EPFO Auto Claim Settlement: லட்சக்கணக்கான EPFO உறுப்பினர்கள் குறிப்பாக அவசரத் தேவைகளின் போது விரைவாக நிதியைப் பெற உதவும் நோக்கில், EPFO முன்பணக் கோரிக்கைகளுக்கான ஆட்டோ-செட்டில்மென்ட் வரம்பை தற்போதுள்ள ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தியுள்ளது.

EPFO Auto Settlement: இபிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் இபிஎஃப் தொகையை விரைவாக அணுகுவதை உறுதி செய்யும் வகையில், EPFO முன்பணக் கோரிக்கைகளுக்கான ஆட்டோ-செட்டில்மென்ட் வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்தியுள்ளது.
EPFO Auto-settlement Limit: EPFO ஆட்டோ-செட்டில்மென்ட் வரம்பு ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது
EPFO ஆட்டோ-செட்டில்மென்ட் வரம்பு ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான EPFO உறுப்பினர்கள் குறிப்பாக அவசரத் தேவைகளின் போது விரைவாக நிதியைப் பெற உதவும் நோக்கில், EPFO முன்பணக் கோரிக்கைகளுக்கான ஆட்டோ-செட்டில்மென்ட் வரம்பை தற்போதுள்ள ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தியுள்ளது.
3 நாட்களில் EPFO ஆட்டோ-செட்டில்மென்ட் செயலாக்கம்
ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்ட வரம்பினால், கூடுதல் அட்வான்ஸ் கோரிக்கைகள் இப்போது தானியங்கி செட்டில்மென்ட்டுக்குத் தகுதி பெறும். இதனால், இந்த கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட மூன்று நாட்களுக்குள் செயல்படுத்தப்படும். மேம்படுத்தப்பட்ட வரம்பு மற்றும் நிதிகளுக்கான விரைவான அணுகல் உறுப்பினர்கள் மிகவும் தேவைப்படும்போது சரியான நேரத்தில் நிதி உதவியைப் பெற உதவும் என்று EPFO தெரிவித்துள்ளது.
EPFO தானியங்கி தீர்வு எப்போது தொடங்கப்பட்டது?
COVID-19 தொற்றுநோய்களின் போது உறுப்பினர்களுக்கு விரைவான நிதி உதவியை வழங்க EPFO முதன்முதலில் முன்பண கோரிக்கைகளை தானாக தீர்க்கும் முறையை அறிமுகப்படுத்தியது. அதன் பின்னர் நோய், கல்வி, திருமணம் மற்றும் வீட்டு நோக்கங்களுக்கான முன்பண க்ளெய்ம்களை செட்டில் செய்ய இந்த வசதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகள் எந்தவொரு மனித ஈடுபாடும் இல்லாமல் அமைப்பால் தானாகவே செயல்படுத்தப்படுகின்றன. இவை விரைவான செயலாக்கம் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்கின்றன.
EPF Members: இபிஎஃப் உறுப்பினர்கள் ஆன்லைன் க்ளெய்ம்களை தாக்கல் செய்வதற்கு கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்
ஆன்லைன் க்ளெய்ம்களை தாக்கல் செய்வதற்கு உறுப்பினர்களுக்கு என்னென்ன தேவைப்படும்? ஆன்லைன் க்ளெய்ம் தீர்வுக்கு உறுப்பினர் பின்வரும் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என EPFO தெரிவிக்கிறது.
a. உறுப்பினர் தனது யுனிவர்சல் கணக்கு எண்ணை செயல்படுத்தியிருக்க வேண்டும். மேலும் UAN ஐ செயல்படுத்த பயன்படுத்தப்படும் மொபைல் எண் வேலை செய்யும் நிலையில் இருக்க வேண்டும்.
b. உறுப்பினரின் ஆதார் விவரங்கள் EPFO தரவுத்தளத்தில் சீட் செய்யப்பட்டிருக்க வேண்டும். மேலும் கோரிக்கையை சமர்ப்பிக்கும் போது UIDAI இலிருந்து eKYC ஐ சரிபார்க்க OTP அடிப்படையிலான வசதியை அவர் பெற வேண்டும்.
c. உறுப்பினரின் வங்கிக் கணக்கு மற்றும் IFSC குறியீடு EPFO தரவுத்தளத்தில் சேர்க்கப்பட வேண்டும்.
d. அவரது/அவளுடைய சேவை 5 ஆண்டுகளுக்கும் குறைவாக இருந்தால், PF இறுதி தீர்வு கோரிக்கைகளுக்கான நிரந்தர கணக்கு எண் (PAN) EPFO தரவுத்தளத்தில் சேர்க்கப்பட வேண்டும்.
EPFO இல் பதிவுசெய்யப்பட்ட வங்கியைத் தவிர வேறு வங்கி கணக்கிற்கு பணத்தை திருப்பிவிட முடியுமா?
EPFO இந்த வசதியை அனுமதிக்காது. EPFO இல் பதிவுசெய்யப்பட்ட வங்கிக் கணக்கில் மட்டுமே உறுப்பினர் பணம் பெற முடியும். மேலும் அவரது UAN உறுப்பினர் இடைமுகத்தின் கீழ் அவருக்குக் காட்டப்படும்.
வேறு ஏதேனும் வங்கி கணக்கைப் பயன்படுத்த விரும்பினால் என்ன செய்ய வேண்டும்?
இபிஎஃப் கணக்கில் காட்டப்பட்டுள்ள வங்கிக் கணக்கு மூடப்பட்டிருந்தால் அல்லது உறுப்பினர் வேறு ஏதேனும் வங்கிக் கணக்கைப் பயன்படுத்த விரும்பினால், உறுப்பினர் ஆன்லைன் க்ளெய்மைத் தவிர்த்து, முதலில் அவரது தற்போதைய நிறுவனத்தின் மூலம் வங்கிக் கணக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.
EPF Online Claim Submission: ஆன்லைனில் க்ளெய்மை சமர்ப்பிப்புக்கான செயல்முறை
ஆன்லைன் உரிமைகோரல் சமர்ப்பிப்புக்கான செயல்முறை என்ன
- UAN சான்றுகளைப் பயன்படுத்தி உறுப்பினர் இடைமுகத்தில் லாக் இன் செய்யவும்.
- UAN இல் குறிப்பிடப்பட்டுள்ள KYC மற்றும் சேவை தகுதி நிபந்தனைகள் சரியானவை மற்றும் முழுமையானவை என்பதை உறுதிசெய்துகொள்ளவும்.
- தொடர்புடைய க்ளெய்மைத் தேர்ந்தெடுக்கவும்.
- ஆன்லைன் க்ளெய்ம் சமர்ப்பிப்பை முடிக்க UIDAI இல் பதிவுசெய்யப்பட்ட மொபைலில் பெறப்பட்ட OTP ஐப் பயன்படுத்தி அங்கீகரிக்கவும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ