மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் EPFO, சமீபத்தில் நடத்திய கூட்டத்தில் ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் சேமிப்பு தொடர்பான வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளை எடுத்துள்ளது. குறிப்பாக, ஓய்வூதிய விதிகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் கோடிக்கணக்கான தனியார் துறை ஊழியர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. அந்தவகையில், பிஎப் சந்தாதாரர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 அப்டேட்டுகளை விரிவாக பார்க்கலாம்
1. புதிய ஓய்வூதியத் திட்டம்: EPS 2026 அறிமுகம்
மத்திய அரசு 2020 ஆம் ஆண்டு கொண்டு வந்த சமூக பாதுகாப்புச் சட்டத்தின் ஒரு பகுதியாக, தற்போதுள்ள ஓய்வூதியத் திட்டத்தில் பெரிய மாற்றங்களைச் செய்துள்ளது. இதன்படி, EPS 2026 (Employees' Pension Scheme 2026) என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது பழைய விதிகளில் இருந்த சிக்கல்களைக் களைந்து, ஊழியர்களுக்கு எளிமையாகவும், சட்டப்பூர்வமாகவும் ஓய்வூதியப் பலன்கள் கிடைப்பதை உறுதி செய்யும்.
2. 8.25 விழுக்காடு வட்டி விகிதம்
2025-26 நிதியாண்டிற்கான பிஎப் (EPF) வைப்புத் தொகைக்கு 8.25 சதவீத வட்டி வழங்கப்பட உள்ளது. உலகளாவிய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், ஊழியர்களின் சேமிப்பிற்குச் சிறப்பான வட்டி விகிதத்தை EPFO தொடர்ந்து தக்கவைத்துள்ளது. இது ஓய்வுக்காலத்திற்குப் பிறகு ஊழியர்களுக்குக் கிடைக்கும் மொத்தத் தொகையை அதிகரிக்க உதவும்.
3. ஆட்டோ செட்டில்மென்ட்
பல ஆண்டுகளாக உரிமை கோரப்படாமல் கிடக்கும் (Inoperative Accounts) கணக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க EPFO அதிரடி முடிவை எடுத்துள்ளது. முதல் கட்டமாக, ரூ.1,000-க்கும் குறைவாக உள்ள கணக்குகளில் உள்ள பணம் தானாகவே ஊழியர்களின் வங்கிக் கணக்கிற்குச் செல்லும் வகையில் ஆட்டோ செட்டில்மென்ட் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் பழைய நிறுவனங்களில் விட்டுச் சென்ற சிறிய தொகைகளை இனி ஆன்லைன் மூலமாகவோ அல்லது தானாகவோ எளிதாகப் பெற முடியும்.
4. புதிய காப்பீட்டுத் திட்டம்: EDLI 2026
ஓய்வூதியத்தைப் போலவே, ஊழியர்களின் குடும்பப் பாதுகாப்பை உறுதி செய்யும் காப்பீட்டுத் திட்டத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. EDLI 2026 (Employees' Deposit Linked Insurance Scheme) என்ற புதிய காப்பீட்டுத் திட்டம் அமலுக்கு வருகிறது. இது ஊழியர் பணியின் போது எதிர்பாராத விதமாக உயிரிழக்க நேரிட்டால், அவரது குடும்பத்தினருக்குக் கிடைக்கும் காப்பீட்டுத் தொகையை எவ்விதத் தடையுமின்றி வழங்க வழிவகை செய்கிறது.
5. டிரஸ்டுகளுக்கு 'பொதுமன்னிப்பு'
சொந்தமாக பிஎஃப் டிரஸ்ட் (Exempted Trusts) நடத்தும் நிறுவனங்கள், இதுவரை EPFO விதிகளுக்குக் கீழ் வராமல் இருந்தால், அவர்களுக்கு 6 மாத கால பொதுமன்னிப்புச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த நிறுவனங்கள் அபராதமின்றி தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். இதனால் அந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் பிஎஃப் கணக்குகள் இனி அரசு அமைப்பின் நேரடிப் பார்வையில் பாதுகாப்பாக இருக்கும்.
இந்த மாற்றங்கள் அனைத்தும் வரும் 2026-ஆம் ஆண்டிற்குள் முழுமையாக நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது டிஜிட்டல் முறைப்படியான சேவைகளை மேம்படுத்துவதோடு, ஓய்வூதியதாரர்கள் தங்களின் பணத்தைப் பெறுவதில் உள்ள காலதாமதத்தைக் குறைக்கும். எனவே, பிஎப் சந்தாதாரர்கள் இந்த 5 அப்டேட்டுகளையும் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.
மேலும் படிக்க | EPFO: பிஎப் புது ரூல்ஸ்! இந்த விதி தெரிஞ்சு அப்ளை பண்ணா டக்குனு கிடைக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









