)
EPF Account: இபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அவ்வப்போது பல வித சந்தேகங்களும் குழப்பங்களும் வருகின்றன. சாத்தியமான கேள்விகளுக்கு இபிஎஃப்ஓ அவ்வப்போது பல்வேறு சேனல்கள் மூலம் பதிலளித்து தெளிவை அளிக்கின்றது. இபிஎஃப் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யவில்லை என்றால் என்ன ஆகும்? இந்த கேள்வி பலரிடம் உள்ளது. இதற்கான விடைடையும், இது தொடர்பான சில விவரங்களையும் இந்த பதிவில் காணலாம்.
EPF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இது ஒரு முக்கிய செய்தியாக இருக்கும். ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கு (EPF) உறுப்பினர்கள் அளிக்கும் பங்களிப்புகளை நிறுத்துவது அவர்களது பணி ஓய்வுக்கு பிறகான காலத்தின் பாதுகாப்பை கெடுக்கும். இது ஓய்வூதிய வளர்ச்சியைத் தடுக்கும். இது முறையாக நிர்வகிக்கப்படாவிட்டால் நீண்ட கால சேமிப்பைப் பாதிக்கும்.
ஒரு ஊழியர் EPF கழிக்கப்படும் வேலையை விட்டு வெளியேறும்போது, அல்லது EPF கழிக்கப்படாத வேலையில் சேரும்போது, அவரது இபிஎஃப் பங்களிப்புகள் நின்றுவிடும். இருப்பினும், அவரது EPF கணக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு செயலில் இருக்கும். மேலும் அந்தக் காலகட்டத்தில் தொடர்ந்து வட்டியும் கிடைக்கும்.
36 மாதங்களுக்கு (மூன்று ஆண்டுகள்) கணக்கில் எந்த பங்களிப்பும் செய்யப்படாவிட்டால், கணக்கு செயலற்றதாகிவிடும். அதுவரை, வட்டி நடைமுறையில் உள்ள வட்டி விகிதத்தில் தொடர்ந்து கணக்கில் சேரும். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, புதிய வட்டி செலுத்துதல்கள் நிறுத்தப்படும். இருப்பினும், உங்கள் வைப்புத்தொகை பாதுகாப்பாக இருக்கும், மேலும் உங்கள் தகுதியைப் பொறுத்து நீங்கள் விரும்பும் போதெல்லாம் அதை எடுக்கலாம். இதன் பொருள் பணம் பாதுகாப்பாக இருக்கும், ஆனால் பெருகாது.
ஒருவர் இரண்டு மாதங்களுக்கும் மேலாக வேலையில்லாமல் இருந்தால், அவர் EPF தொகையை திரும்பப் பெறலாம். இருப்பினும், நீங்கள் ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியான பணிக்காலத்தை முடிக்கவில்லை என்றால், EPF -இல் இருந்து எடுக்கப்படும் தொகைக்கு வரி விதிக்கப்படும். ஊழியர் மற்றும் நிறுவனத்தின் பங்களிப்புகள் மற்றும் அவற்றில் ஈட்டப்படும் வட்டி என இரண்டுக்கும் வருமானத்திற்கு ஏற்ப வரி விதிக்கப்படும். இருப்பினும், ஊழியர் பணத்தை கணக்கில் வைத்திருந்து, அது தொடர்ந்து வட்டியைப் பெற்றால், அதற்கு வரி விதிக்கப்படாது.
ஒருவர் வேலைகளை மாற்றும்போது, அதை மூடுவதை தவிர்த்து EPF கணக்கை மாற்றுவது நல்லது. ஒரு யுனிவர்சல் கணக்கு எண் (UAN) மூலம், உங்கள் அனைத்து EPF கணக்குகளையும் இணைத்து, EPFO வலைத்தளம் மூலம் நிலுவைகளை எளிதாக மாற்றலாம். இது உங்கள் சேவைத் தகவல்களை ஒரே இடத்தில் வைத்திருக்கிறது, தொடர்ச்சியான வரிச் சலுகைகளை உறுதி செய்கிறது மற்றும் உங்கள் சேமிப்பு வளர அனுமதிக்கிறது.
EPF இல் பங்களிக்காமல் இருப்பது உங்கள் நீண்டகால நிதி தொகுப்பையும் ஓய்வூதிய நிதியையும் பலவீனப்படுத்தும். வட்டி மற்றும் வரி சேமிப்புகளை இழப்பது உங்கள் ஓய்வூதிய நிதியை கணிசமாகக் குறைக்கும். உங்கள் KYC அல்லது வங்கி விவரங்கள் புதுப்பிக்கப்படாவிட்டால் பழைய அல்லது மறந்துபோன EPF கணக்குகளில் இருந்து பின்னர் பணம் எடுப்பது கடினமாக இருக்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ