)
EPFO 3.0: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. EPFO 3.0 ஐ அறிமுகப்படுத்த ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தயாராகி வருகிறது. 8 கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு வருங்கால வைப்பு நிதி சேவைகளை மேலும் அணுகக்கூடியதாகவும், வெளிப்படையானதாகவும், திறன் படைத்ததாகவும் மேம்படுத்தும் நோக்குடன் EPFO இந்த புதிய டிஜிட்டல் தளத்தை உருவாக்கி வருகின்றது.
முன்னதாக, EPFO 3.0 ஜூன் மாதத்திலேயே அறிமுகம் செய்யப்படும் என திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், இந்த வெளியீடு தொழில்நுட்ப சோதனை காரணமாக தாமதமானது. இறுதி சுற்று தேர்வுக்கு பட்டியலிடப்பட்ட இன்போசிஸ், விப்ரோ மற்றும் TCS போன்ற பெரிய ஐடி நிறுவனங்களின் ஈடுபாட்டுடன் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“EPFO 3.0 ஊழியர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதி கணக்குகளை அணுகும் மற்றும் நிர்வகிக்கும் முறையை மாற்றும். இந்த புதிய பதிப்பு அவர்களுக்கு நெகிழ்வுத்தன்மை மற்றும் தேவைப்படும் நேரங்களில் விரைவான ஆதரவை வழங்கும்,” என்று தொழிலாளர் அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
EPFO 3.0 செயல்படுத்தப்பட்டவுடன் இபிஎஃப் உறுப்பினர்களுக்கு 5 முக்கிய நன்மைகள் கிடைக்கும் என கூறப்படுகின்றது. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
EPF ATM Withdrawal: ATM -களிலிருந்து நேரடியாக PF பணத்தை எடுக்கும் வசதி
இபிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைத்து, அவர்களின் யுனிவர்சல் கணக்கு எண்ணை (UAN) செயல்படுத்தி ATM -களில் இருந்து நேரடியாக வருங்கால வைப்பு நிதி பணத்தை எடுக்க முடியும்.
EPF UPI Withdrawal: UPI மூலம் நேரடியாக PF பணத்தை எடுக்கும் வசதி
இபிஎஃப் உறுப்பினர்கள் உடனடியாக பணம் எடுப்பதற்கு UPI ஐப் பயன்படுத்தும் வசதியை EPFO 3.0 அளிக்கும். இது அவசர காலங்களில் நிதியை எளிதாக அணுக உதவும்.
Online claim and correction facility: ஆன்லைனில் கிளெய்ம் செய்யலாம், திருத்தங்களை செய்யலாம்
இந்த வசதி மூலம் ஊழியர்கள் தனிப்பட்ட விவரங்களைப் ஆன்லைனில் தாங்களாகவே புதுப்பிக்கலாம், OTP அங்கீகாரத்தைப் பயன்படுத்தி ஆன்லைனில் க்ளெய்ம் தாக்கல் செய்யலாம். இது சார்ந்திருக்கும் அவசியத்தையும், அனைத்து பணிகளுக்கும் பிஎஃப் அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியத்தையும் பெரிய அளவில் குறைக்கிறது.
Death Claims: இறப்புக்கான க்ளெய்ம்கள் விரைவாகத் தீர்க்கப்படும்
சிறார்களின் விஷயத்தில் பாதுகாவலர் சான்றிதழ்களுக்கான தேவையை நீக்கி EPFO செயல்முறையை எளிதாக்கியுள்ளது, இதன் மூலம் குடும்பங்களுக்கு விரைவான நிதி உதவி கிடைப்பதை EPFO உறுதி செய்கிறது.
Digital Interface: மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் இடைமுகம்
மேம்படுத்தப்பட்ட தளம் யூசர் ஃப்ரெண்ட்லி அதாவது பயனர் நட்பு டேஷ்போர்டை உறுதியளிக்கிறது. உறுப்பினர்கள் பங்களிப்புகள், க்ளெய்ம்கள் மற்றும் இருப்பு ஆகியவற்றை தடையின்றி கண்காணிக்க இது உதவுகிறது.
மேற்கூறிய சீர்திருத்தங்கள் EPFO 3.0 அமலுக்கு வந்தவுடன் கிடைக்கும். இவை தவிர, சமீபத்திலும் பல மேம்பாடுகளை செய்து EPFO செயல்முறைகளை எளிதாக்கியுள்ளது.
- விரைவான சரிபார்ப்பிற்காக ஆதார் மூலம் KYC
- தனிப்பட்ட விவரங்களுக்கான ஆன்லைன் சேர்க்கை மற்றும் திருத்தங்கள்
- வேலை மாற்றத்தில் PF பரிமாற்றம், கணக்குகளின் விரைவான பெயர்வுத்திறனை உறுதி செய்தல்
EPFO 3.0 சுருக்கமாக....
- EPFO 3.0 -வின் அமலாக்கத்தில் தாமதங்கள் உள்ள நிலையிலும், இது இந்தியாவின் சமூக பாதுகாப்பு டிஜிட்டல் மயமாக்கல் பயணத்தில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
- இது செயல்படுத்தப்பட்டவுடன், இந்த தளம் காகிதம் சார்ந்த வேலைகளைக் குறைக்கும்.
- EPFO 3.0, இபிஎஃப் பரிவர்த்தனைகளை விரைவுபடுத்தும்.
- ஊழியர்களுக்கு இது நேரடி நிதி நெகிழ்வுத்தன்மையை வழங்கும்.
- அனைத்திற்கும் மேலாக, இது வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மீதான உறுப்பினர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ