EPFO EDLI Scheme: இபிஎஃப் உறுப்பினரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. EDLI -இல் சில முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Employees Deposit Linked Insurance: ஊழியர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீடு
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), ஊழியர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டில் (EDLI) முக்கியமான மாற்றங்களை அறிவித்துள்ளது. மத்திய தொழிலாளர் அமைச்சர் மன்சுக் மண்டாவியா தலைமையிலான மத்திய அறங்காவலர் குழு (CBT) அதன் 237வது கூட்டத்தில் இந்த திருத்தங்களுக்கு பச்சை கொடி காட்டியுள்ளது. இந்த மாற்றங்கள் லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு வலுவான நிதி பாதுகாப்பை வழங்கும்.
EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்
குறுகிய சேவை காலத்திற்கு குறைந்தபட்ச காப்பீடு:
- இந்தத் திட்டத்தின் கீழ், சேவையைத் தொடங்கிய ஒரு வருடத்திற்குள் உறுப்பினர் இறந்தால் ரூ.50,000 குறைந்தபட்ச காப்பீட்டுப் பலன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- இது ஆண்டுதோறும் 5,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பயனளிக்கும்.
- இந்த மாற்றம் தங்கள் அன்புக்குரியவர்களை அகாலமாக இழந்த குடும்பங்களுக்கு ஒரு முக்கியமான பாதுகாப்பு ஏற்பாடாக பார்க்கப்படுகின்றது.
EPF Contribution: பங்களிப்பில்லாத காலத்திற்கான காப்பீடு
- கணக்கில் கடைசியாக பங்களிப்பு செய்த ஆறு மாதங்களுக்குள் EDLI உறுப்பினர் இறந்தால், அவரது பெயர் பேரோலிலிருந்து நீக்கப்படாமல் இருக்கும் பட்சத்தில், அவரது குடும்ப உறுப்பினர்கள் திட்டத்தின் கீழ் சலுகைகளைப் பெற உரிமை பெறுவார்கள்.
- இந்தத் திருத்தத்தின் கீழ் ஆண்டுதோறும் சுமார் 14,000 க்ளெய்ம்கள் செட்டில் செய்யப்படும்.
- அகாலத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு இது ஒரு முக்கியமான பாதுகாப்பாக இருக்கும்.
முன்னர், இரண்டு வேலைகளுக்கு இடையில் மிகக் குறைந்த இடைவெளி இருந்தாலும், உறுப்பினர்கள் EDLI சலுகைகளைப் பெற முடியாத நிலை இருந்தது. புதிய விதியின் கீழ், வேலைகளுக்கு இடையில் இரண்டு மாதங்கள் வரை இடைவெளி இருந்தால், இனி அது தொடர்ச்சியான சேவையாகக் கருதப்படும். வேலைகளை மாற்றிக் கொண்டே இருப்பவர்களுக்கு இந்த மாற்றம் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது.
EDLI Scheme: நிதி பாதுகாப்பை உறுதி செய்யும் இடிஎல்ஐ திட்டம்
EDLI திட்டத்தில் செய்யப்பட்டுள்ள இந்த திருத்தங்கள் ஒவ்வொரு ஆண்டும் 20,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களின் நிதி பாதுகாப்பை அதிகரிக்கும் என PIB அறிக்கை தெரிவிக்கின்றது. இந்த மாற்றம் குடும்பங்களுக்கு நிதி ரீதியான நிலைத்தன்மையை அளிக்கும்.
EPFO Interest Rate: இபிஎஃப்ஓ வட்டி விகிதம்
சமீபத்தில் மத்திய அறங்காவலர் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த CBT கூட்டத்தில், இபிஎஃப் சந்தாதாரர்களுக்கான (EPF Subscribers) வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் 8.25% -இலேயே தொடரப்பட்டுள்ளது. இது ஊழியர்களின் கணக்கில் வரவு வைக்கப்படுவதற்கு முன்பு அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இது உறுப்பினர்கள் தங்கள் முதலீட்டில் நியாயமான வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யும்.
சமீபத்தில் முக்கிய இபிஎஃப்ஓ புதுப்பிப்புகள்
Higher Pension: உயர் ஓய்வூதியத்திற்கான தகுதி குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு தொடர்பான 72 சதவீத விண்ணப்பங்களை EPFO தீர்த்து வைத்துள்ளது.
Centralised Pension Payment System: ஜனவரி 2025 முதல், மையப்படுத்தப்பட்ட ஓய்வூதிய கட்டண முறையின் (CPPS) கீழ் ஓய்வூதியங்கள் SBI இன் புது தில்லி கிளையில் உள்ள மையப்படுத்தப்பட்ட கணக்கு மூலம் செலுத்தப்படுகின்றன.
Penalty: வழக்குகளைக் குறைக்க, PF செலுத்துவதில் தாமதத்திற்கான அபராதம் மாதத்திற்கு 1 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Budget: 2024-25 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட பட்ஜெட் மதிப்பீடுகள் மற்றும் 2025-26 ஆம் ஆண்டிற்கான திட்டமிடப்பட்ட ஒதுக்கீட்டையும் வாரியம் அங்கீகரித்துள்ளது.
மேலும் படிக்க | மக்கள் அனைவருக்கும் பென்ஷன்: மத்திய அரசின் பரிசாக வரும் புதிய ஓய்வூதியத் திட்டம்
மேலும் படிக்க | FD முதலீடுகளுக்கு நல்ல வட்டி கிடைக்க... இந்த வங்கிகளில் முதலீடு செய்யுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









