)
EPS Pension Latest News: 2026 புத்தாண்டு தொடங்கியுள்ள நிலையில், இபிஎஃப் உறுப்பினர்களுக்கு முக்கியமான செய்தி ஒன்று கிடைத்துள்ளது. இபிஎஃப் உறுப்பினர்களுக்கு கூடிய விரைவில் மத்திய அரசு ஒரு பொக்கிஷத்தை அளிக்கக்கூடும். ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) கீழ் வழங்கப்படும் குறைந்தபட்சத் தொகை ரூ. 5,000 ஆக அதிகரிக்கப்படலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதை பற்றிய விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
தற்போது, 75 லட்சத்திற்கும் மேற்பட்ட இபிஎஃப் உறுப்பினர்கள் ஓய்வூதியப் பலன்களைப் பெற்று வருகின்றனர். PF ஊழியர் அமைப்புகள் நீண்ட காலமாக EPS தொகையை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றன. மத்திய பட்ஜெட்டுக்குப் பிறகு இது குறித்து அரசு ஒரு முடிவை எடுக்கக்கூடும். மக்களவையில் அளித்த பதிலில் அரசாங்கம் அத்தகைய முன்மொழிவை மறுத்திருந்தாலும், இதில் உள்ள பிரச்சனையை புரிந்துகொள்வதாகவும் அரசு தெரிவித்தது. ஆகையால் ஊழியர்களின் நம்பிக்கை இன்னும் நீடிக்கிறது.
மத்திய அரசு ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் குறைந்தபட்சத் தொகையை ரூ. 5,000 ஆக அதிகரிக்கக்கூடும். தற்போது, குறைந்தபட்ச EPS தொகை ரூ. 1,000 ஆக உள்ளது. அனைத்து ஊழியர்களும் அரசாங்கத்தின் அறிவிப்பிற்காகக் காத்திருக்கின்றனர். குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சேவை முடித்த ஊழியர்களுக்கு மட்டுமே EPS பலன் கிடைக்கும். 58 வயதுக்குப் பிறகு ஓய்வூதியம் கணக்கில் வரவு வைக்கத் தொடங்குகிறது. நாடு முழுவதும் PF உறுப்பினர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
- ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) குறைந்தபட்ச தொகையை அதிகரிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- இபிஎஃஸ் -இன் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகை ரூ.7,500 ஆக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.
- ஆனால், இதில் சில சிக்கல்கள் உள்ளன.
- தற்போதைய குறைந்தபட்ச இபிஎஸ் மாத ஓய்வூதியம் ரூ.1,000 ஆக உள்ளது.
- அதிகபட்ச இபிஎஸ் ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உள்ளது.
- இந்த நிலையில் குறைந்தாட்ச மாத ஓய்வூதியத்தை ரூ.7,500 ஆக அதிகரிப்பது சாத்தியமில்லாத ஒன்றாகும்.
- குறைந்தாட்ச மாத ஓய்வூதியத்தை ரூ.7,500 ஆக அதிகரிக்க, முதலில் அதிகபட்ச ஓய்வூதியத்தின் அளவை அதிகரிக்க வேண்டும். அதை செய்ய வேண்டுமானால், இபிஎஃப் ஊதிய உச்சவரம்பு அதிகரிக்கப்பட வேண்டும்.
மத்திய அரசு குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை ரூ.2,000 முதல் ரூ.3,000 -க்குள் உயர்த்தக்கூடும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அது ரூ.5,000 ஆக அதிகரிக்கலாம் என கூறப்படுகின்றது. இது யதார்த்தத்துடன் ஒத்துப்போகும் முடிவாக இருக்கும் என்றும் நிபுணர்கள் கருதுகிறார்கள். இந்த முடிவு பொது பட்ஜெட்டுக்குப் பிறகு எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது. எனினும், இது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
இதற்கு முன், தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதியம் 2014 ஆம் ஆண்டு அதிகரிக்கப்பட்டது. அப்போது மாத ஓய்வூதியம் ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டது. அதன் பின், பணவீக்கம், வாழ்க்கைச் செலவுகள் என பலவற்றில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், குறைந்தபட்ச ஓய்வூதியத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
EPS 95 என்பது தனியார் துறை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட துறை ஊழியர்களுக்காக நடத்தப்படும் இந்தியாவின் மிகப்பெரிய ஓய்வூதியத் திட்டமாகும். ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO இதை நிர்வகிக்கின்றது. இது 80 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களைக் கொண்டுள்ளது. இந்த திட்டம் 1995 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இது வரையறுக்கப்பட்ட பங்களிப்பு-வரையறுக்கப்பட்ட நன்மை சமூகப் பாதுகாப்பு அமைப்பாக வடிவமைக்கப்பட்டது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ