)
EPFO Housing Advance: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. நீங்கள் ஒரு மனை, பிளாட் அல்லது வீடு வாங்க திட்டமிட்டு நிதி பற்றாக்குறையாக இருந்தால், இனி கடன் வாங்கவோ, யாரிடமும் பண உதவி கேட்கவோ அவசியம் இல்லை. இப்போது, நீங்கள் EPFO-விலிருந்து வீடு வாங்க முன்பணம் பெறலாம்.
இபிஎஃப் உறுப்பினர்களுக்கு பயனுள்ள இந்த தகவலை EPFO பகிர்ந்துள்ளது. வீடு வாங்க, இபிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் கணக்கிலிருந்து எளிதாகவும் பாதுகாப்பாகவும் பணத்தை எடுக்கலாம் என EPFO தெரிவித்துள்ளது. EPFO இதற்கு சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது. முழுமையான விவரங்களை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
EPFO தலைமையகத்தில் (டெல்லி) உள்ள அதிகாரி சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார். இபிஎஃப் உறுப்பினர்கள் ஒரு மனை வாங்க, வீடு கட்ட அல்லது வாங்க தங்கள் EPF கணக்கிலிருந்து முன்பணத்தை எடுக்கலாம் என்று அவர் விளக்கினார். முன்பணம் பெற உறுப்பினர் குறைந்தது ஐந்து ஆண்டுகள் இபிஎஃப் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். மேலும், அவரது கணக்கில் குறைந்தபட்சம் ₹1,000 பணியாளர் பங்களிப்பு இருப்பு இருக்க வேண்டும். மனை அல்லது வீடு, உறுப்பினர், அவரது வாழ்க்கைத் துணை அல்லது இருவர் பெயரிலும் கூட்டாக இருக்க வேண்டும்.
ஒரு மனைக்கு, EPF பங்களிப்புகள் செலுத்தப்பட்ட 24 மாத சம்பளத்தையோ அல்லது வட்டி உட்பட உங்கள் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட மொத்தத் தொகையையோ அல்லது நிலத்தின் மொத்தச் செலவையோ, எது குறைவாக உள்ளதோ அதை முன்பணமாகப் பெறலாம்.
வீடு வாங்க அல்லது கட்ட முன்பணம் எடுக்க விரும்பினால், EPF பங்களிப்புகள் செலுத்தப்பட்ட 36 மாத சம்பளத்தையோ அல்லது வட்டி உட்பட கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையையோ அல்லது வீட்டின் மொத்தச் செலவு அல்லது கட்டுமானச் செலவு, எது குறைவாக உள்ளதோ அதைப் பெறலாம்.
- உமங் செயலியைத் திறக்கவும்
- EPFO -வை சர்ச் செய்யவும்.
- ரெஸ் க்ளைம் என்பதை டேப் செய்யவும்.
- உங்கள் UAN எண்ணை உள்ளிடவும்
- உங்கள் பதிவு செய்யப்பட்ட எண்ணில் பெறப்பட்ட OTP ஐ உள்ளிடவும்
- உங்கள் UAN இல் சீட் செய்யப்பட்ட உங்கள் வங்கிக் கணக்கை உள்ளிடவும்.
- உங்கள் UAN-ல் ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர் ஐடிகள் இருந்தால், நீங்கள் எந்த உறுப்பினர் ஐடியிலிருந்து பணம் எடுக்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
-. உங்கள் முகவரி உட்பட தேவையான தகவல்களை நிரப்பவும்.
- க்ளெய்ம் வகை புலத்தில் படிவம்-31 ஐத் தேர்ந்தெடுக்கவும்.
- நீங்கள் முன்பணம் பெறுவதற்கான நோக்கத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- முன்பணத் தொகையை உள்ளிடவும்.
- அறிவிப்பு தேர்வுப்பெட்டியைக் கிளிக் செய்யவும்.
- OTP-யை நிரப்பி, சமர்ப்பிக்கவும்.
முன்பணம் தொகை சில நாட்களுக்குள் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். முக்கியமாக, முன்பணத்தைப் பெற நீங்கள் எந்த சான்றிதழ்கள், வங்கி பாஸ்புக்குகள் அல்லது காசோலைகளை சமர்ப்பிக்க வேண்டியதில்லை. இந்த முன்பணத்திற்கு நீங்கள் உமங் செயலி மற்றும் EPFO போர்டல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இருப்பினும், உங்கள் EPF கணக்கிலிருந்து முற்றிலும் தேவைப்பட்டால் மட்டுமே பணத்தை எடுக்க வேண்டும் என்று EPFO எச்சரிக்கிறது. ஏனெனில் இபிஎஃப் கணக்கில் அடிக்கடி பணத்தை எடுக்காமல், அப்படியே சேர விடுவது, உங்கள் முதுமைக்கு ஒரு பெரிய நிவாரணத்தை வழங்குகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ