EPFO : பிஎப் குறைகளை தெரிவிக்க முடியாமல் தவிக்கும் ஊழியர்கள்..!!

EPFO Customer Care : EPFO அமைப்பிடம் குறைகளை தெரிவிக்க முடியாமல் ஊழியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலை இன்னும் நீடிக்கிறது.

Written by - Karthikeyan Sekar | Last Updated : Jun 4, 2025, 06:44 PM IST
  • இபிஎப்ஓ லேட்டஸ்ட் அப்டேட்
  • செயல்படுகிறதா வாடிக்கையாளர் சேவை மையம்
  • சென்னை இபிஎப்ஓ சேவை மீது அதிருப்தி
EPFO : பிஎப் குறைகளை தெரிவிக்க முடியாமல் தவிக்கும் ஊழியர்கள்..!!

EPFO Customer Care : ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), தனியார் மற்றும் பொதுத்துறைகளில் பணியாற்றும் கோடிக்கணக்கானோரின் கணக்குகளை பராமரிக்கிறது. இந்த அமைப்பு ஊழியர்களுக்கான சேவைகளை வழங்குவதில் பல்வேறு நடவடிக்கைகளை மாதந்தோறும் எடுத்து வருகிறது. குறிப்பாக பிஎப் பணம் எடுக்கும் நடைமுறையை மிகமிக எளிதாக்கியுள்ளது. தனியார் ஊழியர்கள் யாராக இருந்தாலும் தங்களின் வருங்கால வைப்பு நிதியை தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ள பல முன்மாதிரியான அம்சங்களையும் திட்டங்களையும் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. அண்மையில் 7 முக்கிய அறிவிப்புகளை இபிஎப்ஓ அமைப்பு வெளியிட்டது. அதில் பிஎப் தொகைகை ஏடிஎம் மூலம் எடுத்துக்கொள்ளலாம், யுபிஐ கணக்குகளுடன் இணைத்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்புகளை எல்லாம் வெளியிட்டது.

Add Zee News as a Preferred Source

அதேபோல் பிஎப் அட்வான்ஸ் எடுக்கும் நடைமுறையையும் துரிதப்படுத்தியுள்ளது. திருமணம், மருத்துவச் செலவு, வீடு கட்டுதல் போன்ற பல காரணங்களுக்கான பிஎப் அட்வான்ஸ் தொகையை ஊழியர்கள் தங்கள் வருமானத்தின் சேமிப்பில் இருந்து ஒரு பகுதியை எடுத்துக் கொள்ள முடியும். அதில் சில விதிமுறைகள் நடைமுறையில் இருந்தாலும் ஊழியர்களின் அவசர தேவையை பூர்த்தி செய்ய பிஎப் அட்வான்ஸ் பெரிதும் உதவுகிறது. அதேநேரத்தில் இதில் இருக்கும் குறைபாடுகள் சரிசெய்யப்பட்டதாக தெரியவில்லை என புலம்புகின்றனர். இபிஎப்ஓ அமைப்பிற்கு குறைகளை தெரிவித்து அதற்கான பதிலை பெறுவதில் சிரமம் இருப்பதாகவே ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இமெயில் மூலம் மட்டுமே புகார்கள் தெரிவித்து அதற்கான பதில் வரும் வரை காத்திருக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுப்புகின்றனர். வாடிக்கையாளர் சேவை மையம் இருப்பதாக அறிவித்துள்ள இபிஎப்ஓ, அதனை எப்போதும் தொடர்பு எல்லைக்கு அப்பாலே வைத்திருக்கிறது என குமுறுகின்றனர் ஊழியர்கள். உதாராணத்துக்கு தமிழ்நாட்டில் சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பகம் உள்ளன. அந்த அலுவலகத்தை தொடர்பு  கொள்ள சில தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றை தொடர்பு கொண்டால் எப்போதும் பிஸியாகவே இருக்கிறது. கோவை அலுவலகத்தில் கூட காலை நேரத்தில் ஒருசில கால்களை அங்கிருக்கும் ஊழியர்கள் அட்டன் செய்கின்றனர்.

சென்னை அலுவலகங்களைப் பொறுத்தவரை எப்போது அழைத்தாலும் பிஸியாகவே இருக்கிறது. ஒருவேளை லைன் கிடைத்து ரிங் சென்றாலும் அதை கால் அட்டன் செய்யப்படுவதில்லை. இதனால் வாடிக்கையாளர் சேவை மைய ஊழியர்கள் இருக்கிறார்களா? என்ற கேள்வி எழுகிறது. சரி, ஓரிரு நாட்கள் என்றால் பரவாயில்லை. எப்போது அழைத்தாலும் இந்த சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாக ஊழியர்கள் வருத்தமுடன் தெரிவிக்கின்றனர். எல்லோராலும் நேரடியாக சென்று தங்களது குறைகளுக்கு நிவாரணம் பெற முடிவதில்லை. தொலைதூரத்தில் இருப்பவர்கள் வாடிக்கையாளர் சேவை மையம் வழியாகவே தங்கள் குறைகளை சொல்லி அதற்கான தீர்வை பெற்றுக் கொள்ளலாம் என நினைக்கின்றனர். ஆனால் இபிஎப்ஓ அமைப்பு அதற்கான ஏற்பாடுகளை செய்து வைத்திருப்பது போல் தெரியவில்லை. வாடிக்கையாளர் சேவை மையத்தில் எப்போதும் பணியாளர்கள் இருக்கும் வகையில் இபிஎப்ஓ நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள ஊழியர்கள், அங்கு தெரிவிக்கும் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். 

மேலும் படிக்க | உங்களிடம் உள்ள ரூ.500... நல்ல நோட்டா, கள்ள நோட்டா... அடையாளம் காண உதவும் MANI செயலி

மேலும் படிக்க | ரூ.500 முடிவுக்கு வருகிறதா? தீயாய் பரவும் செய்தி.... RBI அளித்த முக்கிய அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News