EPFO Update: கடந்த 1-2 ஆண்டுகளில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) இபிஎஃப் உறுப்பினர்களுக்கான க்ளெய்ம் தீர்வு செயல்முறையை எளிதாக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் ஷோபா கரந்த்லஜே, சமீபத்தில் மாநிலங்களவையில் பல்வேறு கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்த நடவடிக்கைகளை எடுத்துரைத்தார்.
EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு முக்கிய மாற்றங்கள்
ஏப்ரல் 1, 2025 முதல் தொடங்கும் 2025-26 புதிய நிதியாண்டில் இபிஎஃப்ஓ -வில் செய்யப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள் குறித்து இங்கே காணலாம்.
Auto Claim Settlement: தானியங்கி க்ளெய்ம் செட்டில்மெண்ட்
அட்வான்ஸ் கோரிக்கைகளை தானியங்கி முறையில் செயலாக்குவதற்கு, தொகை வரம்பு ரூ.1 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், நோய்/மருத்துவமனையில் சேர்க்கும் அட்னான்ஸ் தொகைகளுக்கு கூடுதலாக, வீட்டுவசதி, கல்வி மற்றும் திருமணத்திற்கான முன்பணங்களும் தானியங்கி முறையில் செயலாக்கப்படும்.
60% முன்பண க்ளெய்ம்கள் இப்போது தானியங்கி முறையில் செயல்படுத்தப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார். இந்த ஆட்டோ-மோடில் க்ளெய்ம்கள் மூன்று நாட்களுக்குள் செயல்படுத்தப்படுகின்றன. நடப்பு நிதியாண்டில், EPFO மார்ச் 6, 2025 வரை 2.16 கோடி ஆட்டோ-கிளைம்களை செட்டில் செய்துள்ளது. 2023-24 ஆம் ஆண்டில், 89.52 லட்சம் கோரிக்கைகள் மட்டுமே தானியங்கி முறையில் தீர்க்கப்பட்டன.
Simplified correction process: எளிமைப்படுத்தப்பட்ட திருத்த செயல்முறை
உறுப்பினர் விவரங்களின் திருத்த செயல்முறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். இப்போது, ஆதார் சரிபார்க்கப்பட்ட UAN எண்களைக் கொண்ட இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers), எந்த வித EPFO தலையீடும் இல்லாமல், தங்கள் ஐடி -களில் தாங்களாகவே திருத்தங்களைச் செய்யலாம்.
PF Transfer: பிஎஃப் பரிமாற்றம்
இப்போது, PF பரிமாற்ற க்ளெய்ம் கோரிக்கைகளில், ஆதார் சரிபார்க்கப்பட்ட UAN எண்களுக்கு முதலாளி / நிறுவனம் சான்றளிக்க வேண்டிய அவசியமில்லை. தற்போது, பரிமாற்ற க்ளெய்ம்களில் 10% க்ளெய்ம்களுக்கு மட்டுமே உறுப்பினர் மற்றும் முதலாளியின் / நிறுவனத்தின் சான்றளிப்பு தேவை என்று அமைச்சர் கூறினார்.
Cheque Leaf: காசோலை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை:
இப்போது க்ளெய்ம் படிவத்துடன் செக் லீஃபை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. "பரிந்துரைக்கப்பட்ட அளவுகோல்களைப் பூர்த்தி செய்யும் KYC- இணக்கமான UAN-கள், க்ளெய்ம் படிவத்துடன் காசோலையைச் சமர்ப்பிப்பதற்கான தேவையும் தளர்த்தப்பட்டுள்ளது," என்று அமைச்சர் கூறினார்.
Ineligible Claims: தகுதியற்ற க்ளெய்ம்களுக்கான வழிகாட்டுதல்
க்ளெய்ம்களின் தகுதி/ஏற்றுக்கொள்ளும் தன்மை குறித்து உறுப்பினர்களுக்கு வழிகாட்ட EPFO சில முன்கூட்டிய சரிபார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று அமைச்சர் கூறினார். உறுப்பினர்கள் தகுதியற்ற க்ளெய்ம்களை தாக்கல் செய்யாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக இது செய்யப்பட்டுள்ளது.
இபிஎஃப் சந்தாதாரர்கள் க்ளெய்ம்களை சமர்ப்பிக்க இப்போது கள அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை, EPFO இப்போது 99.31% க்கும் அதிகமான க்ளெய்ம்களை ஆன்லைன் முறையில் பெறுகிறது. 2024-25 நிதியாண்டில் மார்ச் 6, 2025 நிலவரப்படி, 7.14 கோடி க்ளெய்ம்கள் ஆன்லைன் முறையில் தாக்கல் செய்யப்பட்டன.
மேற்கூறியவற்றைத் தவிர, CITES 2.01 இன் கீழ் உறுப்பினர் தரவுத்தளங்களை மையப்படுத்தி தீர்வு செயல்முறையை EPFO மேலும் எளிதாக்குகிறது. கூடுதலாக, EPFO 3.0 இன் ஒரு பகுதியாக, EPFO-வை "எதிர்காலத்திற்குத் தயாராக உள்ள, உறுப்பினர்களை மையமாகக் கொண்ட மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த அமைப்பாக" மாற்றுவதற்காக பங்குதாரர் ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
மேலும் படிக்க | ரயிலில் இலவசமாக பயணிக்கலாம், இதை மட்டும் செய்யதால் போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









