)
EPFO 3.0 Latest News: நாட்டின் கோடிக்கணக்கான தனியார் துறை ஊழியர்களுக்கு ஒரு சிறந்த செய்தி உள்ளது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) விரைவில் EPFO 3.0 ஐ அறிமுகப்படுத்த உள்ளது. இதன் காரணமாக வருங்கால வைப்பு நிதி கணக்கிலிருந்து (PF) பணம் எடுப்பது இப்போது மிகவும் எளிதாகவும் வேகமாகவும் இருக்கும்.
EPFO 3.0 -இல் ஊழியர்களின் வசதிகளை அதிகரிக்கும் பல முக்கிய மாற்றங்கள் இடம்பெறும் என கூறப்படுகின்றது. குறிப்பாக, இபிஎஃப் உறுப்பினர்கள் நிமிடங்களில் ₹ 1 லட்சம் வரை பணம் எடுக்க முடியும்., இதற்காக அவர்கள் முன்பை போல நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதில்லை.
இதுவரை, PF இலிருந்து பணம் எடுக்க, ஒருவர் ஆன்லைன் போர்ட்டலில் படிவத்தை நிரப்ப வேண்டியிருந்தது. அது செயல்படுத்தப்பட அதிக நேரம் எடுத்தது. ஆனால் EPFO 3.0 வருகைக்குப் பிறகு, இந்த செயல்முறை முற்றிலும் மாறும்.
EPF UPI, ATM Withdrawal:
ATM மற்றும் UPI இலிருந்து பணம் எடுப்பது: ஊழியர்கள் தங்கள் PF கணக்கிலிருந்து நேரடியாக ATM கார்டு மூலம் ₹ 1 லட்சம் வரை உடனடியாக பணத்தை எடுக்கலாம். அல்லது UPI போன்ற டிஜிட்டல் கட்டண செயலிகள் மூலம் ₹ 1 லட்சம் வரை உடனடியாக மாற்றிக்கொள்ளலாம். அவசர பண தேவைகளின் போது இந்த புதிய வசதிகள் பெரிய வகையில் உதவும்.
Automatic PF Transfer:
தானியங்கி PF பரிமாற்றம்: இபிஎஃப் உறுப்பினர்கள் வேலை மாறும்போது பழைய மற்றும் புதிய PF கணக்குகளை இணைப்பதில் உள்ள தொந்தரவு இப்போது முடிவுக்கு வரும். உறுப்பினர் புதிய நிறுவனத்தில் சேர்ந்தவுடன், உங்கள் PF கணக்கு தானாகவே புதிய நிறுவனத்தின் இணக்குடன் இணைக்கப்படும். இதனால் பணம் எந்த தொந்தரவும் இல்லாமல் மாற்றப்படும்.
- EPFO -வின் வலைத்தளம் மற்றும் மொபைல் செயலி ஆகியவை மேலும் எளிமையாக்கப்படும்.
- இதற்குப் பிறகு, உங்கள் PF இருப்பு, க்ளெய்ம் நிலை மற்றும் பிற அனைத்து தகவல்களையும் உடனடியாக எளிதாகக் காண முடியும்.
- இது தொழில்நுட்பத்தை மிகவும் எளிமையாக்கும்.
- இதன் மூலம் எந்தவொரு நபரும் தனது கணக்கு தொடர்பான அனைத்து தகவல்களையும் எளிதாகப் பெற முடியும்.
- EPFO 3.0 பணம் எடுக்கும் செயல்முறையில் மட்டும் மாற்றங்களை செய்யவில்லை.
- இது ஓய்வூதிய சேவைகளையும் முற்றிலும் டிஜிட்டல் முறையிலான மற்றும் வெளிப்படையான சேவையாக மாற்றுவதற்கான ஒரு திட்டமாகும்.
- இது தவிர, ஆதார் மற்றும் KYC போன்ற டிஜிட்டல் சரிபார்ப்பும் மிகவும் எளிமையாக்கப்படும்.
- இதனால் எந்த ஊழியருக்கும் எந்த பிரச்சனையும் இல்லாமல் அனைத்து பணிகளும் நடங்துமுடியும்.
- இபிஎஃப் உறுப்பினர்களின் PF இருப்பு ஒரு வங்கிக் கணக்கைப் போல நிகழ்நேரத்தில் புதுப்பிக்கப்படும்.
- இந்த புதிய அமைப்பு PF தொடர்பான அனைத்து செயல்முறைகளையும் ஊழியர்களுக்கு மிகவும் வசதியாக மாற்றும்.
EPFO 3.0 நன்மைகள் சுருக்கமாக..........
- EPFO 3.0 டிஜிட்டல் இந்தியாவின் அடுத்த பெரிய மைல்கல்லாக இருக்கும்.
- இதனால் பிஎஃப் உறுப்பினர்களின் செயல்முறைகள் மிக எளிதாகும்.
- இதன் காரணமாக ஊழியர்களுக்கு நேரடி நிதி நெகிழ்வுத்தன்மையை கிடைக்கும்.
- இது வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மீதான உறுப்பினர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும்.
- EPFO 3.0 பணம் எடுக்கும் செயல்முறையில் மட்டும் மாற்றங்களை செய்யவில்லை.
- இது ஓய்வூதிய சேவைகளையும் முற்றிலும் டிஜிட்டல் முறையிலான மற்றும் வெளிப்படையான சேவையாக மாற்றுவதற்கான ஒரு திட்டமாகும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ