EPFO EDLI Scheme: 3 முக்கிய விதிகளில் மாற்றம், PF உறுப்பினர்களுக்கு அதிகரிக்கும் வசதிகள், முக்கிய அப்டேட்

EPFO Update: EDLI திட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் என்ன? இபிஎஃப் உறுப்பினர்கள் இதன் மூலம் எவ்வாறு பயனடைவது? இந்த விவரங்கள் அனைத்தையும் இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 19, 2025, 04:57 PM IST
  • EDLI திட்டம் என்றால் என்ன?
  • EDLI திட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் என்ன?
  • முழு விவரத்தை இங்கே காணலாம்.
EPFO EDLI Scheme: 3 முக்கிய விதிகளில் மாற்றம், PF உறுப்பினர்களுக்கு அதிகரிக்கும் வசதிகள், முக்கிய அப்டேட்

EPFO EDLI Scheme New Rules: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), அதன் ஊழியர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டு (EDLI) திட்டத்தில் மூன்று முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது. இந்த மாற்றங்களின் முக்கிய நோக்கம், EPF உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு அதிக நிதி பாதுகாப்பை வழங்குவதும், இறப்பு கோரிக்கைகளின் செயல்முறையை எளிதாக்குவதும் ஆகும். இடிஎல்ஐ திட்டத்தில் ஏற்படும் இந்த மாற்றங்கள் காப்பீட்டுத் தொகையை அதிகரிக்கும், மேலும் உறுப்பினர்களின் குடும்பங்கள் முன்பை விட அதிக நிதிப் பாதுகாப்பைப் பெறும். 

Add Zee News as a Preferred Source

EDLI: திட்டவைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டு திட்டம்

EDLI திட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் என்ன? இபிஎஃப் உறுப்பினர்கள் இதன் மூலம் எவ்வாறு பயனடைவது? இந்த விவரங்கள் அனைத்தையும் இந்த பதிவில் காணலாம்.

EPF Members: இபிஎஃப் உறுப்பினர் ஒரு வருட சேவையை முடிப்பதற்குள் இறந்தாலும் குடும்பம் பயனடையும்

புதிய விதிகளின்படி, ஒரு புதிய EPF உறுப்பினர் பணியில் சேர்ந்த ஒரு வருடத்திற்குள் இறந்தாலும், அவரது குடும்பத்திற்கு குறைந்தபட்சம் ரூ.50,000 காப்பீட்டுப் பலன் கிடைக்கும். முன்னதாக, இதுபோன்ற சூழ்நிலையில் குறைந்தபட்ச தொகை நிர்ணயிக்கப்படவில்லை. EPFO வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரு EPF உறுப்பினர் ஒரு வருட தொடர்ச்சியான சேவையை முடிக்காமல் இறந்தால், அவரது குடும்பத்திற்கு குறைந்தபட்சம் ரூ.50,000 ஆயுள் காப்பீட்டுப் பலன் கிடைக்கும். இந்தத் திருத்தம் ஒவ்வொரு ஆண்டும் பணியின் போது ஏற்படும் 5,000 க்கும் மேற்பட்ட இறப்புகளில் குடும்ப உறுப்பினர்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

EPF Subscribers: இபிஎஃப் சந்தாதாரர்களின் பங்களிப்பு சில நாட்களுக்கு நிறுத்தப்பட்டிருந்தாலும், EDLI-யின் பலனைப் பெறுவீர்கள்

இரண்டாவது மாற்றம், EPF உறுப்பினர் பணியில் இருக்கும்போது இறந்துவிட்டாலோ, சில காரணங்களால் EPF-க்கான அவரது பங்களிப்பு சிறிது காலத்திற்கு நிறுத்தப்பட்டாலோ, அப்படிப்பட்ட நிகழ்வுகளுடன் தொடர்புடையது. முந்தைய விதிகளின்படி, பங்களிப்பு இல்லாத காலத்திற்குப் பிறகு ஒரு EPF உறுப்பினர் இறந்தால், அந்தக் குடும்பத்திற்கு EDLI திட்டத்தின் பலன் கிடைக்காது. இது சேவைக்கு வெளியே நிகழ்ந்த மரணமாகக் கருதப்பட்டது. ஆனால் புதிய விதிகளின் கீழ், கடைசி பங்களிப்பைப் பெற்ற 6 மாதங்களுக்குள் EPF உறுப்பினர் இறந்து, அவரது பெயர் நிறுவனத்தின் பதிவுகளில் நிலைத்திருந்தால், அவரது குடும்பத்தினர் EDLI திட்டத்தின் கீழ் காப்பீட்டுப் பலனைப் பெறுவார்கள்.

வேலை மாற்றத்தின் போது இடைவெளி இருந்தாலும் EDLI திட்டத்தின் பலனைப் பெறுவீர்கள்

மூன்றாவது பெரிய மாற்றம், வேலை மாற்றம் காரணமாக தங்கள் சேவையில் தற்காலிக இடைவெளி உள்ள EPF உறுப்பினர்களுக்கானது. பழைய விதிகளின்படி, ஒரு EPF உறுப்பினரின் சேவையில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் இடைவெளி இருந்தாலும், அது தொடர்ச்சியான சேவையாகக் கருதப்படவில்லை. மேலும் அவரது குடும்பத்தினரால் குறைந்தபட்சமாக ரூ.2.5 லட்சம் அல்லது அதிகபட்சமாக ரூ.7 லட்சம் காப்பீட்டுப் பலனைப் பெற முடியாத நிலை இருந்தது. புதிய விதியின்படி, இரண்டு வேலைகளுக்கு இடையே அதிகபட்சம் இரண்டு மாத இடைவெளி இருந்தாலும், அது தொடர்ச்சியான சேவையாகக் கருதப்படும். இது EDLI திட்டத்தின் கீழ் அதிகபட்ச காப்பீட்டுப் பலனைப் பெறுவதற்கான தகுதியை உறுதி செய்யும். இந்த மாற்றம் ஒவ்வொரு ஆண்டும் 1,000 -க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கும் என்று EPFO ​​நம்புகிறது.

EDLI திட்டம் என்றால் என்ன?

EPFO வின் ஊழியர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம் (EDLI) என்பது EPF திட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஊழியர்களை உள்ளடக்கிய ஒரு ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். இந்தத் திட்டம் 1976 ஆம் ஆண்டு இந்திய அரசால் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு EPF உறுப்பினர் பணியில் இருக்கும்போது இறந்தால், அவரது குடும்பத்திற்கு அதிகபட்சமாக ரூ.7 லட்சம் காப்பீட்டுப் பலன் கிடைக்கும்.

EPFO அல் தற்போது செய்யப்பட்டுள்ள இந்த மூன்று திருத்தங்கள் EDLI திட்டத்தை மிகவும் பயனுள்ளதாகவும் அனைவரையும் உள்ளடக்கிய வகையிலும் மாற்றியுள்ளன. பிப்ரவரி 28, 2025 அன்று நடைபெற்ற மத்திய அறங்காவலர் குழுவின் (CBT) 237வது கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட இந்த மாற்றங்கள், இறப்பு க்ளெய்ம் செயல்முறையை முன்பை விட எளிதாக்கும். இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | EPFO: PF கணக்கில் இருந்து முழு பணத்தையும் எடுக்கும் இளம் சந்தாதார்கள்... காரணம் இது தான்

மேலும் படிக்க | அகவிலைப்படி உயர்வு இன்று அறிவிப்பா? RBI மதிப்பீட்டால் ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ்... அதிகரிக்கும் டிஏ ஹைக்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News