EPFO Update: இபிஎஃப் உறுப்பினர்கள் மருத்துவ சிகிச்சை, திருமணம், வீட்டுவசதி அல்லது கல்விக்காக இபிஎஃப் கணக்கிலிருந்து எடுக்க நினைக்கும் தொகையை விரைவாக அணுக வழிவகை செய்யப்பட்டுள்ளது.

EPFO Auto Settlement Limit: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), முன்பணக் கோரிக்கைகளுக்கான ஆட்டோ-செட்டில்மென்ட் வரம்பை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தியுள்ளது. இது இபிஎஃப் உறுப்பினர்கள் மருத்துவ சிகிச்சை, திருமணம், வீட்டுவசதி அல்லது கல்விக்காக இபிஎஃப் கணக்கிலிருந்து எடுக்க நினைக்கும் தொகையை விரைவாக அணுக உதவுகிறது.
EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு மூன்றே நாட்களில் பணம் கிடைக்கும்
க்ளெய்ம்கள் தானாகவே செயல்படுத்தப்பட்டு மூன்று வேலை நாட்களுக்குள் அவை செட்டில் செய்யப்படும் என்று பத்திரிகை தகவல் பணியகம் (PIB) செவ்வாயன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Auto Settlement: ஆட்டோ-செட்டில்மென்ட் என்றால் என்ன?
கோவிட்-19 காலத்தில் EPF முன்பணங்களை விரைவாக வழங்குவதற்காக ஆட்டோ-செட்டில்மென்ட் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது என்று PIB தெரிவித்துள்ளது. பின்னர் இது மருத்துவ சிகிச்சை, குழந்தைகளின் கல்வி, திருமணம் மற்றும் வீட்டுவசதி போன்ற தொற்றுநோய் அல்லாத நோக்கங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது. இந்த நீட்டிப்பு இபிஎஃப் உறுப்பினர்கள் இடையே பெரிதாக வரவேற்கப்பட்டது.
இந்த அமைப்பு கைமுறை சரிபார்ப்புகள் இல்லாமல் தானாகவே கோரிக்கைகளை செயல்படுத்துகிறது.மேலும் இது வெளிப்படைத்தன்மை, வேகம் மற்றும் குறைந்தபட்ச தாமதங்களை உறுதி செய்கிறது.
EPFOவின் ஆடோமேஷன் ட்ரைவ் சாதகமான முடிவுகளைக் காட்டியுள்ளது. அவற்றை பற்றி இங்கே காணலாம்.
- நிதியாண்டு 25 இல் தானியங்கி தீர்வு மூலம் 23.4 மில்லியன் கோரிக்கைகள் செயல்படுத்தப்பட்டன: இது முந்தைய ஆண்டை விட 161 சதவீதம் அதிகரிப்பு என்று PIB வெளியீடு தெரிவிக்கிறது.
- அந்த ஆண்டு மொத்தமாக கிடைக்கப்பட்ட முன்பண கோரிக்கைகளில், 59 சதவீதம் தானியங்கி அமைப்பு மூலம் கையாளப்பட்டன.
- நிதியாண்டு 26 இன் முதல் 2.5 மாதங்களில், 765,200 லட்சம் கோரிக்கைகள் ஏற்கனவே தானியங்கி தீர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இது இதுவரையிலான அனைத்து முன்பண தீர்வுகளில் சுமார் 70 சதவீதமாகும்.
- இந்த விரைவான வளர்ச்சி, உரிமைகோரல் தீர்வை விரைவுபடுத்தவும் உறுப்பினர் புகார்களைக் குறைக்கவும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் EPFOவின் வலுவான கவனத்தை பிரதிபலிக்கிறது என்பதை PIB எடுத்துக்காட்டியது.
உன்னதமான தொழிலாளர் சார்பு நடவடிக்கை: அமைச்சர் மன்சுக் மண்டவியா
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மண்டவியா, X இல் ஒரு பதிவில் இந்த முடிவை வரவேற்று, "EPFO ஆட்டோ க்ளைம் செட்டில்மென்ட் வரம்பை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தியுள்ளது. இப்போது க்ளைம்கள் வெறும் 3 நாட்களில் தீர்க்கப்படும்! இந்த நடவடிக்கை கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு பயனளிக்கும் மற்றும் அவர்கள் கடினமாக சம்பாதித்த பணத்தை விரைவாக அணுக அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும்." என்று எழுதியுள்ளார்.
EPF Subscribers: இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும்?
திருத்தப்பட்ட வரம்பைக் கொண்டு, அதிக மதிப்புள்ள க்ளைம்கள், குறிப்பாக மருத்துவச் செலவுகள் அல்லது வீடு தொடர்பான செலவுகள், இப்போது ஆட்டோ-செட்டில்மென்ட் முறையின் கீழ் விரைவான செயலாக்கத்திற்கு தகுதி பெறும். இதனால் அவசர தேவைகளின் போது விரைவாக உதவ இபிஎஃப் சந்தாதாரர்கள் இனி இபிஎஃப் கணக்கை நம்பலாம்.
உறுப்பினர்களின் இபிஎஃப் செயல்முறைகளை மேம்படுத்துவதற்காக EPFO 'செயல்முறை எளிமைப்படுத்தல் மற்றும் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ளுதல்' போன்ற பரந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த சமீபத்திய மாற்றங்கள் அந்த முயற்சிகளின் ஒரு அங்கமாக பார்க்கப்படுகின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ