)
EPFO 3.0 Latest News: தனியார் துறையில் பணிபுரியும் நபரா நீங்கள்? உங்களிடம் இபிஎஃப் கணக்கு உள்ளதா? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி இருக்கிறது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) விரைவில் அதன் புதிய தளமான EPFO 3.0 ஐ அறிமுகப்படுத்தவுள்ளது.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மூலம் அறிமுகம் ஆகவுள்ள EPFO 3.0 ஒரு புரட்சிகரமான மேம்படுத்தலாக இருக்கும். இபிஎஃப் உறுப்பினர்களுக்கு வங்கி போன்ற சேவைகளை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும். EPFO 3.0 எவ்வாறு செயல்படும்? இதன் முக்கிய அமசங்கள் என்ன? இவை அனைத்தையும் இந்த பதிவில் காணலாம்.
இதுவரை, PF உறுப்பினர்கள் தங்கள் கணக்கில் உள்ள பணத்தைப் பெற 2 முதல் 3 நாட்கள் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. க்ளெய்ம் செயல்முறை மற்றும் காகித வேலைகளும் மெதுவாக இருந்தன. EPFO 3.0 அமலுக்கு வந்தவுடன், இது மாறும். இப்போது இபிஎஃப் உறுப்பினர்கள் ATM மற்றும் UPI மூலம் உடனடியாக பணத்தை எடுப்பது, விரைவான க்ளெய்ம் செயல்முறை மற்றும் சாத்தியமான ஓய்வூதிய அதிகரிப்பு போன்ற புதிய வசதிகளைப் பெறுவார்கள்.
EPFO என்பது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பாகும். இது கோடிக்கணக்கான தொழிலாளர்களின் PF கணக்குகளை நிர்வகிக்கும் ஒரு அரசு அமைப்பாகும். ஊழியர்களின் சம்பளத்தின் ஒரு பகுதி PF இல் செல்கிறது. நிறுவனமும் அதே அளவு தொகையை பிஎஃப் உறுப்பினர்களின் கணக்குகளில் டெபாசிட் செய்கின்றன. ஓய்வு பெறும்போது, இந்தப் பணம் தொழிலாளிக்கு நிதிப் பாதுகாப்பை வழங்குகிறது.
இதுவரை, PF பணத்தைப் பெற, மக்கள் ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் கோரிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டியிருந்தது. பணம் கையில் கிடைக்க 2-3 நாட்கள் ஆனது. பலர் தாமதம் மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொண்டனர். EPFO 3.0 மூலம் இனி இந்த அமைப்பு ஒரு வங்கியைப் போலவே செயல்படும்.
ATM மூலம் பணம் எடுக்கும் வசதி
PF கணக்கு வைத்திருப்பவர்கள் ATM-ல் இருந்து இனி நேரடியாகப் பணத்தை எடுக்கலாம். அவசர காலங்களில், நீண்ட கோரிக்கை செயல்முறை இல்லாமல் உடனடியாக பணம் கிடைக்கும்.
UPI இணைப்பு
PF கணக்கை PhonePe, Google Pay மற்றும் Paytm போன்ற UPI செயலிகளுடன் இணைக்கலாம். இது நிமிடங்களில் விரைவான பணப் பரிமாற்றத்தை அனுமதிக்கும்.
எளிதான க்ளெய்ம் செயல்முறைகள் மற்றும் கணக்கு அப்டேட்கள்
க்ளெய்ம்கள் மற்றும் கணக்கு புதுப்பிப்புகள் இனி வேகமாக இருக்கும். காகிதப்பணி கிட்டத்தட்ட முடிவடையும் என்றே கூறலாம். சிறிய தவறுகளை ஆன்லைனில் எளிதாக சரிசெய்யலாம்.
ஓய்வூதிய அதிகரிப்பு திட்டம்
இப்போது, குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதத்திற்கு ₹1000 ஆக உள்ளது. EPFO 3.0 -இன் கீழ், அரசாங்கம் அதை ₹1500–₹2000 ஆக உயர்த்தக்கூடும் என கூறப்படுகிறது. இது பல ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு உதவும். இது குறித்த கூட்டம் அக்டோபர் 10–11 அன்று நடைபெறும்.
- சுமார் 8 கோடி சந்தாதாரர்கள் பயனடைவார்கள்.
- தொழிலாளர்கள் விரைவாக பணத்தை எடுக்கலாம்.
- ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் அதிக ஓய்வூதியம் பெறலாம்.
- டிஜிட்டல் அமைப்பு அனைத்தையும் விரைவாகவும் வெளிப்படையாகவும் மாற்றும்.
EPFO 3.0 சுருக்கமாக...
- EPFO 3.0 இபிஎஃப் ஊழியர்களுக்கு ஒரு புரட்சிகரமான மாற்றமாக இருக்கும்.
- PF கணக்குகள் விரைவில் முழுமையாக வங்கிக் கணக்குகளைப் போல செயல்படும்.
- EPFO 3.0 தெளிவான மற்றும் வேகமான அமைப்பைக் கொண்டிருக்கும்.
- இதனால், தொழிலாளர்கள், நிறுவனங்கள் மற்றும் அரசாங்கம் என அனைத்து தரப்பினருக்கும் உதவி கிடைக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ