EPFO : ஆன்லைன் மோசடிகளுக்கு பிஎப் பணமும் தப்பவில்லை. ஆன்லைன் மோசடி கும்பல் இந்தப் பணத்தையும் குறிவைத்து மோசடிகளை அரங்கேற்றி வருகின்றன. இதுதொடர்பான புகார்கள் வந்த நிலையில், பிஎப் உறுப்பினர்களுக்கு இபிஎப்ஓ முக்கிய எச்சரிக்கை கொடுத்துள்ளது. இன்றைய டிஜிட்டல் உலகில் பணப்பரிவர்த்தனைகள் எளிதாகிவிட்ட அதே வேளையில், சைபர் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, தொழிலாளர்களின் சேமிப்புப் பணமான பிஎப் தொகையைக் குறிவைத்து பல நூதன மோசடிகள் அரங்கேறி வருகின்றன. இதனைத் தடுக்கும் பொருட்டு, EPFO நிறுவனம் தனது சந்தாதாரர்களுக்கு முக்கியமான பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
ரகசியத் தகவல்கள் பகிரக்கூடாது
பிஎப் சந்தாதாரர்கள் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், EPFO நிறுவனம் ஒருபோதும் தனது உறுப்பினர்களைத் தொலைபேசி அழைப்பு, எஸ்.எம்.எஸ் அல்லது வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு தனிப்பட்ட விவரங்களைக் கேட்பதில்லை. உங்களது UAN எண், Password, OTP, ஆதார் விவரங்கள், வங்கி கணக்கு எண் அல்லது ஏடிஎம் கார்டு விவரங்களை யாரிடமும் பகிர வேண்டாம் என்று எச்சரித்துள்ளது. இத்தகைய தகவல்களைக் கேட்கும் எந்தவொரு அழைப்பும் மோசடியாகவே இருக்கும். இதனை நியாபகம் வைத்துக்கொள்ளுங்கள்
அதிகாரப்பூர்வ தளங்கள்
பிஎப் தொடர்பான சேவைகளைப் பெற எப்போதும் அதிகாரப்பூர்வ இணையதளமான www.epfindia.gov.in அல்லது மத்திய அரசின் உமங் (Umang) செயலியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கூகுளில் தேடும்போது வரும் தேவையற்ற லிங்குகளைக் கிளிக் செய்வதைத் தவிர்க்கவும். இணையதள முகவரியைத் தாங்களாகவே டைப் செய்து லாகின் செய்வது பாதுகாப்பானது. மேலும், EPFO தொடர்பான தகவல்களுக்கு இபிஎப்ஓ சமூக ஊடக கணக்குகளில் கொடுக்கும் அப்டேட்டுகளை தொடர்ச்சியாக பார்த்து தெரிந்து கொள்ளவும்.
தரகர்களிடம் ஏமாற வேண்டாம்
EPFO வழங்கும் அனைத்துச் சேவைகளும் முற்றிலும் இலவசமானவையே. பி.எப் பணத்தை எடுத்துத் தருகிறோம் அல்லது கணக்கைச் சரிசெய்து தருகிறோம் என்று கூறி யாராவது பணம் கேட்டால், அவர்களை நம்ப வேண்டாம். எந்தவொரு ஏஜெண்டிற்கும் அல்லது இடைத்தரகருக்கும் பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
போலி செயலிகள் எச்சரிக்கை
உங்களுக்கு வரும் இமெயில் அல்லது வாட்ஸ்அப் செய்திகளில் இருக்கும் சந்தேகத்திற்கிடமான லிங்குகளை ஒருபோதும் கிளிக் செய்யாதீர்கள். குறிப்பாக, APK பைல்களைத் டவுன்லோடு செய்து மொபைலில் இன்ஸ்டால் செய்வது உங்கள் போனில் உள்ள டேட்டாக்களைத் திருட வித்திடும். சமூக வலைதளங்களில் நீங்கள் பதிவிடும் புகார்களுக்கு, யாராவது கமெண்ட் பகுதியில் தங்கள் மொபைல் எண்ணைக் கொடுத்துத் தொடர்பு கொள்ளச் சொன்னால், அதனை முற்றிலும் தவிர்க்கவும்.
விழிப்புணர்வுடன் இருக்கவும்
உங்கள் பிஎப் கணக்கில் நடக்கும் மாற்றங்களைத் தெரிந்துகொள்ள உங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை எப்போதும் UAN தளத்தில் Update செய்து வைத்திருங்கள். ஏதேனும் மோசடி நடந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது சைபர் கிரைம் பிரிவிலோ புகார் அளிக்க வேண்டும். மேலும், சந்தேகங்களுக்குத் தீர்வு காண ஒவ்வொரு மாதமும் 27-ஆம் தேதி நடைபெறும் 'நிதி ஆப்கே நிகட்' (Nidhi Aapke Nikat) என்ற மாவட்ட அளவிலான முகாம்களில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
மேலும் படிக்க | EPFO : இபிஎப்ஓ முக்கிய அப்டேட்! பிஎப் பணத்தில் எல்ஐசி பிரீமியம் கட்டலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









