)
EPFO: சமீபத்திய ஆண்டுகளில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு கூடுதல் வசதியை ஏற்படுத்தும் வகையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் சில சந்தர்ப்பங்களில் முன்பண க்ளெய்ம்களுக்கு ஆட்டோ செட்டில்மெண்ட் என்னும் க்ளெய்ம் தீர்வு முறையை அறிமுகப்படுத்துவதும் அடங்கும்.
ஆட்டோ செட்டில்மெண்ட் முறைக்கான வரம்பு
தற்போது சுமார் 60% க்கும் மேற்பட்ட க்ளெய்ம் கோரிக்கைகள் ஆட்டோ செட்டில்மெண்ட் முறையில் செயல்படுத்தப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே கடந்த வாரம் மக்களவையில் தெரிவித்த நிலையில், இந்த முறையில் பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை திரும்பப் பெறுவதற்கான வரம்பை, ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோடிக்கணக்கான உறுப்பினர்களுக்கு பலன் அளிக்கும் திருத்தம்
PF கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதற்கான ஆட்டோ செட்டில்மெண்ட் க்ளெய்ம் வரம்பை அதிகரிக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் நல அமைச்சக செயலர் சுமிதா தாவ்ரா கூறியதாக கடந்த திங்களன்று ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த திருத்தம் கோடிக்கணக்கான உறுப்பினர்களுக்கு பலன் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பரிந்துரை இப்போது மத்திய அறங்காவலர் குழுவின் ஒப்புதலுக்கு செல்லும்.
பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை எடுக்கும் புதிய முறை
EPFO தற்போது ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் அல்லது யுபிஐ மூலம் பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை எடுக்கும் புதிய முறையை அறிமுகப்படுத்தத் தயாராகி வரும் நிலையில், என்பிசிஐ செய்த பரிந்துரையை அமைச்சகம் அங்கீகரித்ததாக சுமிதா தாவ்ரா கடந்த வாரம் குறிப்பிட்டார். இந்த ஆண்டு மே அல்லது ஜூன் மாத இறுதிக்குள் UPI மற்றும் ATM மூலம் உறுப்பினர்கள் PF பணத்தை எடுக்க முடியும்.
பிஎஃப் பணத்தை கிளெய்ம் செய்வதற்கான நிபந்தனைகள்
PF பணத்தை திரும்பப் பெறுவதற்கான (PF Withdrawal Rules) சரிபார்ப்பு முறைகளும் 27 என்ற அளவில் இருந்து 18 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும், அதை 6 என்ற அளவில் குறைக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாகவும் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. EPFO உறுப்பினர்களுக்கு பிஎஃப் பணத்தை கிளெய்ம் செய்வதற்கான நிபந்தனைகள் குறித்து வழிகாட்டவும், உறுப்பினர்கள் தகுதியற்ற க்ளெய்மக்ளை தாக்கல் செய்யாமல் இருப்பதை உறுதி செய்யவும் சில சரிபார்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஜூன் முதல் ATM மூலம் PF பணத்தை திரும்பப் பெறும் வசதி
UPI, ATM ஆகியவற்றின் மூலம் உடனடி PF திரும்பப் பெறும் வசதியை ஜூன் முதல், EPFO அறிமுகப்படுத்துகிறது முன்னதாக, முதன்முதலில் 2020 ஏப்ரலில், சிகிச்சை, மருத்துவமனை காரணங்களுக்கான முன்பணங்களுக்கு ஆட்டோ செட்டில்மெண்ட் க்ளெய்ம் தீர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் திருமணம், கல்வி மற்றும் வீட்டு கட்டுதல் தொடர்பான கோரிக்கைகளை உள்ளடக்கியதாக இது விரிவுபடுத்தப்பட்டது. EPFO முன்பண உரிமைகோரல் வரம்பை ரூ.50,000 இலிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தியது.
க்ளெய்களுக்கான ஆட்டோ செட்டில்மெண்ட் தீர்வுகள்
கல்வி, திருமணம் மற்றும் வீட்டுவசதி ஆகிய 3 தேவைகளுக்கான முன்பண க்ளெய்களுக்கான ஆட்டோ செட்டில்மெண்ட் தீர்வை EPFO அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் 99.31% க்கும் மேற்பட்ட க்ளெய்ம்கள் இப்போது ஆன்லைன் முறையில் பெறப்பட்டு மூன்று நாட்களுக்குள் செயல்படுத்தப்படுகின்றன என கூறப்படுகிறது.
சாதனை அளவை எட்டிய ஆட்டோ செட்டில்மெண்ட் க்ளெய்ம் தொகை
“தற்போது அங்கீகரிக்கப்படும் முன்பண கோரிக்கைகளில் 60% ஆட்டோ செட்டில்மெண்ட் முறையிலேயே செயல்படுத்தப்படுகின்றன. ஆட்டோ செட்டில்மெண்ட் முறை வரும் க்ளெய்ம்கள் மூன்று நாட்களுக்குள் செயல்படுத்தப்படுகின்றன. நடப்பு நிதியாண்டில் 06.03.2025 நிலவரப்படி EPFO வரலாற்று உச்சமாக 2.16 கோடி என்ற அளவை ஆட்டோ செட்டில்மெண்ட் க்ளெய்ம் தொகை எட்டியுள்ளது,” என்று கரண்ட்லாஜே கடந்த மார்ச் 17 அன்று விளக்கினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ