EPF உறுப்பினர்கள் கவனத்திற்கு: முன்பணம் எடுக்கும் விதிகளில் முக்கிய மாற்றம்

EPFO Rule Change: வீடு புதுப்பித்தலுக்காக தங்கள் வருங்கால வைப்பு நிதிக் கணக்குகளில் இருந்து முன்பணம் பெறத் திட்டமிடும் உறுப்பினர்களுக்கான விதியை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சமீபத்தில் திருத்தியுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 28, 2025, 04:48 PM IST
  • இபிஎஃப் உறுப்பினர்களுக்கு முக்கிய செய்தி.
  • வீடு புதுப்பித்தலுக்கான முன்பணம் விதிகள்.
  • இபிஎஃப் சந்தாதாரர்களுக்காக செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்.
EPF உறுப்பினர்கள் கவனத்திற்கு: முன்பணம் எடுக்கும் விதிகளில் முக்கிய மாற்றம்

EPFO Rule Change: மாதா மாதம் இபிஎஃப் கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யும் நபரா நீங்கள்? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சமீபத்தில் சில முக்கிய விதிகளில் மாற்றங்களை செய்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Add Zee News as a Preferred Source

EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு முக்கிய செய்தி

பெரும்பாலும், பணி ஓய்வுக்கு பிறகு இபிஎஃப் தொகையை ஊழியர்கள் எடுக்கிறார்கள். எனினும், பணி ஓய்வுக்கு முன்னரும் சில குறிப்பிட்ட காரணங்களுக்காக பகுதியளவு தொகையை எடுக்கலாம். அதில் வீடு புதுப்பித்தலும் அடங்கும். வீடு புதுப்பித்தலுக்காக தங்கள் வருங்கால வைப்பு நிதிக் கணக்குகளில் இருந்து முன்பணம் பெறத் திட்டமிடும் உறுப்பினர்களுக்கான விதியை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சமீபத்தில் திருத்தியுள்ளது.

EPFO விதிகளின் பத்தி 68B(7) இன் கீழ், வருங்கால வைப்பு நிதி அமைப்பு, வீட்டின் கட்டுமானம் முடிந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு,  உறுப்பினர்கள் தங்கள் வீட்டைப் புதுப்பிப்பதற்கான முன்பணத்தை பெற அனுமதிக்கிறது.

House Renovation Advance: வீட்டை புதுப்பிக்க முன்பணம்

இப்போது உறுப்பினர்கள் வீடு கட்டி முடிக்கப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, வீட்டை புதுப்பிக்க, சுய அறிவிப்பை, அதாவது செல்ஃப் டிக்லரேஷனைச் சமர்ப்பித்து முன்பணத்தைப் பெறலாம். மேலும், முன்பணக் கோரிக்கை, பத்தி 68B இன் கீழ் முந்தைய எந்தவொரு திரும்பப் பெறுதலுடனும் இணைக்கப்படவில்லை என்றும் உறுப்பினர்கள் அறிவிக்க வேண்டும்.

பத்தி 68B, வீடு/பிளாட் வாங்குதல், வீட்டைக் கட்டுதல், நிலத்தை கையகப்படுத்துதல் போன்ற பல்வேறு வீட்டுத் தேவைகளுக்கான அட்வான்ஸ் தொகைகளை பெற அனுமதிக்கிறது.

"பத்தி 68B (7) இன் கீழ் உறுப்பினர்கள் முன்பணத்தைப் பெறுவதற்கு வசதியாக, குடியிருப்பு வீடு கட்டி முடிக்கப்பட்ட நாளிலிருந்து 60 மாதங்களுக்குப் பிறகுதான் இந்த முன்பணம் கோரப்படும் என்றும், பத்தி 68B இன் கீழ் முந்தைய திரும்பப் பெறுதலுடன் இணைக்கப்படாது என்றும் கூறும் சுய அறிவிப்பின் அடிப்படையில் மேற்கூறிய முன்பணத்திற்கான விண்ணப்பத்தை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது," என்று EPFO ​​ஏப்ரல் 17, 2025 தேதியிட்ட ஒரு சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

EPF Subscribers: இபிஎஃப் சந்தாதாரர்களுக்காக செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்

இபிஎஃப் உறுப்பினர்களின் நலனுக்காக EPFO ​​ஏற்கனவே மென்பொருளில் மாற்றங்களைச் செய்துள்ளது. மேலும், அதன் அனைத்து கள அலுவலகங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் அத்தகைய அட்வான்ஸ் தொகைகளை எந்த நிராகரிப்பும் இல்லாமல் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளன.

"இது தொடர்பான மாற்றங்கள் உறுப்பினர்களின் நலனுக்காக மென்பொருளில் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன, அதன்படி, தகுதி இருந்தால், எந்த நிராகரிப்பும் இல்லாமல் அத்தகைய முன்பணங்களைச் செயல்படுத்த அறிவுறுத்தப்படுகிறது," EPFO ​​தெரிவித்துள்ளது.

House renovation Advance rules: வீடு புதுப்பித்தலுக்கான முன்பணம் விதிகள்

உறுப்பினர்கள் தங்களுக்குச் சொந்தமான வீட்டில் சேர்த்தல்/மாற்றுதல்/மேம்படுத்துதல் ஆகியவற்றிற்காக பத்தி 68B (7) இன் கீழ் முன்பணம் கோரலாம். இந்த முன்பணம், வாழ்க்கைத் துணைக்குச் சொந்தமான வீட்டிற்கும் அல்லது வாழ்க்கைத் துணையுடன் இணைந்து வைத்திருக்கும் வீட்டிற்கும் கோரப்படலாம். வீடு கட்டி முடிக்கப்பட்ட 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முன்பணத்தை பெற முடியும். 

இந்த விதியின் கீழ் பின்வருவனவற்றில் மிகக் குறைவான தொகை முன்பணமாக வழங்கப்படும்:

- 12 மாத அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி
- வட்டியுடன் கூடிய ஊழியரின் பங்கு
- புதுப்பித்தல் செலவு

இந்த முன்பணம் உறுப்பினருக்கு ஒரே தவணையில் ஒரு முறை செலுத்தப்படுகிறது.

மேலும் படிக்க | UPS vs NPS: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏற்ற சிறந்த பென்ஷன் திட்டம் எதுவாக இருக்கும்?

மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு அட்டகாசமான செய்தி: இனி இந்த அலவன்ஸ் இரட்டிப்பாகும், வெளியானது உத்தரவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News