சம்பளம் பெறும் ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட பிஎஃப் பணம் டெபாஸிட் செய்யப்பட்டுள்ளதா, அதில் உள்ள இருப்பு எவ்வளவு என பிஎஃப் கணக்கு தொடர்பான பல தகவல்களை அறிய விரும்பக் கூடும். நிறுவனம் பி.எஃப்-ல் பணம் போடுகிறதா இல்லையா, எவ்வளவு வட்டி வருகிறது, பிஎஃப் கணக்கின் இருப்பு என்ன, பழைய பிஎப் கணக்கு என்ன ஆனது என பல கேள்விகள் இருக்கலாம்.
உங்கள் பிஎஃப் கணக்கின் இருப்பைத் தொடர்ந்து சரிபார்த்துக்கொண்டால், இதுபோன்ற பல கேள்விகளுக்கான பதில்களைப் பெறலாம். PF கணக்கு இருப்பைச் சரிபார்ப்பது மிகவும் எளிதானது. PF இருப்பைச் சரிபார்க்க சில எளிய வழிகளைத் தெரிந்து கொள்வோம்.
உமங் செயலி
உமங் செயலி மூலம் உங்கள் பிஎஃப் இருப்பைச் சரிபார்க்கலாம். பல்வேறு அரசு சேவைகளை, இருந்த இடத்தில் இருந்த படியே அணுகுவதற்காக உமங் செயலியை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. உமாங் செயலியைப் பயன்படுத்தி நீங்கள் பிஎஃப் கிளைம்களை சமர்ப்பிக்கலாம், உங்கள் EPF பாஸ்புக்கைப் பார்க்கலாம். உங்கள் க்ளைய்ம் நிலை என்ன என்பதை கண்காணிக்கலாம். இதைச் செய்ய, செயலியில் உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிட்டு ஒரு முறை பதிவு செய்ய வேண்டும்.
EPFO போர்டல்
EPFO இணையதளத்திற்குச் சென்று, பணியாளர்கள் பிரிவில் கிளிக் செய்து, உறுப்பினர் பாஸ்புக்கைக் கிளிக் செய்யவும். உங்கள் UAN மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடுவதன் மூலம் நீங்கள் PF பாஸ்புக்கை அணுகலாம். இதில், ஓப்பனிங் மற்றும் க்ளோசிங் பேலன்ஸ் மற்றும் பணியாளர் மற்றும் முதலாளியின் பங்களிப்பு ஆகியவை காட்டப்படும். PF பரிமாற்ற விபரம், PF கணக்கிற்கு கிடைக்க வட்டியின் அளவும் தெரியும். பாஸ்புக்கிலும் EPF இருப்பைக் காணலாம்.
மிஸ்ட் கால அழைப்பு
உங்கள் மொபைல் எண் UAN எண்னுடன் இணைக்கப்பட்டு உடன் பதிவு செய்யப்பட்டிருந்தால், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 9966044425 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் செய்து தகவலைப் பெறலாம். இந்த எண்ணில் இருந்து மிஸ்ட் கால் அழைப்பைச் செய்த பிறகு, EPFO அமைப்பிடம் இருந்து எஸ் எம் எஸ் வரும், அதில் உங்கள் PF கணக்குகளின் இருப்பைக் காண்பீர்கள்.
எஸ்எம்எஸ் மூலம் தகவல்
7738299899 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் உங்கள் EPF கணக்கு இருப்பு மற்றும் உங்கள் கணக்கில் சமீபத்திய பங்களிப்பை நீங்கள் அறியலாம். இதற்கு பதிவு செய்யப்பட்ட எண்ணிலிருந்து EPFOHO UAN ENG என டைப் செய்து எஸ்எம்எஸ் செய்தியை அனுப்ப வேண்டும். இங்கே ENG என்பது ஆங்கிலத்தைக் குறிக்கிறது. நீங்கள் வேறு மொழியில் தெரிந்து கொள்ள விரும்பினால், அந்த மொழியின் முதல் மூன்று எழுத்துக்களைத் தட்டச்சு செய்யவும் ( தமிழுக்கு TAM, மராத்திக்கு MAR, இந்திக்கு HIN ).
மேலும் படிக்க | SWP: ஓய்வுக்கு பிறகு மாதம் ரூ.1 லட்சம் வருமானம் கிடைக்க உதவும் பரஸ்பர நிதியம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









