மாற்றங்களை கொண்டுவரும் என அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஊடகங்களுக்கு முன்னர் தெரிவித்தார்.
EPF Members: இபிஎஃப் உறுப்பினர்கள்
EPFO 3.0 குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும், இது அமலுக்கு வந்தவுடன் இபிஎஃப் உறுப்பினர்களுக்கு பல முக்கிய மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கபடுகின்றது.
- EPF ATM Withdrawal: ஏடிஎம் மூலம் பணம் எடுப்பதற்கான செயல்முறை என்ன? இதன் வரம்பு என்ன?
ஏடிஎம் மூலம் பணம் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு அட்டையை வழங்கும். இது ஏடிஎம் அட்டையைப் போலவே இருக்கும். இபிஎஃப் உறுப்பினர்கள் இந்த அட்டையின் உதவியுடன் ஏடிஎம் மூலம் பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுக்கலாம். ஆரம்பத்தில், கணக்கு வைத்திருப்பவர் தனது பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட மொத்தத் தொகையில் 50 சதவீதத்தை ஏடிஎம் மூலம் எடுக்க முடியும். இருப்பினும், இந்த வரம்பை இபிஎஃப்ஓ பின்னர் அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகின்றது.
- EPFO தடையற்ற செயல்முறை
புதிய பதிப்பு சிக்கலான மற்றும் நீண்ட படிவ நிரப்புதல் செயல்முறைகளியயும் க்ளெய்ம் மற்றும் திருத்தங்களுக்கான இபிஎஃப் அலுவலகங்களுக்கு நேரடியாக செல்ல வேண்டிய தேவைகளையும் நீக்குகிறது.
- OTP Verification: OTP சரிபார்ப்புடன் EPFO கணக்கு புதுப்பிப்பு
பயனாளிகள் OTP சரிபார்ப்பைப் பயன்படுத்தி தங்கள் EPFO கணக்குகள் மற்றும் ஆணைகளைப் புதுப்பிக்க முடியும். மேலும் உறுப்பினர்கள் தங்கள் ஓய்வூதிய உரிமைகளை எளிதாகக் கண்காணிக்கலாம், பணத்தையும் எடுக்கலாம்.
- Social Security Systems: சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் ஒருங்கிணைப்பு
ஓய்வூதியத் திட்டத்தை நெறிப்படுத்தவும் வலுப்படுத்தவும் அடல் ஓய்வூதியத் திட்டம், பிரதம மந்திரி ஜீவன் பீமா யோஜனா மற்றும் ஷ்ராமிக் ஜன் தன் யோஜனா உள்ளிட்ட பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை ஒருங்கிணைப்பதையும் அரசாங்கம் பரிசீலித்து வருவதாக மாண்டவியா கூறினார்.
- Employees State Insurance Corporation: ஊழியர் மாநில காப்பீட்டுக் கழகம்
ஊழியர் மாநில காப்பீட்டுக் கழகத்தின் (ESIC) கீழ் உள்ள பயனாளிகள் விரைவில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்ட மருத்துவமனைகளில் இலவச மருத்துவ சிகிச்சையைப் பெற முடியும் என கூறப்படுகின்றது.
- Charity-Run Private Hospitals Under ESIC Ambit: ESIC-இன் கீழ் தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படும் தனியார் மருத்துவமனைகள்
சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்காக, தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் தனியார் மருத்துவமனைகளும் ESIC வரம்பிற்குள் கொண்டுவரப்படும். தற்போது, ESIC 165 மருத்துவமனைகள், 1,500க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் மற்றும் சுமார் 2,000 எம்பேனல் மருத்துவமனைகள் மூலம் சுமார் 18 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சையை வழங்குகிறது.
- EPF Withdrawal through ATM, UPI: உறுப்பினர்கள் விரைவில் UPI மற்றும் ATM மூலம் PF பணத்தை எடுக்க முடியும்
EPFO, ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) வழியாக PF பணத்தை எடுக்கும் புதிய முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு செயலாளர் சுமிதா தாவ்ரா முன்பு செய்தி நிறுவனமான ANI இடம் NPCI-யின் பரிந்துரையை அமைச்சகம் அங்கீகரித்துள்ளதாகவும், இந்த ஆண்டு மே அல்லது ஜூன் மாத இறுதிக்குள் UPI மற்றும் ATM மூலம் உறுப்பினர்கள் PF பணத்தை எடுக்கலாம் என்றும் கூறியிருந்தார். இது வங்கிகளின் பொது வருங்கால வைப்பு நிதி (PPF), அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி (GPF) போன்ற பிற திட்டங்களின் உறுப்பினர்களுக்கும் ஒரு நல்ல முன்னோடித் திட்டமாக இருக்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ